JADAM method of natural farming

JADAM method of natural farming

இயற்கை விவசாயத்தில் கொரியா வகை ஒன்று உண்டு.
JADAM method of natural farming என்று பெயர்.
நிறைய விஞ்ஞானப் பூர்வமான விளக்கம் அங்கே உண்டு.
நான் அதை கொஞ்சம் படித்து பார்த்திருக்கிறேன்.
பேரூட்டச்சத்துகள்,நுண்ணூட்டச்சத்துகள் பற்றி நிறைய அதில் பேசப் படுகிறது.
பொதுவாக பேரூட்டச்சத்துகளை பயிர்கள் மண்ணில் இருந்து எடுப்பதைவிட காற்று, நீர், ஆகாயம் ஆகிய பூதங்களே அதிக அளவில் கொடுக்கிறது.
ஆக மண்ணில் இருந்து எடுக்கப் படுவதை விவசாய கழிவுகள் பெரும்பாலும் ஈடு செய்து விடும்.
அதனால் இந்த சத்துக்கள் குறைபாடு நிவர்த்தி செய்ய படுகிறது.
ஆனால் விளைபொருள் வழியாக மண்ணில் இருந்து வெளியே போகும் நுண்ணூட்டச்சத்துகள் ஈடு செய்யப் படுவதில்லை.
நுண்ணூட்டச்சத்துகள் மிகக் குறைந்த அளவில் தான் பயிர்கள் எடுத்துக் கொண்டாலும் அது காலப்போக்கில் தட்டுப்பாடு ஏற்படும்.
இந்த இழப்பை ஈடு செய்ய JADAM ஒரு அற்புதமான வழியை சொல்கிறது.
கடல் நீர் அனைத்து நுண்ணூட்டச்சத்துகளையும் உள்ளடக்கியதாக உள்ளது.
அதனால் இயற்கை இடுபொருள்களை தயாரிக்கும் போது கொஞ்சம் கடல்நீரை சேர்க்க சொல்கிறது.
அதாவது 200லிட்டர் கரைசல் தயாரிப்பில் 100 ml அளவுக்கு கடல் நீரை சேர்த்து வந்தால் மண்ணில் இருந்து எடுக்கப் பட்ட நுண்ணூட்டச்சத்துகள் ஈடு செய்யப் முடியும் என சொல்கிறார்கள்.
கடல் நீர் எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்பதால் அதற்கு பதிலாக 100 கிராம் கடல் உப்பை சேர்க்கலாம் என
பரிந்துரை செய்யப் படுகிறது.
இந்த விளக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதனால் ஜீவாமிர்தம் தயாரிப்பில் நான் 100 கிராம் கடல் உப்பை சேர்த்து விடுகிறேன்.
இதை நீங்களும் செய்து பாருங்கள்.