Category: மரபு கட்டுமானம்

பனை மரம்- ஒட்டுப்பலகை கூரை

பனை மரம்- ஒட்டுப்பலகை கூரை

பனை மரம்- ஒட்டுப்பலகை கூரை.. மாறுபட்ட மெட்ராஸ் மேல்தளம் போன்றது.

• முழு பனைமரத்தை கொண்டு உத்திரம் அமைத்து,அதன்மேல் ஒட்டுப் பலகை பின் சுருக்கி.

•இது சாதாரண காண்கிரிட் கூரையை விட இரு மடங்கு அதிக வலிமை ஆகும்.

Continue reading

மூங்கில் காங்கிரீட்

bamboo reinforced roofing மூங்கில் காங்கிரீட்

bamboo reinforced roofing

மூங்கில் காங்கிரீட்

அதாவது மூங்கில் சட்டங்கள் அடிக்கப்பட்டு அதன் மீது மூங்கில்கள் பிளந்து நெருக்கமாக அடிக்கப்பட்டு அதன்மீது கோழிவலை கொண்டு 2 அங்குலம் கான்க்ரீட் போடப்பட்டு உள்ளது.

Continue reading

உள்பக்கம் செங்கல் வெளிப்பக்கம் கருங்கல்

உள்பக்கம் செங்கல் வெளிப்பக்கம் கருங்கல்

லாரிபேக்கரின் கட்டிட முறைகளையும் அவருடைய சிந்தனையையும் சொல்லி கொண்டே இருந்தாலும் அது நிச்சயம் முடியாத,தீராத ஒன்று…

அவருடைய சுவர் கட்டுமான அமைப்பில் முக்கிய பங்கு இந்த காம்போசிட் சுவருக்கு உண்டு.பல கட்டிட சுவர்களை பேக்கர் இம்முறையில் கட்டி உள்ளார்.

Continue reading

சுடப்படாத மண் கல் வீடு

சுடப்படாத மண் கல் வீடு

பெங்களூரை சேர்ந்த siddappa setty அவர்களுடைய சுழலுக்கேற்ற 2200 சதுரடி வீடு.

வீடு முழுக்க சுடப்படாத adobe மண் கற்களை கொண்டே கட்டப்பட்டு உள்ளது.

சுண்ணாம்பு மற்றும் மண் கலந்த கலவை கொண்டு கட்டப்பட்டு அதனைக்கொண்டே உள் பக்கமும் வெளி பக்கமும் பூச்சு வேலை செய்யப்பட்டு உள்ளது.

Continue reading

சாதாரண ஆக்ஸைடு சிமெண்ட் தளம்

சாதாரண ஆக்ஸைடு சிமெண்ட் தளம்

நம் வீடுகளில் பயன்படுத்தும் சேரமிக் டைல்ஸ்களால் வீட்டில் பெண்களுக்கு மூட்டு வலி,மற்றும் முதியோர்களுக்கு வழுக்கி விடுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதற்கு மிக சிறந்த செலவு குறைந்த மாற்று இந்த ஆக்ஸைடு வண்ணங்களை பயன்படுத்தி போடப்படும் சிமெண்ட் தளம் ஆகும்

Continue reading

இன்னுமொரு அழகிய பாரம்பரிய படைப்பு

இன்னுமொரு அழகிய பாரம்பரிய படைப்பு

ஆர்க்கிடெக்ட் அகிலா வெங்கட் அவர்களின் வீடு இது.முழுக்க சுடப்படாத மண் கற்கள்,மண் கலவை மற்றும் கருங்கல், கொண்டே வீடு முழுக்க கட்டப்பட்டு உள்ளது.
கூரை அமைப்புக்கு தார் அட்டை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
குளியலறை மற்றும் சமயலரைகளில் கூட டைல்ஸ் பயன்பாடு இல்லை
தரைக்கு டெரகாட்ட டைல்ஸ்.

Continue reading

வீடுகள் என்பது வெறும் சுவர்கள் மட்டும் அல்ல

வீடுகள் என்பது வெறும் சுவர்கள் மட்டும் அல்ல

வீடுகள் என்பது வெறும் சுவர்கள் மட்டும் அல்ல.

கேரளத்தில் பல பரம்பரைகளாக மரபுவழி மாறாமல் வாழ்ந்துவரும் குடும்ப வீடே நாலுகெட்டு வீடு. திருச்சூர், ஆலப்புழா, தளசேரி போன்ற இடங்களில் இந்த நாலு கெட்டு வீடுகளை அதிகமாகப் பார்க்கலாம்.

நான்கு அறைகளைக் கொண்டும் வீட்டின் நடுப் பகுதியில் நடு முற்றம் கொண்டும் இந்த வீடு அழகாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. முன்பகுதியில் மரத் தூண்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும்.

முன்பகுதியில் விருந்தினர்கள் அமர்வதற்காக மரப் பலகையால் ஆன இருக்கை வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த இருக்கை வளைவான மரப்பகுதி கொண்டு அழகாக்கப்பட்டிருக்கும்.


இதை ‘சாருபடி’ என அழைக்கிறார்கள். இந்த வீட்டின் உள்பகுதி வடக்கினி (வடக்கு), படிஞாற்றுனி (மேற்கு), கிழக்கினி (கிழக்கு), தெக்கினி (தெற்கு) ஆகிய நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு பகுதிகளும் நடுமுற்றத்தில் வந்து முடியும். பொதுவாகக் கேரள வீடுகளில் முன் வாசலுக்கு நேர் எதிராகப் பின் வாசல் இருக்கும். பெரும்பாலும் எல்லா அறைகளிலும் ஜன்னல்கள் இருக்கும். இந்த நடுமுற்றம் மூலம் வெளிச்சமும் காற்றும் வீட்டுக்குள் தாராளமாக வரும்.

வீட்டைச் சுற்றி சுற்று வராந்தாவும் இருக்கும். இந்த வராந்தா முழுவதையும் மர வேலைப்பாடுகளால் ஆன சாருபடி சுற்றியிருக்கும். வீட்டு உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்காக ஒரு குளம் இந்த வீட்டுக்கு அருகிலேயே இருக்கும். இந்தக் குளத்தை அணுகுவதற்கான பாதை இந்தச் சுற்று வராந்தாவிலிருந்து பிரிந்துசெல்லும்.

ஜன்னல்களும் கதவுகளும் பலா, மா, தேக்கு ஆகிய மரங்களின் பலகைகளால் உருவாக்கப்படும். இந்த நாலுகெட்டு வீடுகளில் சமையலறையிலிருந்து நீர் எடுக்கக் கூடிய வகையில் ஒரு கிணறு இருக்கும். இந்தக் கிணற்றின் அடித்தளத்தில் நெல்லிப் பலகை அமைந்திருக்கும். அந்தப் பலகை 30-40 வருடங்கள் ஆனாலும் சேதமடையாமல் உறுதியாக இருக்கும்.

நடுமுற்றத்திலும் வேலைப்பாடுகள் கொண்ட நான்கு மரத் தூண்களால் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். நடுவில் துளசி மாடம் இருக்கும். வீட்டின் உள்கட்டமைப்பு பாரம்பரியம் மாறாமல் பிரம்மாண்டமாய் அமைந்திருப்பது வியக்கச்செய்கிறது. எல்லோரும் கூட்டுக் குடும்பங்களாக வாழ்வதற்கே இந்தக் கட்டமைப்பில் வீடுகள் கட்டப்பட்டன.

நாலுகெட்டு வீடு போலவே எட்டு அறைகளும் இரண்டு நடுமுற்றமும் கொண்டு அமைக்கப்பட்டவை எட்டுக்கெட்டு வீடுகள் எனவும், பதினாறு அறைகளும் நான்கு நடுமுற்றமும் கொண்டு அமைந்திருப்பது பதினாறுகெட்டு வீடு என்றும் அழைக்கப்படுகிறது.கேரள வீடுகளே தனி அழகு. இயற்கைச் சூழல் அழிந்துவரும் இந்தக் காலகட்டத்தில் இயற்கையோடு இணைந்து வாழ நாலு கெட்டு வீடுகளே சிறந்தவை

தொடரும்…
ஹரி