ஊட்டமேற்றிய ஆட்டு எரு தயாரிக்கும் முறை
ஊட்டமேற்றிய ஆட்டு எரு

Learn Share Collaborate
ஊட்டமேற்றிய ஆட்டு எரு தயாரிக்கும் முறை
ஜீவாமிர்தம் என்பது மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை பெருக்க உதவும் பொருள். அனைத்து வகை மண்ணையும் சத்துநிறைந்த மண்ணாக மாற்றிவிடுகின்றது
பூச்சிகளையு நோய்களையும் கட்டுப்படுத்துவதற்கான இடுபொருட்கள்
நீம் அஸ்திரம் (வேம்பு அஸ்திரம்)
பட்டம் பார்த்து பயிர் செய் என்பது நமது முன்னோர்களின் அனுபவ கூற்று.. இதை
நமது அனைத்து விவசாயிகளும் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் நமது முன்னோர் சொல்லி கொடுத்து சென்ற இயற்கை யுடன் வாழ்ந்த விவசாயத்தை செய்ய மறுக்கின்றனர்.
மண்ணை சோதிக்கும் போது மண்சோதனை முடிவுகள் பாஸ்பேட் உள்ளது என்று கூறும் ஆனால் அவை கிடைக்கப் பெறாத நிலையில் இரு துகள் மற்றும் முன்று துகள் நிலையில் உள்ளது. வனத்தில் உள்ள மண்ணிலும் ஒரு துகள் பாஸ்பேட் இருப்பதில்லை. இரு துகள் மற்றும் முன்று துகள் பாஸ்பேட் மட்டுமே இருக்கிறது. வனத்தில் உள்ள தாவரத்தின் ஒரு இலையை எடுத்துக்கொண்டு ஆய்வகத்தில் சோதனை செய்தால் அந்த தாவரத்தில் பாஸ்பேட் குறைபாடில்லை என்றே முடிவுகள் கூறும். அதாவது அந்த தாவரத்திற்கு பாஸ்பேட் கிடைத்துள்ளது, இதை வேர்பகுதிக்கு கிடைக்கச் செய்தது யார்? அவர்களே இரு துகள் மற்றும் மூன்று துகள் பாஸ்பேட்டை ஒரு துகள் பாஸ்பேட்டாக பிரித்துள்ளார்கள் யார் அவர்கள்?
இந்திய தத்துவத்தின் படி உயிரினங்களின் உடல் (தாவரங்கள் உட்பட) பஞ்ச பூதங்களால் ஆனது. இந்த பஞ்ச பூதங்கள் மேலும் 108 தனிமங்களாக பிரிகிறது. தற்கால விஞ்ஞானத்தின் மூலம் சில அடையாளம் காணப்படாத மூலப்பொருட்கள் செடியில் எங்கு உள்ளது என்று கண்டறிய முடியவில்லை ஆனால இந்ததிய தத்துவம் 5000 ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்கள் 108 தனிமங்களால் ஆனது என்பதை கூறியுள்ளது.
பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் பஞ்ச பூதங்களின் உருவாக்கப் பட்டுள்ளன. தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், நுண்ணுயிர்கள் என அனைத்தும் பஞ்ச பூதங்களால் ஆனது. இவை நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஐந்து பூதங்களாக உள்ளன.