பைசா செலவில்லாமல் கிணற்றின் உப்பு தன்மையை நல்ல தண்ணீராக மாற்ற

பைசா செலவில்லாமல் கிணற்றின் உப்பு தன்மையை நல்ல தண்ணீராக மாற்ற

– பிரிட்டோராஜ்

பைசா செலவில்லாமல் கிணற்றின் உப்பு தன்மையை நல்ல தண்ணீராக மாற்றிய இளம் விவசாயி-ன் அனுபவ பகிர்வு

நாவில் பட்டால் முகம் சுளிக்கக்கூடிய வைகையில் இருந்த கிணற்று நீர்..
இப்போது (அதீத மாற்றம்) தெருக்குழாய்களில் வரும் நீரைப்போல் உள்ளது..

என்னதான் செய்தோம்…

1. பண்ணை குட்டையில் மழை நீர் சேகரிப்பு.

கிணற்று நீர் அதிக உப்பு தன்மையுடன் இருந்தது நெல்லி மரக்கட்டைகளை வெட்டி கிணற்றில் போட்டால் நீரின் தன்மை மாறும் என்று பெரியவர்கள் சொல்ல அதனை செய்து பார்த்தோம் ஆனால் ஒன்றரை வருடங்களுக்கு பின்னரும் எதிர்பார்த்த பலன் இல்லை.
நீரின் தன்மையை செலவில்லாமல் எப்படியாவது மாற்றிவிட வேண்டுமென்பதே எண்ணம். ஐயா பிரிட்டோராஜ் அவர்களின் ground water farming வாடஸ் ஆப் குழுவில் அய்யா அவர்கள் பதிவிட்ட செய்திகளையும் அதனால் பயனடைந்த விவசாயிகளின் அனுபவமும் உத்வேகமூட்ட அரசும் முழு மானியம் தர ஐயா பிரிட்டோ அவர்களின்
வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை பெற்று வேளாண்மை பொறியல் துறை மூலமாக இலவசமாக பண்ணை குட்டை போடப்பட்டது (செப்டம்பர் மாதம்) இந்த வட கிழக்கு பருவ மழை காலத்தில் 3 முறை குட்டை நிரம்பியது (கண்கொள்ளா காட்சி).தற்போது எங்களது கிணற்று நீரையே சமையலுக்கு பயன்படுத்துகிறோம்.அடுத்த வருடம் நன்னீராக மாறிவிடும் என்ற நம்பிக்கையில்…

காட்ல இம்புட்டு எடத்த ஏம்பா தம்பி வீணாக்குறீங்கனு பக்கத்து காட்டுகாரவங்க கேட்டபோதெல்லாம். அடுத்த வருஷம் நீங்களே தெருஞ்சுக்குவீங்கன்னு சொன்னேன். நான்கே மாதங்களில் நல்ல பலன். அவர்களுக்கு ஆச்சரியம்..

மட்டற்ற மகிழ்ச்சி!!
நன்றி திரு பிரிட்டோராஜ் அய்யா அவர்களுக்கு..

குறிப்பு: நாங்கள் இயற்கை வழி வேளாண்மை முறையை பின்பற்றுகிறோம்.
நிலம் மாறும் நீரும் மாறும்..

நன்றி.
கணேசன்
திருவில்லிப்புத்தூர்
விருதுநகர் மாவட்டம்.