சாப்பாட்டுத்தட்டை நிரப்பும் மிகச்சிறந்த இரகம்

சாப்பாட்டுத்தட்டை நிரப்பும் மிகச்சிறந்த இரகம்
எம்.ஜி.ஆர்.100 – சாப்பாட்டுத்தட்டை நிரப்பும் மிகச்சிறந்த இரகம்


எப்போதாவது நடக்கும் அதிசயம் இப்போது நடந்துள்ளதாக கருதுகிறேன்

என்னதான் விவசாய புதிய இரக கண்டுபிடிப்புகளை கிண்டலடித்தாலும் அரிதிலும் அரிதாக நெல்லில் ஐ..ஆர்.20,பபட்லா 5204,பருத்தியில் எம்சி.யூ.5 ஆகிய இரகங்கள் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் ஜல்லிகட்டு காளைகளாக களத்தில் நின்றன.
.
தற்போது தோட்டி முதல் தொண்டைமான்களின் குடும்பத்தினர் தினசரி சாப்பிடும் அரிசி பொன்னி என்றே சொன்னாலும் அவை 1986-ல் அதாவது முப்பது ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டு அவ்வப்போது புதிய கலையத்தில் வைக்கப்படும் கள்ளாகவே இருக்கும் ஆந்திராபொன்னிமட்டுமே..
.
சென்ற வருடம் எம்.ஜி.ஆர்.100 என்ற புதிய நெல் இரகமாக ( கோ.52 ) வெளியிடப்பட்ட இரகத்தின் இயல்புகளை மேட்டூர் அரசுவிதைப்பண்ணையில் பார்வையிட்டேன். அப்போது ஏதோ ஒரு நடக்காத அதிசயமாக அதிக தூர்களுடனும் மிகஅதிகமான மணிகளுடனும் மிக சன்னமான மணிகளுடனும்
இருந்ததை பார்த்தேன்.


.
ஒரு இரகம் அதிக மகசூல் தர அடிப்படை குணமான கடைசி இலை அமைப்பு அதிகபட்சசூரிய ஒளியை பிடிக்கஏதுவாக 90 டிகிரி நேர்க்கோட்டில் இருந்ததைகவனிக்கமுடிந்தது.இவ்வாறு ஒரு இரகத்தினை இவ்வளவு ஆண்டுகளில் பார்த்ததே இல்லை.
.
ஒரு குத்துக்கு 15 முதல்25 மணி பிடித்த தூர்கள் இருந்ததோடுஅவற்றில் சராசரியாக ஒரு கதிரில் 200 மணிகள் இருக்க வேண்டியதற்கு பதிலாக அதிகமாக இருந்தது.
.
நெல்மணிகளை எண்ணியபோது ஒரு கதிரில் 280 முதல் 480 எண்ணிக்கை இருந்தது. அதற்கு குறைவாகவே இல்லை.


.
அவற்றின்1000மணி எடை சுமார் 12 கிராம்கள் மட்டுமே இருக்க வாய்ப்புள்ளதால் சாப்பாட்டு அரிசியின் தன்மை மிகசன்னமாக இருக்க வாய்ப்புள்ளது.
.
இது எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக்குடும்பங்களின் சாப்பாட்டுத்தட்டை நிறப்பும் மிகச்சிறந்த இரகமாக பரிமளிக்க வாய்ப்புள்ளதுஎன்பது மட்டும் எனது கண்ணுக்கு தெரிகிறது.
.
இருப்பினும் ஒரு குறையையும் கண்டேன்.

அதாவது நெல்லின் நோயான குலைநோய் தாக்குதல் நோய் தாக்கும் குளிர்காலத்திற்கு முன்பே சிறிய அளவில் தென்படுவதால் அவ்விசயம் மட்டும் ஒரு உறுத்தவாகவே உள்ளது.