புளி சாகுபடி

புளி சாகுபடி

டேமரின்டஸ் இன்டிகா என்று தாவரவியலாளர்களால் அறியப் படும் புளியானது லெகுமினே சியே என்ற தாவரக் குடும் பத்தைச் சார்ந்த ஒரு வெப்ப மண்டல பயிராகும் . ஆப்பிரிக் காவைத் தாயகமாகக்கொண்ட புளியானது உலகம் முழுவது முள்ள வெப்ப மண்டலப் பகுதிகளிலும் , வறண்ட பகுதிகளிலும் அதிகமாகக் காணப்படுகின்றது . ‘ டேமரின்ட் ‘ என்ற ஆங்கிலப் பெயருக்கு ‘ இந்தியப் பேரிச்சை ‘ என்று பொருள் . கிரேக்கர்களும் , எகிப்தியர்களும் நான்காம் நூற்றாண்டிலேயே புளியைப் பயன்படுத்தி வந்துள்ளனர் .
வளரியல்பு ;
வெப்ப மண்டலப் பயிரான புளியானது 20 மீ உயரம் வரை வளரும் மரமாகும் . மரத்தின் பட்டைகள் நீளவாக்கில் பிளவுகளுடன் காணப்படும் . இலைகள் கூட்டிலைகளாகவும் , சிற்றிலைகள் காம்பு இல்லாமலும் காணப்படும் . மலர்கள் கொத்துகளாக மஞ்சள் நிறத்திலும் , இதழ்கள் வெளிறிய வெள்ளை நிறத்தில் சிவப்புக் கோடுகளுடனும் காணப்படும் . பழங்கள் 3-10 விதைகள் உடைய தாகவும் , சற்று வளைந்தும் இருக்கும் . பழத்தின் சதைப்பகுதியைச் சுற்றி 2-3 கெட்டியான நார்களும் , அவற்றைச் சூழ்ந்து கெட் டியான மேல் ஓடும் காணப்படும் .
பயன்கள் :
1. பதப்படுத்தப்பட்ட புளியானது ரசம் , சாம்பார் , சட்னி , சாஸ் , கேண்டி மற்றும் குளிர்பானங்கள் என அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் உணவு வகைகளில் பெருமளவில் பயன்படுகின்றது .
2.புளியில் 30 சதவீதம் வரை சதைப்பகுதியும் , 40 சதவீதம் வரை விதையும் , 30 சதவீதம் வரை ஓட்டுப் பகுதியும் ( தோல் ) அடங்கியுள்ளது .
3. சிவப்பு நிறத்தில் இருக்கும் புளிப்புச் சுவையுடைய கொழுந்து இலைகள் பருப்புடன் கலத்து பொரியல் செய்யப் பயன்படுத்தப்படுகின்றது .
4. உடலில் ஏற்படும் வீக்கங்கள் குறையவும் , வலி நிவாரணியாகவும் , இலைகளை அவித்து ஒத்தடம் கொடுகின்றனர் .
5. அதிக புளிப்புத் தன்மையுடைய காய்களின் மேல் தோலை சீவி விட்டு அதனை அரைத்து சட்னி , துவையல் மற்றும் ஊறுகாய் போன்றவை தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர் .
6. பிஞ்சுகள் பித்தம் , தாகம் ஆகியவற்றைப் போக்கும் தன்மையுடையது .
7. புளியம்பழம் பாத்திரங்களைத் துலக்கப் பயன்படுத்தப்படுகின்றது .
8. பழத்தின் சதைப்பகுதியில் டார்டாரிக் அமிலம் , சிட்ரிக் அமிலம் , மாலிக் அமிலம் , அசிட்டிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன .
9. தேள்கடி , இரத்தக்கட்டி , கபம் , வாதம் , வயிற்று நோய் , கண்நோய் ஆகியவற்றையும் பழங்கள் குணமாக்குகின்றது .
10. பழத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் உடல் அழகு பெறுவதோடு , சிறுநீரகத்தில் கல் தோன்றுவதையும் தடுத்து நிறுத்துகிறது .
11.உலர்த்திப் பொடி செய்யப்பட்ட பழமானது ஏற்றுமதி செய்யவும் , குளிர்ப்பானங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது .
12. சதைப்பகுதி பெக்டின் எத்தனால் மற்றும் புரதம் ஆகியன தயாரிக்கப் பயன்படுகின்றது
13. புளியின் விதையினின்று தயாரிக்கப்படும் பசையானது புத்தகம் தைப்பதற்கும் , நூலுக்கு மெருகூட்டுவதற்கும் , சணல் , நார் நெசவிலும் , இரப்பர் பாலை கெட்டிப்படுத்தவும் பயன்படுத்தப் படுகின்றது .
14. விதையின் தோலிலிருந்து தயாரிக்கப்படும் சாயம் , மரத்தொழிலில் பயன்படுத்தப்படுகின்றது .
15. விதையில் 20 சதவீதம் புரதம் அடங்கியுள்ளதால் , அது ஒரு சிறந்த கால்நடை தீவனமாக கால்நடைகளுக்கு கொடுக்கப்படுகின்றது .
16 விதையினின்று எடுக்கப்படும் எண்ணெய் வார்னிஷ் மற்றும் பெயிண்ட்டுகள் தயாரிக்கப் பயன்படுகின்றது .
17. பூவானது கீழ்வாதம் . முடக்குவாதம் மற்றும் ஜலதோஷம் ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மைப் பெற்றிருப்பதால் உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றது .
18. புளியின் மலர்களில் உள்ள தேன் , தேனீ வளர்ப்பிற்கு முக்கியமான ஒரு ஆதாராமாகும் .
19.புளி மரங்கள் நிழலுக்காகவும் , மண் அரிப்பைத் தடுப்பதற்கும் பெருமளவில்
வளர்க்கப்படுகின்றன .
சத்துப் பொருட்கள் :
பழத்தின் சதைப் பகுதியில் 18.2 சதவீதம் ஈரமும் , 16.5 சதவீதம் புளிப்புத் தன்மையும் , 38.2 சதவீதம் மொத்தச் சர்க்கரை சத்தும் , 2.8 சதவீதம் தாதுச்சத்தும் அடங்கியுள்ளன . விதைகளில் 30 சதவீதம் விதைத் தோல் மற்றும் 70 சதவீதம் விதைப் பருப்பும் அடங்கியுள்ளது . விதைத் தோலில் 30 சதவீதம் வரை டானினும் , நிறமிப் பொருளும் அடங்கியுள்ளது . விதைப் பருப்பில் 8.1 சதவீதம் தண்ணீர் 17 சதவீதம் புரதம் , 7 சதவீதம் கொழுப்பு , 5 , 6 சதவீதம் நார்ச்சத்து , 60 சதவீதம் மாவுச்சத்து மற்றும் 2.8 சதவீதம் தாதுச்சத்துக்களும் அடங்கியுள்ளன .
இரகங்கள்:
பிகேஎம் 1 :
பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தினின்று வெளியிடப்பட்ட இந்த ரகம் நடவு செய்த மூன்றாவது வருடத்திலேயே காய்க்க ஆரம்பிக்கின்றது . பழங்களி னின்று 39 சதவீதம் சதை கிடைக்கின்றது . மேலும் மரம் ஒன்றிற்கு ஆண்டுதோறும் 263 கிலோ புளியை மகசூலாகக் கொடுக்கின்றது . இது உள்ளூர் ரகங்களைக் காட்டிலும் 59 சதவீதம் அதிகமாகும் . ஒரு கொத்தில் 3 முதல் 7 காய்கள் உற்பத்தியாகின்றன .
இதன் சதைப் பகுதியில் 17.1 சதவீதம் டார்டாரிக் அமிலமும் , 3.9 சதவீதம் உயிர்ச்சத்து ‘ சி’யும் அடங்கியுள்ளன .
உரிகம் புளி :
இது தருமபுரி மாவட்டத்திலுள்ள , தேன்கனிக் கோட்டைக்கு அருகில் உள்ள உரிகம் என்ற இடத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் விளைச்சல் ரகமாகும் . இதன் பழங்கள் தட்டையாகவும் , வளைந்தும் காணப்படும் . ஒவ்வொரு பழங்களிலும் 10 முதல் 12 விதைகள் காணப்படும் . ஒவ்வொரு பழமும் சராசரியாக 180 முதல் 200 கிராம் எடையுடன் இருக்கும் . பழங்கள் மார்ச் மாதத்தில் முதிர ஆரம்பித்து ஜூலையில் அறுவடைக்கு வருகின்றன .
இதைத் தவிர இராஜஸ்தான் உள்ளூர் வெளியிடப்பட்ட மாவட்டத்தினின்றுபுரதிஸ்தான் மற்றும் தமிழக தேர்வுகளான கம்பம் தேர்வு , கொண்டதேவன் பள்ளி தேர்வு , தேவர் ஆனிமங்கலம் தேர்வு ஆகியனவும் ஆங்காங்கு சாகுபடியில் உள்ளன .
வகைப்பாடு:
புளியில் மூன்று வகைகள் காணப்படுகின்றன .
1. புளிப்புச் சுவையுடைய பழங்கள் ( பி . கே.எம் .1 )
2. இனிப்புச் சுவையுடைய பழங்கள் ( தாய்லாந்து தேர்வு )
3. சிவப்பு புளியமரம் ( பெரியகுளம் தேர்வு )
இவற்றில் புளிப்புச் சுவையுடைய பழங்கள் உள்நாட்டுத் தேவைகளுக்கும் , மற்ற இரு வகைகளும் ஏற்றுமதிக்கும் பயன்படுகின்றன . வட இந்தியாவில் இனிப்புப் புளியிலிருந்து ஜாம் , ஜெல்லி போன்றவை தயாரிக்கப்படுகின்றன .
பயிர் பெருக்கம்:
புளி உயர் விளைச்சல் ரகங்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகள் மூலம் வழிவழியாக இனவிருத்திச் செய்யப்படுகின்றன . ஆனால் ஒட்டு கன்றுகள் விரைவில் காய்ப்புக்கு வருவதாலும் அவை தாய்க் கன்றுகளை ஒத்திருப்பதாலும் தற்போது புளியானது ஒட்டுக் கன்றுகள் மற்றும் மொட்டுக் கட்டுதல் முறைகளில் இனவிருத்தி செய்யப்பட்டுவருகின்றன .
மண்:
பல்வேறுபட்ட புறக்கணிக்கப்பட்ட மண் வகைகளிலும் புளி வளரும் தன்மையுடையது . பொதுவாக மணல் கலந்த செம்மண் , வண்டல் மண் , செம்புறை மண் போன்ற நிலங்களில் புளி நன்கு வளரும் . மேலும் வறட்சி மற்றும் அமில காரத் தன்மையுடைய மானாவாரி நிலங்களிலும் கூட புளியை வளர்க்கலாம் .
கால நிலை :
புளி ஒரு வெப்ப மண்டல பயிராகையால் அது எல்லா வகை கால நிலையிலும் சிறப்பாக வளரும் . மழை குறைந்த கோடையில் 36 சென்டிகிரேட் வெப்பநிலை நிலவும் பகுதிகளிலும் புளியைச் சாகுபடி செய்யலாம் . ஆனால் இம்மரம் பனியைத் தாங்கும் தன்மை இல்லாதது . பொதுவாக ஆண்டு மழை அளவு 500 முதல் 1500 செ.மீ அளவுடைய எல்லாப் பகுதிகளிலும் புளியைச் சிறப்பாகச் சாகுபடி செய்யலாம் .
பருவம் :
செப்டம்பர் , அக்டோபர் மாதங்கள் புளி நடவு செய்ய உகந்தவை . பருவ மழைகள் இருந்தால் ஜீன் , ஜூலை மாதத்திலும் புளியை நடவு செய்யலாம் . நிலம் தயாரித்தல் ஒரு மீட்டர் நீளம் , அகலம் , உயரமுடைய குழிகளை 10 x 10 மீ இடைவெளியில் எடுத்துக்கொள்ள வேண்டும் . ஆனால் ஒட்டுக் கன்றுகள் நடவு செய்யும்போது 8 x 8 மீ இடைவெளி போதுமானது . பின்னர் 20 கிலோ எரு , மேல் மண் மற்றும் ஆகியவற்றைக் கலந்து குழிகளை நிரப்பவேண்டும் .
நடவு செய்தல் :
பருவ மழைக் காலங்களில் மழை ஆரம்பித்தவுடன் கன்றுகளை நடவு செய்யவேண்டும் . நடும்போது ஒட்டுப் பகுதி , மண்ணுக்கு மேல் இருக்கும்படியாக நடவு செய்து , துணை கொண்டு கட்டவேண்டும் .
நீர்ப்பாசனம் :
புளியானது மானாவாரியாகச் சாகுபடி செய்யப்படுவதால் பொதுவாக நீர்ப்பாசனம் கொடுக்கப்படுவதில்லை . ஆனால் செடிகள் தளிர் விட்டு வளரும் ஆரம்ப வளர்ச்சிக் காலத்தில் தண்ணீர் விட்டு வளர்ப்பது நல்லது . தற்போதைய ஆய்வின்படி சொட்டு நீர்ப் பாசனம் கொடுப்பதன் மூலம் பயிர் விரைவாக வளர்ந்து மகசூலுக்கு வருவதுடன் , அதிக மகசூலும் கிடைக்கிறது .
உரமிடுதல் :
செடி ஒன்றுக்கு 25 கிலோ எரு மற்றும் 200 : 150 : 260 கிராம் தழை , மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் உயர் மகசூலுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள உரங்களை ஆண்டுதோறும் பருவ மழைக்காலங்களில் இடவேண்டும் . மேலும் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கை மணிச்சத்துடன் கலந்து இடுவதால் செடிகளின் வளர்ச்சியும் மகசூலும் அதிகரிக்கின்றது .
பின்செய் நேர்த்தி:
வேர்க்குச்சிகளினின்று தோன்றும் துளிர்களை அவ்வப்போது அகற்றிவிட வேண்டும் . தோட்டத்தில் காணப்படும் களைகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் . ஊடுபயிராகக் காய்கறிகள் மற்றும் முருங்கை போன்றவற்றை ஆரம்பப் பருவத்தில் பயிர்செய்து அதிகப்படியான வருமானம் ஈட்டலாம் . அறுவடை விதை நாற்றுகள் நட்ட எட்டாவது வருடத்திலும் ஒட்டுக் கன்றுகள் நான்காம் வருடத்திலும் காய்க்க ஆரம்பிக்கின்றன . பொதுவாக மரங்கள் மே , ஜூன் மாதங்களில் பூத்து மார்ச் , ஏப்ரல் மாதங்களில் அறுவடைக்கு வருகின்றன . பூத்த பின் அறுவடைக்கு 10-11 மாதங்கள் ஆகின்றன . பழங்கள் மரக்கிளைகளை உலுக்கியும் , நீண்ட குச்சிகளைக்கொண்டும் அறுவடை செய்யப்படுகின்றன .
மகசூல் :
நன்கு வளர்ந்த மரம் ஆண்டொன்றிற்கு 200 முதல் 300 கிலோ பழங்களை மகசூலாகத் தர வல்லது . ஒரு எக்டரினின்று சராசரியாக 12-16 டன்கள் வரை மகசூல் பெறலாம் .
பயிர் பாதுகாப்பு
புளியில் பெரும்பாலும் பூச்சிகளோ , நோய்களோ தாக்கு வதில்லை .

பயிர்களும் பட்டங்களும்

பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை ஆகும் ..!

பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும். பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யவும் மாட்டார்கள்.
வருடத்தில் எந்தெந்தப் பட்டத்தில் என்னென்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டுமோ அந்தந்தப்பட்டத்தில் அந்தந்தப் பயிர்தான் சாகுபடி செய்வார்கள்.

Continue reading

இன்டர்லாக் வீட்டுல இவ்வளவு விஷயம் இருக்கா !!!

இன்டர்லாக் வீட்டுல இவ்வளவு விஷயம் இருக்கா !!!
பிணைபூட்டப்பட்ட மண் கற்கள் மூலம் கட்டப்படும் இயற்கையுடன் இணைந்த வீடுகள் குறித்து முதல் முறையாக ஒரு வலையொலிக்கு உங்களுடைய பல கேள்விகளுக்கு விடை அளித்திருக்கிறேன்…

Continue reading

இலாபம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம்

இலாபம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம்

ஒருங்கிணைந்த பண்ணைய முறை விவசாயிகளுக்கு பழக்கமானது தான் என்றாலும் விஞ்ஞான முறையில் அவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதில்லை. ஒன்றின் கழிவுகள் மற்றொன்றுக்கு இடுபொருளாக (input) மாறுவதன் மூலமே அவற்றின் உள்ளீட்டு செலவை குறைத்து லாபத்தை அதிகரிக்க முடியும். நன்செய் நிலங்களில் நெல், கரும்பு, வாழை (Banana) சாகுபடியுடன் மீன், கறவை மாடு, கோழி, காடை மற்றும் வாத்துகளை வளர்க்கலாம். இவற்றுக்கான தீவனப்பயிர் (Fodder) மற்றும் காளான் வளர்ப்பும் இணைத்து செயல்படுத்தலாம். நெல்லில் இருந்து கிடைக்கும் வைக்கோல் (Straw) கால்நடைகளுக்கு தீவனமாகவும், காளான் வளர்ப்பில் இடுபொருளாகவும் பயன்படுகிறது. கால்நடை கழிவுகளின் சாணம், பயிர்க் கழிவுகள் மற்றும் காளான் வளர்ப்பில் கிடைக்கும் கழிவுகளை மண்புழு உரமாக்கலாம்.
உபதொழில்கள்:
புன்செய் நிலங்களில் பயிர் சாகுபடியுடன் (Cultivation) கறவை மாடு, எருமை, ஆடு, கோழிகள் வளர்க்கலாம். இதனுடன் சாண எரிவாயுக்கலன் அமைக்கலாம். பட்டுப்புழு, தேனீக்கள் மற்றும் பழமரங்கள் வளர்க்கலாம். மண்புழு உரப்படுக்கை தயாரிப்பதுடன் வீட்டுத்தோட்டம் (Home garden) அமைக்கலாம். மானாவாரி நிலங்களில் பயிர் சாகுபடியுடன் வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழிகள் வளர்க்கலாம். வேளாண் காடுகள், பழ மர சாகுபடி, பண்ணைக் குட்டை ஆகியவையும் பயன் தரும். எந்த நிலமானாலும் பயிர்த் தொழிலுடன் உபதொழில்களை இணைத்து செய்வதே தொடர் லாபம் (Profit) தரும். அந்தந்த பகுதிகளில் உள்ள காலநிலை, மண்வளம், மழையளவு, விற்பனை வாய்ப்பு, விவசாயிகளின் மூலதனத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.
உபத்தொழில்கள் செய்வதன் மூலம் ரசாயன உரங்களின் அளவையும் சாகுபடி செலவையும் குறைத்து, மண்வளத்தை மேம்படுத்தலாம். நீர் ஆதாரம் அதிகமாக இருந்தால் 10 சென்ட் நிலத்தில் மீன் குட்டை அமைக்கலாம். இதில் கட்லா 4 பங்கு, ரோகு 3 பங்கு, மிர்கால் 2 பங்கு மற்றும் ஒரு பங்கு புல்கெண்டை என 400 மீன் குஞ்சுகளை வளர்க்கலாம். குட்டையின் மேல் கூண்டு அமைத்து கோழி அல்லது ஜப்பானியக் காடை வளர்த்தால் இவற்றின் எச்சங்கள் மீன்களுக்கு (Fish) உணவாகும். மீன் குட்டையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் மீன்குட்டை கழிவுகள் பயிர்களுக்கு எருவாகிறது. குட்டையைச் சுற்றி காய்கறி மற்றும் பழப்பயிர்கள் வளர்க்கலாம். ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் வேலையாட்களை குறைத்து குடும்ப நபர்களே வேலைகளைச் செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம்.
சங்கீதா, உதவி பேராசிரியர்
லதா, பேராசிரியர்
உழவியல் துறை வேளாண்மைப் பல்கலை கோவை.

தாளிப் பனை Talipot palm[Corypha umbraculifera]

தாளிப் பனை Talipot palm Corypha umbraculifera

தாளிப் பனை (Talipot palm, Corypha umbraculifera) இந்தியாவின் மலபார் கடற்கரையிலும் இலங்கையிலும் வளரும் பனை மர வகையாகும். இதை தமிழகத்தின் சில பகுதிகளில், விசிறிப் பனை, கோடைப் பனை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

Continue reading

இயற்கை விவசாயம் என நாம் கூறுவதன் அடிப்படை அறிவியல்

கொஞ்சம் பெரிய பதிவானலும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய அறிவியல் உண்மை
*இயற்கை விவசாயம்* என நாம் கூறுவதன் அடிப்படை அறிவியலே இவ்வளவுதான்.இதை தெளிவாக புரிந்துகொண்டால் விசமில்லா விவசாயமும்,நோயில்லா சமுதாயமும் சாத்தியமானதே!
கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். சிந்திக்கும் திறனை வைத்து நாங்கள்தான், உலகை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறோம் என மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறான் . ஆனால் உண்மையில் மனிதனையும் சேரத்து இவ்வுலகையே ஆட்டிவைப்பவை கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு.
உண்மையில் அப்படியில்லை. தனது அனைத்து படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது , இயற்கை. ஒரு வாசல் அடைத்தால், இன்னொருவாசல் திறக்கும். அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்த, சில நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் படைத்துள்ளது.
நுண்ணுயிர்கள்தாம் இந்த பூமியில் ஆதியில் தோன்றிய முதல் உயிரினங்கள். அவை திடநிலையில் இருந்த ஆக்சிஜனை சுவாசித்துக் கார்பன் -டை-ஆக்சைடை வெளியேற்றின. ஏற்கெனவே பூமியில் தண்ணீர், சூரிய ஒளி ஆகியவை இருந்ததால், இந்தக் கார்பன் -டை-ஆக்சைடைப் பயன்படுத்திப் பச்சையம் அதாவது, தாவரங்கள் உருவாயின. அப்படி முதன்முதலில் தோன்றியவைதான் பெரணி வகைத் தாவரங்கள். அவை, கார்பன் -டை-ஆக்சைடை எடுத்துக்கொண்டு வாயு நிலையில் ஆக்சிஜனை வெளியேற்றின.
இந்த ஆக்சிஜனை சுவாசிக்ககூடிய நம்மைப் போன்ற உயிரினங்கள் அதற்குப் பிறகுதான் தோன்றின என்கிறது, வரலாறு. தற்போது புவி வெப்பமயமாதலால் அதிகம் பாதிப்புக்குள்ளாகி இருப்பவை, நுண்ணுயிரிகள்தாம். நுண்ணுயிர்கள் அழிந்தால், தாவரங்கள், உயிரினங்கள் என அனைத்தும் அழியும். ஒரு கிராம் மன்ணில் நூறு கோடி நுண்ணுயிர்கள், மண்ணுக்கும் உயிரினங்களுக்கும் பயிர்களுக்கும் உதவிக்கொண்டே இருக்கின்றன. அவற்றைக் காக்க வேண்டிய பணி நம்முன்னே பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. மண்ணில் உள்ளது போல் நம் உடலும் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகமுள்ளன.
இத்தனை நன்மை செய்யும் நுண்ணுயிர்களை, வேளாண்மைக்குப் பயன்படுத்தலாம் என்பதை முதன்முதலில் கண்டுபிடித்தவர், சோவியத்ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானி, வினகராட்ஸ்கி அவர் கண்டுபிடித்த, அசோஸ்பைரில்லம்தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உயிர் உரம். 1929-ம் ஆண்டில் இது கண்டுபிடிக்கப்பட்டாலும், இன்னமும்கூட நம் விவசாயிகளை முழுமையாகச் சென்றடையவில்லை என்பதுதான் வேதனை.
அசோஸ்பைரில்லத்துக்குப் பிறகுதான் ஒவ்வொரு சத்துக்களையும் கரைக்கக்கூடிய நுண்ணுயிர்கள் பயன்பாட்டுக்கு வந்தன. சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா எனப் பலவகையான உயிர் உரங்கள் இப்போது பயன்பாட்டில் உள்ளன. தமிழக விவசாயிகள் தற்போதுதான் உயிர் உரங்களை அதிகளவில் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள் என்பது ஆறுதலான செய்தி.
செயற்கையாக நாம் கொடுக்கும் உயிர் உரங்களை ஒருபுறம் இருந்தாலும், மண்ணில் உள்ள கோடிக்கணக்காண நுண்ணுயிர்கள்தாம் ஆண்டாண்டு காலமாக உழவர்களுக்கு உதவியாக இருந்து வருகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.இவற்றை காக்க நாம் என்ன செய்திருக்கிறோம்.
மனிதர்களுக்குத் தேவைப்படுவது போலவே, நுண்ணுயிர்கரிகளுக்கும் உணவும் உறைவிடமும் அவசியம்.மண்ணில் விழும் பொருள்களைச் சிதைத்து, அதில் இருந்துதான் நுண்ணுயிர்கள் தங்களுக்கான உணவை எடுத்துக்கொள்கின்றன. அதைத்தான் நாம் ‘மட்குதல்’ என்கிறோம். ஒரு பொருளை மட்க வைத்து, தனது உணவுத் தேவையைப் பூர்த்திச் செய்தவுடன் , அதைத் தாதுக்களாக மாற்றி, தாவரங்களுக்குக் கொடுக்கும் பணியைச் செய்கின்றன, நுண்ணுயிர்கள்.
பாரம்பர்யாக விவசாயத்தில் பயன்படுத்தி வரும் தொழுவுரம், நுண்ணுயிர்களுக்கான ஆகச் சிறந்த உணவு. காலப்போக்கில் தொழுவுரங்களை குறைத்துவிட்டு, குப்பை உரங்கள் என்ற பெயரில் நகரத்து குப்பைகளைக் கொட்டுகிறோம். இதில், எளிதில் மட்காத உள்ளிட்ட பல பொருள்கள் கலந்திருக்கின்றன.
இவற்றை சிதைக்க முடியாததால், நுண்ணுயிர்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. நாம் இடும் உரங்களில் மூன்று பங்கு தாவரக் கழிவுகளும்(இலை தழைகள்). ஒரு பங்கு கால்நடை கழிவுகளும் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அது உரம். இல்லையென்றால் வெறும் குப்பைதான். மண்ணுக்கு நல்ல தொழுவுரம் கொடுத்தாலே, நுண்ணுயிர்களுக்குப் போதுமான உணவு கிடைப்பதுடன், மண்ணில் உள்ள அங்ககச் சத்துக்களும் அதிகரிக்கும்.
பூமியெங்கும் இருந்த காடுகளையும் மரங்களையும் அழித்து கான்கிரீட் காடுகளாக்கிக் கொண்டு இருக்கிறோம். அதனால், உணவுத் தட்டுப்பாடு போலவே, இருப்பிடமும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. காடுகள், மரங்கள் வேகமாக அழிக்கப்படுவதால் அதன் கீழே வாழ்ந்த நுண்ணுயிர்களும் அழிந்து போகின்றன. மேலும், மண்ணில் விழும் மட்கும் பொருள்களின் எண்ணிக்கையை விட, மட்காத பொருள்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் நுண்ணுயிர்கள் அழிய முக்கியக் காரணம். இவற்றை மீட்டெடுக்க நிலத்தில் தொழுவுரப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதோடு, வேளாண் காடுகள் வளர்க்கப்பட வேண்டும். மரங்களை உள்ளடக்கிய விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். தாவரங்களின் இலைதழைக் கழிவுகள்தான் நுண்ணுயிர்களுக்கான உயிராதாராம். அந்த ஆதாரத்தை நாம் உருவாக்கித் தர வேண்டும். நுண்ணுயிர்கள் மீது நாம் செலுத்தும் அதிபயங்கர வன்முறை, ரசாயனப் பயன்பாடு.
ஏற்கனவே, உணவில்லாமல் பட்டினியாய் கிடக்கும் நிலையில், ரசாயன உரங்களை மண்ணில் கொட்டுவது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதற்குச் சமமானது. இதனால், நுண்ணுயிர்கள் அழியுமே தவிர, பெருகாது. ரசாயன உரங்களால் மண்ணின் கார அமில நிலை மாறும்போது, அது நுண்ணுயிர்களையும் பாதிக்கும். வெப்பம், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பூஞ்சணக்கொல்லிகள் போன்ற பல்வேறு காரணிகளால் நுண்ணுயிர் பெருக்கம் தடைபடுகிறது. இவை அனைத்தையும் குறைத்து, இயற்கை உரங்களை அதிகளவில் பயன்படுத்தினாலே நுண்ணுயிர்களைப் பெருக்கிவிடலாம்
நுண்ணுயிர்கள் சேவை, மண்ணோடு நின்று விடுவதில்லை. உயிரினங்களின் உடல் உறுப்புகளிலும் இவை பணியாற்றுகின்றன. உதாரணமாக, நாம் உண்ணும் உணவைச் செரிக்க வைப்பது, குடலில் உள்ள ‘லேக்டோ பேசிலஸ்’ எனும் நுண்ணுயிரி. தற்போது தாய்ப்பால் ஜீராணமாகாமல் குழந்தைகள் வாந்தியெடுக்கும் நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன. இதற்குக் காரணம், ‘லேக்டோ பேசிலஸ்’ என்ற நுண்ணுயிரிக் குறைபாடுதான்.
நுண்ணுயிர்கள் அண்ட வெளியெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும். காற்று, தண்ணீர், நிலம் என அனைத்து இடங்களிலும் இருக்கின்றன. நம் காலுக்குக் கீழே கோடிக்கணக்கான உயிர்கள் இந்த உலகை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக ஓயாது உழைத்துக்கொண்டே இருக்கின்றன என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.