களாக்காய் உயிர்வேலிக்கு உத்தரவாதம் வருமானத்துக்கு ஆதாரம்

களாக்காய் உயிர்வேலிக்கு உத்தரவாதம் வருமானத்துக்கு ஆதாரம்

களாக்காய் உயிர்வேலிக்கு உத்தரவாதம் வருமானத்துக்கு ஆதாரம்

உயிர்வேலிக்கு உத்தரவாதம்…வருமானத்துக்கு ஆதாரம்!

‘நாளை கிடைக்கப்போகும் பலாக்காயைவிட இன்று கிடைக்கும் களாக்காய் சிறந்தது’ என்பது, முதுமொழி. இதை உண்மை என்று நிரூபித்து வருகிறார், விழுப்புரம் மாவட்டம், ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்த லஷ்மிநாராயணன். ”நிலத்துக்கு வேலியாக இருந்து, உண்பதற்கு காய்களையும் கொடுக்கும் களாக்காயை வணிகரீதியாக வளர்த்தால், அதிக செலவில்லாமல் நல்ல வருமானம் பார்க்கலாம்” என்பதற்கு தன்னுடைய தோட்டத்தை உதாரணமாக்கி வைத்திருக்கிறார், லஷ்மிநாராயணன்.

தோட்டம் தேடிப்போன நம்மை அன்போடு வரவேற்ற லஷ்மிநாராயணன், கடகடவென பேச ஆரம்பித்தார். ”10-ம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். 26 வருஷமா விவசாயம் பார்க்குறேன். குடும்பத்துக்குச் சொந்தமா 22 ஏக்கர் நிலம் இருந்துச்சு. வழக்கமா நெல், மணிலா, கரும்பு மாதிரியான பயிர்களை வெப்பேன். கிடைச்ச வருமானத்துல பக்கத்துல இருந்த நிலங்களை வாங்கி சேர்த்ததுல, இப்ப 27 ஏக்கர் நிலம் இருக்கு. 15 வருஷத்துக்கு முன்ன வேலையாட்கள் பிரச்னை, தண்ணீர் பிரச்னைனு வந்ததும், பெரும்பகுதி நிலத்துல சப்போட்டா, கொய்யா, மா இப்படி பழ மரங்களை நட்டுட்டேன். சப்போட்டாவும், மாவும் வருஷத்துக்கு ஒரு தடவை மட்டும் மகசூல் கொடுக்குறதால பராமரிப்பு செய்றது சுலபமா இருந்தது. கொய்யா மரங்களைப் பொறுத்தவரை அதிகமான பராமரிப்புத் தேவைப்பட்டாலும், நல்ல விலை கிடைக்கிறதால, தொடர்ச்சியா சாகுபடி செய்றேன்.

திருட்டைத் தடுத்த களாக்காய் செடிகள்!

16 ஏக்கர்ல கொய்யா, ஒரு ஏக்கர்ல சப்போட்டா, 5 ஏக்கர்ல மா, ஒரு ஏக்கர்ல சவுக்கு, 4 ஏக்கர்ல செங்கல் சூளை, எடைமேடையும் இருக்கு. நிலம் முழுக்க ரோட்டு ஓரத்துலயே இருக்குறதால ஆரம்பத்துல கம்பிவேலி போட்டேன். அதுக்கு அதிக செலவு ஆச்சு. ஆனாலும், ஆடு, மாடுகளை மட்டும்தான் கட்டுப்படுத்த முடிஞ்சுது. திருட்டைக் கட்டுப்படுத்த முடியல.

நண்பர்கள்கிட்ட ஆலோசனை கேட்டப்போதான், ‘களாக்காய் செடிகளை வேலியா வளர்த்தா… யாரும் உள்ள வர முடியாது’னு சொன்னார். உடனே செங்கத்துல இருந்து அஞ்சு படி (சுமார் 10 கிலோ) களாக்காய் பழம் வாங்கிட்டு வந்து விதை எடுத்து, காய வெச்சு முளைக்க வைச்சேன். அதெல்லாம் சரியா முளைக்கல.

ஒரு தடவை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு போயிருந்தப்போ, ஆந்திராவுல இருந்து ஒரு வியாபாரி களாப் பழங்களைக் கொண்டு வந்திருந்தார். அவர்கிட்ட பேசினப்பதான் தெரிஞ்சுது, களாக்காய் விதைகளைக் காய வெச்சா முளைக்காதுங்குற விஷயம். நாத்துவிட்டு முளைக்க வைக்கிற தொழில்நுட்பத்தை அவர்தான் சொல்லிக்கொடுத்தார். அவர்கிட்டயே 25 கிலோ பழம் வாங்கிட்டு வந்து, அவர் சொன்ன முறையில நாத்து தயாரிச்சு, தேவையான இடங்கள்ல மட்டும் முக்கோண முறையில நட்டு விட்டேன். எல்லா செடிகளும் நல்ல முறையில வேர் பிடிச்சு வளர்ந்திடுச்சு. 12 ஏக்கர் நிலத்துல, சுமார் ஆயிரம் மீட்டர் அளவுக்குத் தேவைக்கு ஏத்த மாதிரி வேலியா நட்டு விட்டிருக்கேன்” என்று சொல்லி வியப்பைக் கூட்டினார் லஷ்மிநாராயணன், தொடர்ந்தார்.

ஒரு வருடத்தில் வேலி!

”நட்ட ஒரு வருஷத்துல நல்ல வேலியா மாறிடுது. ஆடு, மாடுகள், மனிதர்கள் யாரும் உள்ள நுழைய முடியாது. நமக்குத் தேவையான உயரத்துக்கு வளரவிட்டு கவாத்து பண்ணிக்க லாம். கவாத்து செய்யாட்டியும் பிரச்னை இல்லை. மூணு வருஷத்துல காய் காய்க்க ஆரம்பிச்சிடும். ஒவ்வொரு வருஷமும் மே மாசம் பூவெடுத்து, ஆகஸ்ட் மாசத்துல இருந்து அக்டோபர் மாசம் வரை, காய் அறுவடை செய்யலாம். 1,000 மீட்டர் நீளத்துக்கு வெச் சிருக்கிற செடிகள்ல இருந்து, 1,000 கிலோ காய் கிடைக்கும். வேலியோரமா இருக்கறதால, ரோட்டுல போறவங்களும் பறிச்சுடறாங்க. எல்லாம் போக, வருஷத்துக்கு 200 கிலோ காய் கிடைக்குது. போன வருஷம் 100 கிலோ காயை, கிலோ அம்பது ரூபாய்னு விற்பனை செஞ்சேன். இந்த வருஷம் பழுக்க விட்டு நாத்து விட்டு, மீதி இடங்கள்ல நடலாம்னு இருக்கேன். இதுல மகசூல் கிடைக்கிறதைவிட, கம்பி வேலிக்கு பதிலா அதிக செலவில்லாத மாற்றா இருக்குறதுதான் விஷயமே!” என்று சந்தோஷ மாகச் சொன்னார்!

தொடர்புக்கு,
லஷ்மிநாராயணன்,
செல்போன்: 94888-63995

காட்டுப்பழங்களில் இருந்து செடிகள்!

களாக்காய் சாகுபடி செய்யும் விதம் பற்றி லஷ்மிநாராயணன் தந்த தகவல்கள், இங்கே பாடமாக-

‘குத்துச்செடி என்றழைக்கப்படும் வகையைச் சேர்ந்ததுதான் களாக்காய். இதன் குறைந்தபட்ச ஆயுள் 25 ஆண்டுகள். காட்டில் கிடைக்கும் பழங்கள் அல்லது சந்தையில் கிடைக்கும் பழங்களின் விதைகளை பயன்படுத்தலாம். சந்தைகளில் விற்பனை செய்யப்படும் களாக்காய் பழங்களை வாங்கி, இரண்டு நாட்கள் வைத்திருந் தால், லேசாக அழுகிய நிலைக்கு மாறிவிடும். பிறகு, வாய் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் பழங்களைப் பிசைந்து விட்டால்… விதைகள் அடியில் தங்கிவிடும். அவற்றைச் சேகரித்து, சாம்பல் தூளில் கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.

களாக்காய் உயிர்வேலிக்கு உத்தரவாதம் வருமானத்துக்கு ஆதாரம்
களாக்காய்
களாக்காய் பழங்கள்

18 அடி நீளம், 8 அடி அகலம் என்ற அளவு நிலத்தில் மண்வெட்டியால் கொத்திக் களைகளை நீக்கி… மண்ணைப் பொலப்பொலப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதன் மீது

50 கிலோ எருவைத் தூவிவிட்டு, ஓர் அங்குல இடைவெளியில், ஒவ்வொரு விதையையும் தனித்தனியாக விதைக்க வேண்டும். விதைத்த நாளிலிருந்து ஒரு மாதம் வரை, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்துவிட வேண்டும். அதற்குமேல், செடி வாடினால் மட்டும் தண்ணீர் கொடுத்தால் போதுமானது. நாற்றுகளில் பூச்சித்தாக்குதல் தென்பட்டால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 50 மில்லி வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம். நான்கு முதல் ஐந்து மாதங்களில் நாற்று, ஒன்றரை அடி உயரத்துக்கு வளர்ந்து நடவுக்குத் தயாராகி விடும்.

100 மீட்டருக்கு 2 ஆயிரம் செடிகள்!

மழைக்காலமான அக்டோபர்-நவம்பர் மாதங்களில், நடவு செய்யலாம். ஓர் அடி இடைவெளியில் முக்கோண முறையில் கடப்பாரையால் குழி இட்டு, செடியை நட்டுவிட்டால் போதுமானது. 100 மீட்டர் நீளத்துக்கு நடவு செய்வதற்கு, இரண்டு கிலோ பழத்தில் உற்பத்தி செய்த 2 ஆயிரம் செடிகள் போதுமானவை. நடவு செய்த 6 மாதங்கள் வரையில், மண்ணின் ஈரத்தைப் பொறுத்து, 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதற்குமேல் தனியாக தண்ணீர் கொடுக்கத் தேவையில்லை. மற்ற செடிகளுக்குப் பாயும்போது, கிடைக்கும் தண்ணீரை களாக்காய் செடிகள் எடுத்துக்கொள்ளும். நடவு செய்த ஆறு மாதங்களுக்கு, இவற்றை வெள்ளாடுகள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

6-ம் மாதத்தில் செடி இரண்டரை அடிக்கு மேல் வளர்ந்து விடுவதால், பராமரிப்புத் தேவையிருக்காது. பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது. தனியாக இதற்கு எந்தவிதமான இடுபொருட்களும் கொடுக்கத் தேவையில்லை.’

 செர்ரி தயாரிக்க, களாக்காய்!

களாக்காய் பற்றி பெரியகுளம் தோட்டகலைக் கல்லூரி, பழப்பயிர்கள் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ”களாக்காய் ஆங்கிலத்தில் ‘கரோன்டா’ (ளீணீக்ஷீஷீஸீபீணீ) என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட களாக்காய் செடிகளின் அறிவியல் பெயர், ‘கரிஸ்ஸா கரன்டாஸ்’ (சிணீக்ஷீவீssணீ நீணீக்ஷீணீஸீபீணீs). வெப்பமண்டலப் பகுதிகளில் வளரக்கூடிய இந்தச் செடிகள், இந்தியா முழுவதும் பல பகுதிகளில் காட்டுச்செடியாக மட்டுமே உள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோவிந்த பல்லபந்து வேளாண்மைப் பல்கலைக்கழகம், களாக்காயில் புதிய ரகத்தை உருவாக்கி இருக்கிறது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் வறட்சியான பகுதிகளில் சாகுபடி செய்யும் பயிராக இதை அறிவித்துள்ளது. இவற்றின் காய் மற்றும் பழங்கள் புளிப்புச் சுவையுடன் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

காய்கள், ஊறுகாய் தயாரிக்கப் பயன்படுகின்றன. விதை நீக்கம் செய்யப்பட்ட களாக்காயை நிறமேற்றி, சர்க்கரை பாகில் ஊற வைத்து பேக்கரிகளுக்குத் தேவையான ‘செர்ரி’ தயாரிக்கிறார்கள். இவற்றின் நாற்றுகளை விதை மற்றும் கட்டிங் மூலம் உற்பத்தி செய்யலாம். எங்கள் கல்லூரியை அணுகினால், தேவையின் பெயரில், நாற்றுகளை உற்பத்தி செய்து கொடுப்போம்” என்று சொன்னார்.

தொடர்புக்கு:
தலைவர் மற்றும் பேராசிரியர்,
பழப்பயிர் துறை, பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி.
தொலைபேசி: 04546-231726/233225.

டெங்கு விழிப்புணர்வு

டெங்கு விழிப்புணர்வு

மரு. ஃபரூக் அப்துல்லா

டெங்கு எனும் நோய் வைரஸ் கிருமியால் வரும் நோயாகும்.

டெங்கு ஏடிஸ் எனும் கொசு கடிப்பதினால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது

இந்த கொசு நல்ல தண்ணீரில் முட்டையிட்டு வளரக்கூடியது.

பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கக் கூடியது.

டெங்குவின் அறிகுறிகள்

1. கடுமையான காய்ச்சல்
2. தலைவலி
3. உடல் அசதி
4. உடல் வலி
5. வாந்தி
6. வயிற்றுப்போக்கு
போன்றவை இருக்கும்

டெங்குவில் மூன்று வகை உண்டு
1 .சாதாரண டெங்கு ஜூரம்
(dengue fever)

2. உதிரப்போக்குடன் கூடிய டெங்கு ஜுரம்( dengue hemorrhagic fever)

3. டெங்கு ஷாக் சிண்ட்ரோம்

இதில் முதல் வகை வந்தால் இன்ன பிற காய்ச்சல் போல வந்த வழி தெரியாமல் சென்று விடும். மற்ற வைரஸ் காய்ச்சல்கள் போல அதிக உடல் உஷ்ணம் (104 டிகிரிக்கு மேல்) , இருமல், சளி, தலைவலி, உடல் வலி என்று இருக்கும்

இரண்டாவது மற்றும் மூன்றாம் வகை உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தன்மை கொண்டது

இவற்றில் மேற்சொன்ன அறிகுறிகளுடன் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு , ரத்த தட்டணுக்களை ( platelets ) குறைத்து பல் ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல் , மலத்தில் சிறுநீரில் ரத்தம் செல்லுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்

அதை சரியாக கவனிக்காமல் விட்டால் நீரிழப்பு மற்றும் ரத்த போக்கு அதிகமாகி மரணத்தில் கொண்டு சேர்க்கும்

டெங்குவிற்கு ரத்த பரிசோதனை

ரத்தத்தில் எலிசா (ELIZA) எனும் பரிசோதனை மூலம் டெங்கு வைரஸ் இருப்பதை கண்டறியலாம்.

டெங்குவிற்கான சிகிச்சை முறை

• டெங்குவிற்கான தலையாய சிகிச்சை நீரிழப்பை சரிசெய்வதாகும். ஓ ஆர் எஸ் எனும் திரவத்தை காய்ச்சல் பாதித்த நோயாளிகள் அதிகமாக பருக வேண்டும்.

• வாயால் பருக இயலாதவர்களுக்கு, சிறை வழியாக மருத்துவமனையில் திரவங்களை ஏற்ற வேண்டும்.

• காய்ச்சலை குறைக்க பாராசிடமால் மாத்திரை போதுமானது.

• குளிர்ந்த நீரை கொண்டு உடல் முழுவதும் ஒத்தடம் கொடுப்பது மிகுந்த நன்மை பயக்கும்

• டெங்கு ஒரு வைரஸ் நோயாதலால் இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் அவசியம் இல்லை

• மேலும் ரத்த தட்டணுக்களை பாதித்து ரத்த போக்கை உருவாக்கும் வியாதியாதலால் தேவையற்ற ஊசிகளை தவிர்த்து விட வேண்டும்.

• காய்ச்சல் ஏற்படின் மருத்துவரை அணுகவேண்டும் . அதைவிடுத்து மருந்தகங்களில் சுயமாக மருந்து மாத்திரைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்

• போலி மருத்துவர்களிடம் சென்று தேவையற்ற ஊசிகளை போட்டுக் கொள்வது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்.

• காய்ச்சல் இருப்பின் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று நில வேம்பு குடிநீர் வாங்கி பருக வேண்டும்.

• மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற சொன்னால் அதை உதாசீனப்படுத்தாமல் தங்கி உள்நோயாளியாக சிகிச்சை பெற வேண்டும்

டெங்கு பரவுவதை எப்படி தடுப்பது ??
மிக மிக எளிது

டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவானது நல்ல நீரில் முட்டையிட்டு பொறிக்கக்கூடியது

ஆகவே நம் வீட்டை சுற்றி நல்ல தண்ணீர் சேமித்து வைக்கும் சட்டி சாமான்களை மூடியிட்டு வைக்க வேண்டும்

வீட்டை சுற்றி பழைய டயர் , காலி பாட்டில்கள், பேப்பர் கப்கள் , சிரட்டைகள் , இளநீர் கூடுகள் எதையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

டெங்கு கொசு முட்டையிட பத்து மில்லி நன்னீர் போதும் என்பதை கருத்தில் கொள்க

தங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியின் பின்புறம் சேரும் தண்ணீரிலும் அந்த கொசு முட்டையிட்டு வளரும். அதை கவனியுங்கள்

தண்ணீர் சேமித்து வைக்கும் கலன்களை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு வாரம் ஒருமுறையேனும் தேய்த்து கழுவ வேண்டும்

ஏடிஸ் கொசு பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும் கொசு ஆதலால் நம் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்திருந்தால் பத்தாது.

நம் பிள்ளைகள் பகலில் நேரத்தை செலவிடும் பள்ளிகள் , நாம் பணிபுரியும் அலுவலகங்கள் அனைத்தையும் டெங்கு ஏடிஸ் கொசு இல்லாத இடங்களாக பராமரிக்க வேண்டும்.

கடைசியாக

தண்ணீரை கட்டாயம் காய்ச்சி பருக வேண்டும்.

மலம் கழித்த பின்னும், உணவு உண்ணும் முன்னும் கட்டாயம் கைகளை வழலை கொண்டு கழுவ வேண்டும்

இந்த இரண்டு விசயங்களை கடைபிடித்தால் பல தொற்றும் நோய்கள் நமக்கு வருவதை தவிர்க்கலாம்

டெங்கு வந்தபின் சிகிச்சை செய்வதை விடவும்
டெங்குவை வருமுன் தடுப்பது மிக எளிது

நன்றி
மரு. ஃபரூக் அப்துல்லா

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!!!

1) சோடா

இதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

2) தக்காளிதக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.

3) மாத்திரைகள்

எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.

4) ஆல்கஹால்

பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

5) காரமான உணவுகள்

காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

6) காபி

காபி மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்மால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

7) டீ

காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். அதே போல டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.

8) தயிர்

தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

சினை நிற்க இயற்கை மருத்துவம்

சினை நிற்க இயற்கை மருத்துவம்

சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்.

சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்: கால்நடைகளின் தற்காலிக மலட்டு தன்மையை சரி செய்ய எளிய மருத்துவம்.

இன்னைக்கு இருக்குற அவசர உலகத்துல மாடு சினை நிக்கலைனா உடனே விற்க போயிடுறோம். அது என்ன பண்ணும் பாவம், எல்லாமே இரசாயனம் தெளிச்ச தீணி தான் போடுறோம், தீவணம் ன்னு வெளிய பெருக்கான் கழிவு மாறி எதையோ வாங்கி போடுறோம், அதெல்லாம் எதுல செய்யுறாங்க என்னென்னா கூட சேர்க்குறாங்க ன்னு நிஜமா நமக்கு தெரியுமா? பண்றதெல்லாம் தப்பு நாம தான், இதனால தான் மாட்டுக்கு தற்காலிக மலட்டுத்தன்மை வருது. இன்னைக்கு இருக்குற நிலைல தீணி பெரும் பாடு தான். இருந்தாலும் புதுசா கறவை மாடு வாங்குறதுக்கு கொஞ்ச காலம் தட்ட போட்டு மாட்டை இந்த சிகிச்சையை செஞ்சு அதோட தற்காலிக மலட்டு தன்மையை சரி செஞ்சுரலாம்.

தேவையான பொருட்கள்:

1. வெள்ளை முள்ளங்கி.
2.. கற்றாளை துண்டு
3. முருங்கை இலை
4. பிரண்டை (தண்டு)
5. கறிவேப்பிலை
6. மஞ்சள் கிழங்கு

சிகிச்சை அளிக்க வேண்டிய நெறிமுறைகள்:

சினை நிற்கவில்லை என்று உறுதியாக தெரிந்ததும், அன்றிலிருந்தோ அல்லது அடுத்த நாள் முதலோ சிகிச்சையை துவங்க வேண்டும்.

1. முதல் ஐந்து நாட்களுக்கு தினமும் ஒரு வேலை முழு வெள்ளை முள்ளங்கியை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும்.
(நாள் 1 -5)

2. அடுத்த ஆறாவது நாள் முதல் நான்கு நாட்களுக்கு அதவாது ஒன்பதாவது நாள் வரை, கற்றாழையை முட்களை சீவிவிட்டு, தினமும் ஒரு வேலை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 6 -9)

3. அடுத்த நான்கு நாட்களுக்கு பத்தாவது நாள் முதல் பதிமூன்றாவது நாள் வரை , நான்கு கை அளவு அப்போது பறித்த முருங்கை இலையை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 10 -13)

4. அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த பிரண்டையை ( தண்டு மட்டும்) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 14 -17)

5. இறுதியாக அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த கறிவேப்பிலை உடன் மஞ்சள் ஒரு ஓரிரு கிழங்கு (பெரியாத இருப்பின் ஒன்று, சிறியது எனில் இரண்டு, கடையில்வாங்கிய பொடியை எக்காரணம் கொண்டும் உபயோகிக்க வேண்டாம்) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 18 -21).

மேற்சொன்ன அனைத்தையும் ஒரு நாளைக்கு ஒரு வேளை  மட்டுமே கொடுக்க வேண்டும், நேரடியாக உண்ண கொடுக்க வேண்டும். கட்டாயம் மாடு சினை நிற்கும், இல்லை எனில் மேலும் ஒரு முறை இதை ஓரிரு நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடரவும். கட்டாயம் மலடு நீங்கி சினை நிற்கும்.

கால்நடை மருத்துவர் , பேராசிரியர் திரு.புண்ணியமூர்த்தி அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை முறை.

பசுமைப்பாதையின் இயற்கை வாழ்வியல் நிகழ்ச்சி

☄⛅💦💨🔥🌏🌈💧🌪🌞☔
*அனைவரையும் ஆழமாக சிந்திக்கத்தூண்டிய,*
*நீங்கள் அவசியம் சந்திக்கவேண்டிய,*
*வாழும் சித்தர்களுடன் வாழ்வியலில் ஒருநாள்…*

*30.07.2017 ஞாயிற்றுக்கிழமை*
👨‍👩‍👦‍👦👱🏽👵👴🏼👤✍👥👨🏻‍🔬👩‍🔬🤰🏻👪
*வாய்ப்பை தவறவிடாதீர்கள் தோழமைகளே…*
*98430 85615, 98430 85616.*

இதுவரையில் விலகாத, உங்கள் கண்களை விட்டு அகலாத தந்திர முடிச்சுகள் *திருச்சியில்* கட்டவிழ்க்கப்படுகிறது, *பசுமைப்பாதையின் இயற்கை வாழ்வியல் நிகழ்ச்சிகளில்…*

*இயற்கை வேளாண்மை* வழிமுறைகள், *பாரம்பரிய உணவுமுறை* பழக்கங்கள், *பண்டைய வாழ்க்கைமுறை* வழக்கங்கள், *மரபுவழி மருத்துவ* நுட்பமுறைகள் வழியே
எப்போதும் அறியப்பட்டவர்களில் *வாழும் சித்தராக வர்ணிக்கப்பட்ட, கரூர்*
*திரு. அன்பு சுந்தரம்* அவர்களின் அனுபவ உரைகளையும், இதுவரை நீங்காத திரைகளையும், மறைக்கப்பட்ட உண்மைகளையும், மூடப்பட்ட வரலாறுகளையும், சுற்றிலும் பின்னப்பட்ட சதிவலைகளையும், சூசகமாய் வஞ்சனை செய்த சீமை சகுனித்தனங்களையும், விழித்தெழுந்து முற்றிலும் இவற்றையெல்லாம் அறுத்தெறிந்து இனிவரும் தலைமுறைகளை காக்கவேண்டிய/மீட்கவேண்டிய வாழ்வியல் வழிமுறைகளையும்… *தெரிந்துகொள்ளவேண்டிய தெளிவான தருணங்கள்!*

ஆங்கிலேயரை எதிர்த்து, தன் குருதியை வீரம் விளைந்த மண்ணில் உதிர்த்து, நம் தேச மக்களுக்காக தன்னுயிரை மாய்த்த, மக்களின் மனதில் நீங்காத நினைவுகளை விதைத்த *வீரன் வாஞ்சிநாதன் அவர்களின் ஒரே மகள் லட்சுமி அம்மாவுக்குப் பிறந்த பேரன், நாட்டுப் பற்றாளர், மூலிகை ஆய்வியலர், சூழல் வல்லுனர், திருச்சி திரு. ஜெயகிருஷ்ணன்* அவர்களின் பகுத்தறிவு திறன் சார்ந்த பாரம்பரிய வீரியங்களையும், தொகுத்துத் திறம்பட வழங்கிட இருக்கும் வீரம் தோய்ந்த வாழ்வியல் ஜீவிதங்களையும் *உளமார உள்ளெடுக்கும் உணர்வுமிகு நிமிடங்கள்!!*

புயலுக்கும், நோய்க்கும் புதிதாக பெயர்களை கண்டறியப் போராடும் இன்றைய நாட்களில், *காய்ந்த மலத்தை கண்டே, அதற்கான மனிதனின் பாதித்த உடல்நலத்தையும், அதற்கென்றே முன்னோர்கள் போதித்த மூலிகை வளத்தையும்,* தனது நுட்பமான உயிரியல் மருத்துவத்தின் மூலம் சூட்சமமாக நோய்களை வெல்லும் பேராற்றலை ஆய்வுகளுடன் உணர்த்த வருகிறார் *மூலிகை உயிரியல் சித்தர், அரியலூர் திரு. காசிப்பிச்சை* அவர்கள்.

உலக வெப்பமயமாதலை உடனடியாக தடுக்கவேண்டிய தற்போதைய தருணங்களில், மரக்கன்றுகளுக்கு மாற்றாக போத்து மரங்களையே நட்டு, *தமிழகம் முழுவதிலும் பல்வேறு வகைப்பட்ட 8 லட்சம் மரங்களை உருவாக்கிய* அனுபவங்களையும், அதைப்பற்றிய சிறப்புத் தகவல்களையும், நெகிழ்ச்சிப் பதிவுகளாக பகிர்ந்துகொள்ள வருகிறார்கள்… *புதுக்கோட்டை திரு. ஆசைத்தம்பி* அவர்கள் மற்றும் *புதுக்கோட்டை*
*திரு. மரங்களானவன்* அவர்கள். நிகழ்வுகள் நடைபெறவுள்ள ஜூலை 30 ம்தேதி வளாகத்திலேயே நுட்பமுறைகளுடன்
*”போத்து மரங்கள்”* நடப்படும்.

இவர்களுடன் *பாரம்பரிய உணவுச் சித்தர், பாண்டிச்சேரி திரு. ராசி ராமலிங்கம்* அவர்கள்,
*நெல் ரகங்கள்/சிறுதானியங்கள்/விதைகள்/கதிர்களின் காவலர், பண்ருட்டி திரு. கவிதை கணேசன்* அவர்கள், வேளாண்மை அறிஞர்கள், விவசாய முன்னோடிகள், நாட்டுவிதைகள் சேமிப்பாளர்கள், தோட்டக்கலை பயிற்சியாளர்கள், உணவியல் ஆய்வியலர்கள், சூழல் வல்லுனர்கள், மருத்துவ நிபுணர்கள், சிறப்புச் சிகிச்சையாளர்கள் மேலும் வாழும் சித்தர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வருகை தரும் அற்புத நிகழ்வுகள்…

*கண்காட்சி மற்றும் அரங்கங்கள்*
இந்தியா முழுவதிலும் இருந்து 300 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள், பலதரப்பட்ட சிறுதானியங்களின் ரகங்கள், நாட்டு விதைகள்/ கதிர்கள், மரபு சார்ந்த உணவு வகைகளின் 20,000 தொழில்நுட்பங்கள், 3333 சிறப்பு உணவுப் பொருட்கள் மற்றும் *நாகப்பட்டினம்*
*திரு. மணிவாசகம் (பொதுச்செயலாளர்)* அவர்களின் மேற்பார்வையில் *தமிழ்நாடு சித்த மருத்துவ பாதுகாப்புச் சங்கத்துடன் இணைந்து வழங்கும் 108 அரியவகை மூலிகைகளின் அற்புத கண்காட்சியில் மூலிகைகள் அடையாளம் காணும் போட்டி,* பண்டையகால பயன்பாடுகளில் இருந்த ஆரோக்கியப் பொருட்கள், நலம் காக்கும் பொருட்கள், மறுசுழற்சிப் பொருட்கள், மக்கும் பொருட்கள், மூலிகைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், வேளாண்மைப் பொருட்கள், பசுமை மேவும் பொருட்கள் மற்றும் புத்தகங்கள்…

*அனைவரும், அனைத்தும் உங்களது வருகைக்காக…*

*முன்பதிவு அவசியம்.*

*2017 ஜூலை 30, ஞாயிற்றுக்கிழமை.*
*காலை 10:00 மணிமுதல்*
*மாலை 6:00 மணிவரை.*

*சமுதாய நல மன்றம் அரங்கம்,*
*தூய வளனார் கல்லூரி வளாகம் (St Joseph College Campus), நுழைவாயில் எண்- 3 (Gate No- 3) சத்திரம் பேருந்து நிலையம் அருகில், திருச்சி.*
*98430 85615, 98430 85616.*

*நன்றி! பசுமைப்பாதை!!*
🙏🙋‍♂🙏🙋‍♂🙏💐🙋‍♂🙏🙋‍♂🙏🙋‍♂

இலவச இயற்கை விவசாய பயிற்சி

*உயிர் இயற்கை விவசாயிகள்* கூட்டமைப்பு நடத்தும் மண்டல அளவிலான இலவச இயற்கை விவசாய பயிற்சி

*நாள்* 22/07/2017(சனிக்கிழமை)

*இடம்*அவினாசி(அன்னூர் ரோடு செந்தூர் மஹால்)

*நேரம்* காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை

*பயிற்சியாளர்கள்*
1. *திரு.ஸ்ரீதரன்* அவர்கள்(பேராசிரியர் பூச்சியியல் துறை,வேளாண் பல்கலைக்கழகம் கோவை)

2. *திரு.நவநீதகிருஷ்ணன்* அவர்கள்(உயிராற்றல்(பயோடைனமிக்)வேளாண்மை)பயிற்சியாளர்.

3. *திரு. ஏகாம்பரம் அவர்கள்*(முன்னோடி இயற்கை விவசாய பயிற்சியாளர்)

இயற்கை விவசாய ஆர்வலர்கள்,இயற்கை விவசாயிகள்,இராசாயன விவசாயிகள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

தமிழகத்தையே விஷமில்லா விவசாய மாநிலமாக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்குங்கள் தங்களிடமுள்ள அனைத்து வாட்ஸ்ஆப் குழுக்களிலும் மற்றும் முகநூல் பக்கங்களிலும் இச்செய்தியை பகிர்ந்துதவுங்கள்.

*முன்பதிவு அவசியம்*
தொடர்புக்கு
வரதராஜன்-90470686677
ரவிச்சந்திரன்-9842935035
திருஞானம் 9894366050

*குறிப்பு* மாடித்தோட்டம்,வீட்டுத்தோட்டம் மற்றும் விவசாய நிலமே இல்லாத நுகர்வோர்களும்கூட இந்நிகழ்வில் கலந்துகொள்ளலாம்.

உணவுச் சரித்திரம்

உணவுச் சரித்திரம் food

உணவால் ஆனது உலகம். இந்த உயிர்க்கோளத்தில் உள்ள பல்லாயிரம் கோடி ஜீவன்களுக்கும் உணவுதானே உயிர் ஆற்றல் தரும் ஜீவாமிர்தம்!

உணவுக்கு என ஒரு வரலாறு உண்டு. உயிரினம் தோன்றிய காலத்துக்கு முன்பே தொடங்குகிறது உணவின் வரலாறு. மனிதனுக்கும் முன்னதாக தோன்றியது உணவுகள். மனிதன் இங்கு பிறந்தபோதே, அவனுக்கான உணவுகள் இருந்தன.நாடோடியாகத் திரிந்த மனிதன், வேட்டையாடி உணவை உண்டான். நெருப்பைக் கண்டுபிடித்ததும், உணவை சமைத்துச் சாப்பிடும் முறையை தெரிந்து கொண்டான்.

Continue reading