தென்னைமரத்தை முறையாக பராமரிப்பது எப்படி?
கற்பதரு என்று அழைக்கப்படும் தென்னை மரத்தை மிகவும் சரியான முறையில் பேணுவது அல்லது வளர்ப்பது மிகவும் அவசியமாகும் அதற்கான காரணம் பலவும் உண்டு. நானறிந்த சிலவற்றை உங்களிடம் பகிர்கிறேன் அதற்கான பதிவே இது..
தென்னை மரங்களுக்கு வருடத்துக்கு இரண்டு முறை சுண்ணாம்பு மற்றும் செம்மண் கொண்டு மேல்பூச்சு பூசுவோம். தை மாதம் ஒரு முறையும்,ஆடியில் ஒருமுறையும். இது வழக்கமான ஒரு நடைமுறை.
மனிதர்களாகிய நமக்கு வரும் நோய்களுக்கு இரும்பு, சுண்ணாம்பு சத்து குறைபாடு என்பதை நன்கு அறிவோம். மனிதர்கள் போலவே மரங்களுக்கும் அத்தகைய குறைபாட்டை போக்கவே இரும்புச்சத்து நிறைந்த செம்மண்ணும் கால்சியம் சத்து நிறைந்த சுண்ணாம்பையும் மரத்திற்கு பூசி மரத்திற்கு ஊட்டச்சத்தை வழங்கும் ஒரு எளிய மரபான முறையாகும்.
இவ்வாறே மண் இரும்பு ஆணியைக் கொண்டு மரத்தின் வேர்ப்பகுதியில் அடித்து விடுவதுண்டு. கொடுவாள் மற்றும் கதிர்அறுக்கும் கருக்கு அரிவாள் கொண்டு மரத்தை காயப்படுத்தும் பழக்கமும் உண்டு இரும்பால் ஆன பொருட்களை பயன்படுத்த இதில் உள்ள பெர்ரஸ் அயனியை கிரகிக்கும் தன்மை தென்னை மரத்திற்கு உண்டு….