விளையும் நிலத்தில் தீயிட்டு கொளுத்தாதீர்கள்

Agriwiki.in- Learn Share Collaborate

🔥போற்றுதலுக்குரிய வேளாண்குடி பெருமக்களே!🔥

🌴🔥தென்னை, கரும்பு மற்றும் விவசாய நிலங்களில் தீயிட்டு கொளுத்தும் பழக்கம் நம்மில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் என்ன நடக்கும்.
1. தோப்பில் தீயிட்டு கொளுவதினால் தேனீக்கள் மற்றுமின்றி ஏனைய மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சிகள் அதை சுற்றி 1/2கி மீ தூரம் சென்று விடுகிறது.தென்னை 50% அயல் மகரந்த சேர்க்கை செய்கிறது. இதனால் காய் காய்ப்பதில் 50% குறையும்.
2. நீங்கள் இடும் உரங்கள் நுண்ணயிர்களின் வழியாகவே வேர்களுக்கு செல்கிறது. அவ்வாறு நீங்கள் தீயிடும் நிலம் சுமார் 1000மீட்டர் சுற்றளவு (ஆழம் சேர்த்து ) எல்லா மண்ணில் வாழும் உயிரினங்களும் இறந்து விடுகிறது. அதுமட்டுமல்லாது சத்துக்களை எடுக்கும் வேர்கள் மிகவும் மென்மையானது இவ்வாறு தீயிடும் போது அவைகள் தன் திறனை இழக்கிறது.
3. இதனால் நிலம் கட்டாந்தரையாக மாறி இறுக்கமாகி வேர்கள் ஊடுருவி சத்துக்கள் எடுக்கவோ வளரவோ இயலாமல் ஆகிவிடுகிறது.
4. அதிக வெப்பத்தின் காரணமாக இலைகள் கருகி மீண்டும் தன்னை புது பித்துக்கொள்ள நாள் எடுக்கும் அதுவரை அவைகள் விளைச்சல் கொடுப்பதை தவிர்த்து தன்னை பாத்துக்கொள்ள திறனை அதிமாக செலவிடுகிறது.
5. நீங்கள் வயலில்அல்லது தோப்பில் இடும் தீ உங்கள் நிலத்தை மட்டும் மல்லாது பக்கத்து தோட்டக்காரர்களின் நிலத்தையும் சேர்த்து வெகுவாக பாதிக்கிறது.
6. மெல்ல மெல்ல மகசூல் குறையும்.மொத்தத்தில் நிலம் செங்கல் சூலையாக மாறிவிடும்

தயவு செய்து விளையும் நிலத்தில் தீயிட்டு கொளுத்தாதீர்கள். செங்கல் அறுக்கும் இடத்தில்தான் தீயிடுவார்கள் விளைநிலத்தில் இல்லை.
தீ வைப்பதற்கு பதிலாக தண்ணீர் விட்டு மாட்டுச்சாணத்தையும்,சக்கரையும் கலந்து தெளித்து விடுங்கள் மக்கி மண்ணுக்கு உரமாகிவிடும்.தற்பொழுது நம் நிலங்களில் மக்கு தன்மை (கரிம சத்து ) மிக மிக குறைவாகவே உள்ளது. நீங்கள் எந்தவகை உரமிட்டலும் மண்ணின் கரிம சத்து இருந்தால் மட்டுமே செடிகள் எடுத்துக்கொள்ள முடியும்.

எங்க ஊர் பகுதியில் நான் அதிகமாக பார்க்கும் ஓன்று தோப்பில் தீயிட்டு மட்டைகளை கொளுத்துவது.

இதுவரை செய்திருந்தாலும் இனிமேல் தவிர்த்து விடுங்கள்.மீண்டும் உங்களை கைகூப்பி 🙏🏾🙏🏾கேட்டுக்கொள்கிறேன் விளை நிலத்தில் தீயிட்டு கொளுத்துவதை நிறுத்துங்கள். மண்ணை மேலும் மலடாக்கதீர்கள்.

#வேளாண்மை_அறிவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.