Tag: சீர்_ஆர்_1009

C.R.1009 க்கு மாற்றாக CR 1009 sub- 1

CR 1009 sub-1
C.R.1009 க்கு மாற்றாக C.R.SUB 1 –
சீர் ஆர் 1009 சாவித்தரி , பொன்மணி
சீ.ஆர்.1009 என்ற உயர்விளைச்சல் நெல் ரகவிதைகள் இந்த பசலி ஆண்டுடோடு மறுஉற்பத்தி செய்வது நிறுத்தபடுகிறது அதற்கு மாற்றாக சீ.ஆர் சப் 1 என்ற ரகத்தை முன்மொழிவதாக அரசுதுறை தரப்பிலிருந்து வந்த அறிவிப்பு வெளியானதையடுத்து விவசாயிகளுடன் சில செய்திகளை பகிர்ந்துகொள்ள முற்படுகிறேன்.
சாவித்தரி,பொன்மணி எனும்பெயரில் தமிழக விவசாயிகளால் கடந்து நாப்பதாண்டுகளாக பயிரடபட்டுவந்த சீ.ஆர்.1009 என்ற நெல்ரகம்.தென்னிந்திய பாரம்பரிய உணவான இட்லிக்கு அதிகம் பயன்படுத்துவதால் இட்லி அரிசி என்றும் அழைக்கபட்டுவந்தது.இந்த சீ.ஆர்.1009 ரகநெல் இந்த ஆண்டுக்கு பிறகு எந்த வேளாண்மை கூட்டுறவு அங்காடியிலும்,தனியார் விதை விற்பனை மையங்களுக்கு தனது பவுண்டேஷன் விதைகளையும் சான்றிதழ் விதைகளையும் விற்பனைக்கு கொண்டுவரபோவதில்லை என்ற அரசதுறை அறிவிப்பை உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் அதேவேளையில்
சீ.ஆர்.1009 நெல் ரகம் குறித்து பார்ப்போம்
சீ.ஆர்.1009
பிலிப்பைன்ஸை தலைமையிடமாடாக கொண்ட IRRI(international rice research centre ) மூலமாக கடந்து 1982 ம் ஆண்டு அறிமுகம் செய்யபட்ட சம்பா பட்ட உயர்விளைச்சல் ரக நெல் சீ.ஆர்.1009
நீண்டகால நெற்பயிரான இதன் வயது 150-155 நாட்கள், தாழ்வான ஆற்றுசமவெளி பகுதிக்கு ஏற்ற ரகமான இது தமிழகத்தின் அனைத்துபகுதியிலும் பரவலாக பயிரிடபட்டுள்ளது. இதனுடைய அதி ஒளிசேர்க்கை்திறன் காரணமாக குறைந்த சூரியவெளிச்சம் கொண்ட மேகமூட்டமான சூழலிலும் அதிகம் மகசூல் தரவில்லது.புகையான் நோய்கான நோய் எதிர்ப்புதிறனை தன்னக்கதே கொண்டது.
இதன் ஆயிரம் நெல்மணிகளின் எடை 23கிராம்
இது சராசரியாக விளைச்சல் திறன் ஹெக்டேருக்கு 5 டன் அதாவது ஏக்கருக்கு 2 டன்
இதை வாசித்துகொண்டிருக்கும் விவசாயிக்களுக்கான மொழியில் சொல்வதானால் மாவுக்கு 675கிலோ நமது 24 மரக்கா 60 கிலோ முட்டையில் 11 மூட்டை.
இந்த நிலையில் நம்மிடையே சீ.ஆர்.1009 க்கு மாற்றாக முன்மொழியபடும் சீ.ஆர்.சப் 1 என்ற ரகம் பற்றிய சில தரவுகளை பார்ப்போம்.
சீ.ஆர்.சப்-1 CR 1009 sub-1

 

முதலாவதாக சீ.ஆர்.1009 க்கு மாற்றாக சீ.ஆர்.சப்1 முன்மொழியபட காரணம் இதனுடைய வெள்ளகாலத்தின் தாங்குதிறன்தான் சீ.ஆர்.1009 நீரில் மூழ்கினால் இரண்டொருநாட்களில் சேதமடைந்துவிடும் ஆனால் நீரில் மூழ்கிய நிலை 15 நாட்கள் இருந்தாலும் தாங்குதிறன் கொண்டது சீ.ஆர்.சப்.1 என்பதை இதனை முன்மொழிவதாக சொல்லப்படுது…
C.R.SUB என்பதில் submerged -எனும்பொருளில் SUB பின்னொட்டாக சேர்க்கபட்டுள்ளது
கடந்த 2009 ம் ஆண்டு IRRI யால் ஒரிசாவில் அறிமுகபடுத்தபட்ட நெல்ரகம் சீர்.ஆர்.சப் 155 நாள வயதுடையது
உருவத்தில் அளவீட்டில் சீர்.ஆர்.சப்1 ரகநெல் சீ.ஆர் 1009 நெல்லுக்கு சமமாக இருக்கும் அதேவேளையில் சீ.ஆர்.1009 தை விட இந்த நெல் 17% அதிகவிளைச்சல் கொண்டது இதனசராசர விளைதிறன் ஹெக்டேருக்கு 5759கிலோ. இவையெல்லாம் இந்த சீ.ஆர் 1009 ன் மாற்றுபயிராக சீ.ஆர் சப் 1 நெல்லின் நேர்மறை சிறப்புகள்
ஆனால் டெல்டா விவசாயிகள் தரப்பில் முன்வைக்கபடும் முக்கிய செய்தி இந்த புதிய சீ.ஆர்.சப் 1 என்ற ரக நெல் உயர்ந்து வளரும் தன்மைகொண்டதென்பதாலும் இதன் அதிகவிளைதிறன் காரணமாக 140 நாட்களுக்கு பிறகு சாய்ந்துவிடுகிறது
அதிகதழைசத்து இடுகை காரணமாகவும் தொடர்ச்சியான மழைநாட்களின் காரணமாக அதிகமாக வளர்ந்து இப்போது ஏறக்குறைய தரையோடு தரையாக படுத்துவிட்டது இந்த நிலையில் மழை தொடர்ச்சியாக பெய்துவருதால் படுத்த பயிர்களின் நெற்கதிர்கள் கொத்தோடு முளைத்து நாசமாகிவருகிறது.
நாகை தஞ்சை திருவாருர் மயிலாடுதுறை யை உள்ளடக்கிய பத்துமுதல் பதினைந்து லட்சம் ஹெக்டேர் நஞ்சை பரப்பில் கணிசமாக பரப்பில் சீ்.ஆர்.சப் ரக நெல் தரையோடு தரையாக சாய்ந்துகிடக்கிறது இது இனிவரவிருக்கும் மழைநாட்களில் முற்றிலும் சேதமடைந்துவிட வாய்ப்புள்ளது.
இதனை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும் .உழவர்கள் தரப்பில் இது நமக்கு மிகப்பெரிய பாடம் எனவே இனிவரும்காலங்களில் இதுபோன்ற இக்கட்டான நிலையை எதிர்கொள்ளாதிருக்க அடுத்த ஆண்டு நமது பழைய சாவித்ரி் நெல்லான சீர்.ஆர்.1009 நெல்லை மீட்டெடுத்து விதைக்காக பத்திரபடுத்துவது சாலச்சிறந்தது. நமது தரப்பில் சீ.ஆர்.1009 நெல்லை பாதுகாத்து பரவலாக்க முன்னிற்போம்.
சூழலின் தேவைகருதி சீ.ஆர்.1009 ரகநெல்லை பாதுகாத்து பரவலாக்குவோம்.
அதே வேளையில் சீ.ஆர்.சப்-1 பயிரிடநேர்ந்தால் தழைசத்து இடுவதை குறைத்துகொண்டு முழுமையாக
இயற்கைவழிமுறையில் பஞ்சகவ்யா,அமுதகரைசல் இடுகை மூலம் இட்லிஅரிசியை உற்பத்தி செய்யும்போது நெற்பயிர்கள் அதிக உயரம் வளர்ந்து சேதமடையாமலும் நஞ்சில்லா அரிசியை மனிதகுலத்துக்கு பகிர்ந்த நிறைவைவும் பெறலாம்.