Radiation அலைக்கற்றைகளை குறைக்கும் மண் வீடுகள்
Radiation அலைக்கற்றைகளை குறைக்கும் மண் வீடுகள் உடலுக்கு radiation மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறையும். வெய்யில் காலங்களில் குளிர்ச்சியாகவும்,குளிர்காலங்களில் கதகதப்பாகவும் இருக்கும்.
ஆத்தூரில் 1200 சதுரடியில் பிணை ப்பூட்டப்பட்ட மண் கற்கள் கொண்டு கட்டப்பட்டு வரும் சூழ்நிலைக்கேற்ற வீட்டின் புகைப்படங்கள்..
இந்த மாதிரியான மண்வீடுகள் தட்பவெப்ப நிலைக்கேற்ப வெய்யில் காலங்களில் குளிர்ச்சியாகவும்,குளிர்காலங்களில் கதகதப்பாகவும் இருக்கும் என்பதை ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன்.
இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இவை அலைகற்றைகளையும் வீட்டினுள் அனுமதிப்பதில்லை என்பது கூடுதல் தகவல்.
நான் ஈரோடு கணபதிபாளையத்தில் கட்டிவரும் வீட்டுக்கு வெளியே அலைபேசியில் 4 புள்ளிகள் அளவுக்கு கிடைக்கும் அலைகற்றைகள் வீட்டினுள் ஒரு புள்ளி அளவு கூட கிடைப்பதில்லை என்பதை பலரும் சொல்லி விட்டனர்.நானும் கவனித்து பார்த்தேன்.நீங்கள் நேரடியாக வந்து உங்கள் அலைபேசி மூலமே உறுதிப்படுத்தி கொள்ளலாம்.
அலைபேசியில் பேச இது ஒரு பக்கம் பிரச்சனை என்றாலும் இன்னொரு பக்கம் radiation அளவுகளை குறைக்கும் வல்லமையும் மண்ணுக்கு உண்டு. உடலுக்கு radiation மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறையும்
நன்றி
பொறி.ஹரி
please give me your phone number
78719 62432