நிச்சயம் மரபு முறையில் வீடு கட்ட நினைக்கும் அத்தனை பேரும் இந்த கட்டிடங்களை நிச்சயம் பார்வையிடவேண்டும் உங்களுடைய சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் உங்கள் கண் முன்னே காணலாம்.
புவிதம் பள்ளி

Learn Share Collaborate
நிச்சயம் மரபு முறையில் வீடு கட்ட நினைக்கும் அத்தனை பேரும் இந்த கட்டிடங்களை நிச்சயம் பார்வையிடவேண்டும் உங்களுடைய சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் உங்கள் கண் முன்னே காணலாம்.
framed structure கட்டுமான முறையில் வீடோ அல்லது கடைகளோ கட்டும்போது படத்தில் உள்ளது போல பெரிய அளவு லிண்டேல் பீம் அமைப்புகளை தவிருங்கள்.கூரை மற்றும் அதற்கு மேல் வரும் சுவரின் எடை ஏற்கனவே ரூப் பீம்கள் மூலமாக பில்லருக்கு சென்றுவிடும்.லிண்டேல் பீம் அமைப்பு ஜன்னலுக்கு மேல் உள்ள செங்கல்லை தாங்கினால் போதுமானது.அதுதான் அதனுடைய வேலை.அதற்கு cut லிண்டேல் பீம் போதுமானது.
ஜக்கியை காட்டை அழித்துவிட்டார்,வன விலங்கு வழிதடத்தை அளித்துவிட்டார், என்று கூச்சல் போடுகிறீர்களே அதை நான் தவறு என்று சொல்லவில்லை ஆனால் நீங்கள் வீட்டு மனை இடம் வாங்கி இருக்கிறீர்களே அது விவசாய பூமியா விவசாயத்துக்கு பயன்படாத பூமியா?…
90 சதமான மக்கள் கேரளாவில் வீடு கட்டும்போது இதுபோல சுவர் எழுப்பும்போதே கதவு மற்றும் ஜன்னலகளின் நிழவுகளை வைத்துவிடுகிறார்கள்.நானும் வைத்துவிடுகிறேன்.காரணம் மீண்டும் உடைக்க வேண்டிய தேவை இல்லை.மற்றும் சுவர் கட்டும் போது தூக்கு (plumb) விட வேண்டிய தேவை இல்லை.கட்டுமான செலவு குறைகிறது.
சென்னையில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் அண்மையில் நடைபெற்ற ஐம்பூத விழாவில், சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் கலந்து கொண்டு பேசினார். வீட்டுக் கூரைகளில் வெள்ளைப் பூச்சு பயன்படுத்துவதால் ஏற்படும் பயன் பற்றி அவர் குறிப்பிட்டுப் பேசினார்.�“புவி வெப்பமடைதல் பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது.
இதைத் தடுக்க வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். வீட்டின் மேற்கூரையில் வெள்ளைப் பூச்சு பூசுவதன் மூலம் நாம் உதவ முடியும். வெள்ளைப் பூச்சு வெப்பத்தைக் கிரகிக்காது என்பதால், வீடு உஷ்ணமாவது கணிசமாகக் குறையும். வீட்டுக்குள் வெப்பம் ஊடுருவதைத் தவிர்க்க முடியும். இதனால் வீட்டில் அனல் அடிப்பது குறையும்.
வீடுகளில் ஃபேன், ஏ.சி. பயன்பாடு குறையும்.இதன்மூலம் மின் கட்டணம் சிக்கனமாகும் .இதெல்லாம் நேரடி பயன்கள்.
ஏ.சி. பயன்பாடு குறைவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் நாம் உதவ முடியும். வீட்டின் மேற்கூரை மட்டுமின்றி, வீடு முழுவதும் வெள்ளைப்பூச்சில் இருந்தால் இன்னும் நல்லது’’ என்று ரமணன் வலியுறுத்திப் பேசினார்
தற்சார்பான வீடுகள் | வீடு கட்டுவது எளிதானது
வெறும் புளித்த மண் சுட்ட செங்கல்
இதுதான் சென்னை முதல் கன்யாகுமரி வரை பரவலாக பயன் படுத்த பட்டுள்ள மரபு தொழில்நூட்பம். பழைய காரை வீடு என்பார்களே அதை தேடிப்பாருங்கள்
கடந்த 20-30 ஆண்டுகளாக மக்கள் “நவீன வீடுகளின்” மேல் நம்பிக்கை மேலும் மோகம் கொண்டு உள்ளனர். அனால் “நவீன வீடுகளின்” கூரை வடிவமைப்பு வீட்டின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை. கடும் வெயில் காலத்தில் வீட்டின் உட்புறம் “கடும் வெப்பமாகவும்”, குளிர்/மழை காலத்தில் வீட்டின் உட்புறம் “கடும் குளிராகவும்”, காற்றோட்டம் இல்லாமல் உள்ளது.