Month: June 2018

மண் வீடு களிமண் கற்கள் Adobe

கல் வீடு கட்டுவது போன்றே சரியான திட்டமிடலுடன் மண் வீட்டினையும் அமைக்க வேண்டும். முதலில் சுவர் பற்றிப் பார்ப்போமானால் ஏனையவை சுலபமாக இருக்கும.

Continue reading

PARTLY PRECAST REINFORCED BRICK ROOFING

கூரையின் அடி பகுதி

சாதாரண சுட்ட செங்ககல்லையும் குறைந்த அளவு கம்பி மற்றும் கான்க்ரீட் கொண்டு சென்றிங் வேலை இல்லாமல் கூரை அமைக்கும் முறையைத்தான் #PARTLY_PRECAST_REINFORCED_BRICK_ROOFING
என அழைக்கிறோம்.

Continue reading

Precast Ferro Cement Doom Roofing

precast finished house

வீடு கட்டும் செலவை குறைக்க பெரும்பாலும் நாம் விலை குறைவான அல்லது தரம் குறைவான பொருட்களை பயன்படுத்துவதை பற்றி சிந்திக்கிரோமே தவிர செலவை குறைக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை பற்றி ஒருபோதும் சிந்திப்பது இல்லை.காரணம் அதற்க்கான தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லாமை.மற்றும் அதற்க்கான தொழில்நுட்பங்கள் காலப்போக்கில் நம்மிடமிருந்து அழிந்து போனதுதான் காரணம்.

இதனை பற்றிய விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதும் மற்றும் அதற்கான தொழில்நுட்பங்களை மீட்டெடுப்பதுதான் இந்த தொடர்களின் நோக்கம்.வரும் காலங்களில் இது செயல்முறை வடிவில் கானோளிகலாகவும் இருக்கும்.

நம்மாழ்வாரிடம் பல பேர் குறுக்கு கேள்விகளையும் தேவை இல்லாத சந்தேகங்களை எழுப்பும் போது அவர்களிடத்தில் ஒரே கேள்வியை மட்டுமே முன்வைப்பார்.

“நீங்கள் சேலத்திலிருந்து இரவில் சென்னை செல்கிறிர்கள் என்று வைத்து கொள்வோம் செல்லும் வாகனத்தின் வெளிச்சம் 20 அல்லது 30 அடி வரைதான் அடிக்கும் அடுத்து செல்ல செல்ல தான் வெளிச்சம் கிடைக்கும் பாதைகள் தெரியும்.அது போல ஒரு செயலை செய்ய செய்யதான் அதற்க்கான எண்ணமும் செய்முறை சந்தேகங்களுக்கு விடையும் கிடைக்கும்.இல்லை சென்னை வரைக்கும் வெளிச்சம் தெரிந்தால் தான் நான் பயணம் செய்வேன் என்று சொன்னால் ஒருநாளும் நீங்கள் பயணம் செய்ய முடியாது என கூறுவார்”

சரி இப்போது விசயத்திற்கு வருவோம்.போன பதிவில் precast ferrocement dhoom roofing பற்றி பதிவிடுவதாக கூறியிருந்தேன்.அதனை பார்க்கலாம்.

இந்த PCFDR முறைக்கு இந்த முட்டையின் தத்துவம் தான் பயன்படுகிறது.அதாவது ARCH SHAPE technic

இந்த ARCH SHAPE எவ்வாறு கம்பியே இல்லாமல் கட்டிடத்திற்கு தேவையான நிலைப்பு தன்மையையும் ,உறுதியையும் அளிக்கிறது என்பதை ஏற்கனவே என்னுடைய பழைய பதிவில் காணொளி மூலம் சிறிய எடுத்துக்காட்டுடடன் விளக்கி உள்ளேன்.நம் பாரம்பரிய கட்டிடங்களில் இந்த தொழில்நுட்பத்தின் பங்கு மிக பெரியது.

கிழே அந்த லின்க்கை கொடுத்துள்ளேன் பார்க்காமல் இருப்பவர்கள் பார்க்கவும்.

https://m.facebook.com/story.php?story_fbid=1812827768756683&id=100000884315437

அதவாது அரை வட்ட வடிவ PRECAST சேனல்கள் FERROCEMENT TECHNOLOGY மூலம் போடப்பட்டு கட்டிடத்தின் கூரையாக GRANE வாகனத்தின் உதவி கொண்டு அடுக்கப்படுகிறது.இது ஆரோவில்லின் ஒரு தொழில்நுட்பம்.இதனை கொண்டு ஆரோவில்லில் இரண்டு மாடிகள் கட்டப்பட்டு உள்ளது.

PCFDR இதனை பற்றி பார்ப்பதற்கு முன்னாள் இந்த FERROCEMENT TECHNLOGY என்றால் என்ன என்பதை பார்த்துவிடலாம்.

குறைந்த அளவு கம்பிகளையும்,சிக்கன் மெஸ் எனப்படும் கோழி வலையை பயன்படுத்தி கால் ஜல்லி அல்லது பேபி ஜல்லி (6MM JULLY) கொண்டு concrete போடும் முறைதான் FEROCEMENT concrete என அழைக்கப்படுகிறது.

இந்த டெக்னாலஜி பயன்படுத்தி தான் செலவு குறைவான தண்ணிர் தொட்டிகள்,வீட்டின் சுவர்கள்,கதவுகள்,படிக்கட்டு கைப்பிடி சுவர்கள் ,மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் போன்றவை செய்ய பயன்படுகிறது.

இம்முறையில் முதலில் கட்டிடம் நடைபெறும் இடத்திற்கு அருகில் ௦.85 M அகலமும் 6 M நீளமும் என்ற அளவில் செங்கல் கொண்டு கட்டப்பட்டு பளபளப்பாக பூசப்படுகிறது.

படம் 1 பார்க்கவும்

(இதற்க்கு ஸ்டீல் மோல்ட் கொண்டு கூட செய்யலாம் )

 

பின்பு இதன் மீது அடி ஆயில் அடிக்கப்பட்டு 8MM கம்பியை நீள வாக்கில் வைத்து அதன் மீது கோழி வலை இரண்டு அடுக்கு போடப்பட்டு 2 அங்குலம் கணத்தில் சிப்ஸ் concrete (6 MM ஜல்லி ) கொண்டு கன்க்ரிட் போடப்பட்டு finishing செய்யபடுகிறது.

படம் 2 பார்க்கவும்

பின்பு இவை 10 நாட்கள் வரை CURING செய்யப்பட்டு கட்டிடத்தின் மீது GRANE வாகனம் உதவி கொண்டு மேலே வரிசையாக 2 அங்குலம் இடைவெளியில் அடுக்கப்பட்டு அந்த இடைவெளி மழை நீர் வடியுமாறு வாட்டத்துடன் CONCRETE போடப்படுகிறது.இது தரை தளத்துடன் விட்டு விடுபவர்களுக்கு போதுமானது.

படம் 3 பார்க்கவும்.

 

அல்லது இதன் மீது முதல் தளம் கட்ட வேண்டும் எனில் ARCH இடைப்பட்ட இடைவெளி மட்டமாக ஏதாவது பில்லிங் (வேஸ்ட்) மெட்டிரியல் கொண்டு பில்லிங் செய்யப்பட்டு டைல்ஸ் அல்லது கலவை கொண்டு சிமெண்ட் FLOORING அமைத்து கொள்ளலாம்.

படம் 4 பார்க்கவும்.

இரண்டு SKILLED LABOUR மற்றும் நான்கு UNSKILLED LABOUR கொண்டு ஒரு நாளைக்கு 4 சேனல்கள் வரை செய்யலாம்.

இதில் அறையின் நீளம் 6 M அதிகமானால் எக்ஸ்டிரா சப்போர்ட் கொடுக்க வேண்டும்.

இம்முறையில் concrete கூரை அமைப்பில் அதிக செலவு பிடிக்கும் சென்றிங் வேலை இல்லை.

மற்றும் குறைந்த அளவு கம்பி மற்றும் concrete கொண்டே கூரையை அமைக்க முடியும்.

முன்னதாகவே இதனை செய்து வைத்து கொண்டால் கட்டிடத்தின் கட்டும்மான காலத்தையும் குறைக்கலாம்.

மற்றும் இதன் அடிப்பகுத் நன்றாக பல பலவென (அதற்க்கு தான் ஆயில் அடிக்க வேண்டும்) இருப்பதால் சிலிங் பூச்சு வேலை தேவை இல்லை.அப்படியே வெள்ளை அடித்து கொள்ளலாம்.

இதனை பற்றிய புகைபடங்கள் சிலவற்றை இதனுடன் இணைத்துள்ளேன்.

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் இந்த முறையை பற்றிய உங்கள் அனுபவங்களை முடிந்தால் கமெண்ட்ல பதிவு பண்ணுங்க…

மறக்காம ஷேர் பண்ணிருங்க பிரண்ட்ஸ்….

தொடரும்….
நான் உங்களுடன் ஹரி…
உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றிகள்….

வீடு கட்டும் செலவை குறைக்க உதவும் கல்

வீடு கட்டும் செலவை குறைக்க

வீடு கட்டும்போது அதிக செலவீனங்களை பிடிக்கக்கூடிய பகுதிகள் இந்த சுவர் அமைப்பும் கூரை அமைப்பும் ஆகும். மற்றும் இவை இரண்டுமே வீட்டின் தட்பவெப்ப நிலையையும், சூழ்நிலையையும்,பராமரிப்பையும், பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன.
இன்று நாம் பார்க்க கூடியது இந்த சுவர் அமைப்பை மிகவும் செலவு குறைவாகவும், வேகமாகவும் வீட்டினுள் குளுமையான சூழ்நிலை இருக்குமாறு கட்ட பயன்படும் Porotherm கற்களாகும்.
இந்த கற்கள் தரமான செம்மண்ணை கொண்டு மெஷின் மூலம் செய்யப்பட்டு பின்னர் சூலையில் வைத்து ஏறிக்கப்படுகிறது.winsberger கம்பெனி தான் இதனை உலகம் முழுவதும் தயாரித்து விற்பணை செய்கிறது.இதனுடைய தொழிற்சாலை கர்நாடகாவில் உள்ளது.கேரளாவிலும் சில தொழிற்சாலைகள் உள்ளது.

(((இதற்கு காரணம் தேவையான செம்மண் அந்த பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது))))

இந்த கற்களை பார்ப்பதற்கு ஓட்டை ஒட்டையாக இருந்தாலும் அவை அதிக தாங்கு திறன் சக்தி கொண்டவை.மற்றும் கற்கள் நல்ல புற அமைப்புடன் இருப்பதால் பூச்சு வேலை தேவை இல்லை.மற்றும் கற்களில் ஓட்டைகள் இருப்பதால் இதனுள் சூடும் ,குளிரும் கடத்தப்படுவது தடுக்கப்படுகிறது.மற்றும் இவை எடை குறைவான கற்கள் என்பதால் அடித்தளம் அமைக்கும் செலவும்,beam,column அமைப்பும் செலவும் குறைகிறது.
மற்றும் இது சாதாரண செங்கல்லை விட 8 மடங்கு பெரியது அதனால் கட்டுமான செலவும்,நேரமும் மிகவும் குறைவு.
இதனை சாதாரண கலவை கொண்டும் கட்டலாம்.அல்லது இதற்காகவே அந்நிறுவனம் ஒரு ஒட்டும் பசையை வழங்குகிறது அதனையும் கலவைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.இதனை பயன்படுத்தும்போது சிமெண்ட் ,மணல் தேவை இல்லை.
இந்த கற்கள் இரண்டு வகைகளில் கிடைக்கிறது.

1.கிடைமட்ட துளையுடைய கற்கள்
2.செங்குத்து துளையுடைய கற்கள்

கிடைமட்ட துளையுடைய கற்கள் framed structure எனப்படும் கட்டிட அமைப்பிற்கு சுவரை வெறுமனே அடைக்க மட்டுமே பயன்படுகிறது.இது அதிக எடை தாங்காது.காரணம் கட்டிடத்தின் எடை இம்முறையில் beams மற்றும் column மூலமாக பூமியை அடைகிறது.அதனால் சுவருக்கு எடை தாங்கும் வேலை இல்லை.அங்கு இதனை பயன்படுத்தலாம்.

செங்குத்து துளையுடைய கற்கள் அதிக எடையை தாங்க கூடியவை..எனவே இதற்கு column,beam தேவை இல்லை.இது load bearing structure முறைக்கு மிகவும் ஏற்றது.இதனை கொண்டு G+3 வரை கட்டலாம்.
பிளம்பிங் மற்றும் ஒயிரிங் அமைப்புகள் சாதாரண கட்டிடத்தில் அமைப்பதை போன்றே உடைத்து அமைத்து கொள்ளலாம்.பின்பு அதை மட்டும் பூசி மறைத்து விடலாம்.

இந்த கற்கள் மூன்று அளவுகளில் கிடைக்கிறது.வெளிப்புற சுவர்களுக்கு பெரிய கள்ளையும் உட்புற அரைக்கள் சுவர்களுக்கு சின்ன கல்லையும் வடிவமைப்பை பொறுத்து அமைத்து கொள்ளலாம்.

இதன் அளவு விபரம்

Porotherm HP 200_____ 400x 200x 200 mm
Porotherm HP 150 ____ 400x 150 x200mm
Porotherm HP 100 ______400x100x200mm

இரண்டு வகை கல்லுக்கும் இந்த அளவுகள் பொருந்தும்.

மேலும் இந்த கற்களை பற்றிய சோதனை விபரங்கள் அறிய https://wienerberger.in/facts/wall-solutions-porotherm-smart-bricks என்ற இணைய முகவரியை பார்க்கவும்.

சரி இனி இதிலுள்ள பிரச்சினைகளை பார்க்கலாம்
1.நாம் பொதுவாக கூரைக்கு பயன்படுத்தும் மங்களூர் டைல்ஸ் நாளடைவில் அடிப்புரம் பொரிந்து உதிர்வதை பார்த்திருப்பீர்கள்.தரமற்ற கள்ளை பயன்படுத்தினால் இதுவும் அதே போல பொரிந்து உதிற வாய்ப்பு அதிகம்.sunshade அமைப்பு வீட்டை சுற்றி நிச்சயம் வழங்க வேண்டும்.

2.இந்த கற்கள் சுலபமாக அனைத்து இடத்திலும் கிடைப்பது இல்லை.மீண்டும் இதனை டிரான்ஸ்போர்ட் செய்தால் கற்கள் விலை அதிகமாகி கடைசியில் வீட்டு செலவு அதிகமாகிவிடும்.
3.நிச்சயம் தரமான கொத்தனார் தேவை..

இவை கேரளா,மற்றும் கர்நாடகாவில் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது.
இது தமிழ்நாட்டில் மதுரை,திருச்சி,திருப்பூர் பகுதிகளில் கிடைக்கும் இடங்களை புகைப்படத்தில் பதுவிட்டுள்ளேன்.மற்றும் சென்னையில்

இதன் விலை விபரம்

Horizontal holed blocks
8″ block—68 rs
6″————-58 rs
4″————-44 rs
Veritcal holed tiles
8″——-78 rs
6″——-68 rs
4″——–50 r

வேறு ஏதேனும் கிடைக்கும் இடங்கள் தெரிந்தால் கமென்ட்ல பதிவிடுங்கள் மற்றும் இந்த கற்களின்மூலம் கட்டப்பட்ட வீடுகளின் புகைப்படம் மற்றும் இது சம்பந்தப்பட்ட காணொளிகளை இணைத்துள்ளேன்…

மறக்காம ஷார் பன்னிருங்க….
தொடரும்…
நான் உங்கள் ஹரி.

சுற்றுச்சூழல் போராட்டங்கள் நேற்றும் இன்றும்

pollution

உயிர்ப்பலி கேட்கும் வளர்ச்சிப் பேய்: சுற்றுச்சூழல் போராட்டங்கள் நேற்றும் இன்றும்
————————————————————–

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 என்று அரசு அறிவித்தாலும், பலியானோர் எண்ணிக்கை குறித்து உள்ளூர் மக்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது. மண்ணைக் காக்கவும் நீரைக் காக்கவும் உறுதி ஏற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் அரசுகள், பின்னர் அதை காசுக்கு விற்கும் வித்தையைத் தெரிந்துகொண்டதன் விளைவாக, எளிய மக்கள் உயிரிழக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.

உலகம் முழுவதும் சூழலியலைப் பாதுகாக்கப் போராடும் போராளிகள் இதுபோல எண்ணற்று பலியாகி வருகின்றனர். மெக்சிகோவில், பிலிப்பைன்ஸில், கொலம்பியாவில், இந்தியாவில் என்று பட்டியல் நீண்டு செல்கிறது. 2015ம் ஆண்டில் மட்டும் இதுபோல 185 போராளிகள் கொல்லப்பட்டதாக ‘டவுன் டூ எர்த்’ இதழ் கூறுகிறது.

மரம் காக்கும் போராட்டம்

”தொடியுடைய தோண் மணந்தனன்

கடிகாவிற் பூச்சூடினன்” (புறம்: 239)

காவல் மரங்களை கடி மரம் என்றும், அந்த மரங்கள் வளரும் காட்டை கடிகா என்றும் அழைப்பது பண்டைத் தமிழ் மக்களின் மரபு. தங்கள் உயிரைக் கொடுத்தும் மக்கள் அதைக் காப்பார்கள். ஒரு நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முதலில் கடிமரம்தான் வீழ்த்தப்படும். அதைக் காக்கும் போராட்டமே நாட்டின் இறையாண்மைக்கான போராட்டமாக அன்றைக்கு இருந்தது. நிலத்தை இயற்கையின் அடிப்படையில் பிரித்து வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.

பிற்கால வரலாற்றில் சூழலியலுக்கான போராட்டம் இந்தியாவில் 1730-களில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேஜர்லி கிராமத்தில் தோன்றியது. மரங்களைக் காக்கும் போராட்டமாக அது இருந்தது. மரங்களை வெட்ட முனைந்த அரசுக்கு எதிராக 363 பிஷ்னோய் மக்கள் பலியானார்கள். அதன் பின்னர் 1856-ல் வடஅமெரிக்கப் பழங்குடிகளோடு நடந்த சியாட்டில் சண்டையில் 28 பேர் கொல்லப்பட்டார்கள். அப்போது சியாட்டில் தலைவர் வெளியிட்ட புகழ்பெற்ற கடிதம், அந்தப் போரை சூழலியல் போராட்டமாக உலகுக்குப் பறைசாற்றியது.

தொழிற்புரட்சி தந்த சீரழிவு

உலக வரலாற்றில் தொழிற்புரட்சி ஒரு மாபெரும் அருஞ்செயல் என்று நம்பப்பட்டுக்கொண்டிருந்த நாட்களில், இப்போக்கு கொடுமையான பேரழிவுகைளக் கொண்டு வரும் என்று யாரும் அப்போது எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இன்று உலகின் தலையாய சிக்கல்களில் ஒன்றாக சூழலியல் மாசுபாடு உள்ளது. நீர், நிலம், காற்று என்று வாழ்வாதாரங்களைச் சிதைத்துச் சூறையாடும் போக்கு உலகம் முழுவதும், அதிலும் குறிப்பாக வளரும் நாடுகளில் கண்மூடித்தனமாக அதிகரித்து வருகிறது. தங்கள் வாழ்வாதாரங்களான இயற்கை ஆதாரங்களைக் காப்பதற்காக உலகம் எங்கும் மக்கள் போராடி வருகிறார்கள்.

தொழிற்புரட்சியை முதலில் தொடங்கிய மேற்கத்திய நாடுகளில்தான் தொழிற்சாலை மாசுபாட்டுக்கு எதிரான போராட்டங்கள் முதலில் தொடங்கின. 1739-ல் பெஞ்சமின் பிராங்க்ளின் பிலடெல்பியாவில் தோல் தொழிற்சாலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். 1850-களில் தேம்ஸ் ஆற்றில் ஏற்பட்ட மாசுபாட்டை காரல் மார்க்ஸ் எதிர்த்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இது இன்னும் வேகமெடுத்தது. ரேச்சல் கார்சனின் ‘மௌன வசந்தம்’ நூல், சூழலியல் செயற்பாட்டாளர்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

யார் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்?

இயற்கையைக் காக்க வேண்டும், சூழலியலைப் பேண வேண்டும் என்ற நோக்கம் விரிவடைய விரிவடைய தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டங்களாக அவை உருவெடுத்தன. ஒரு காலத்தில் ஆலைகள் வேண்டும் என்று கேட்ட மக்கள், இன்று தங்கள் பகுதிக்கு ஆலைகளே வேண்டாம் என்று வீறுகொண்டு எழுகிறார்கள். லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தனியார்மயமும் கட்டற்ற பொருளாதாரப் போக்கும் இயற்கை வளங்களை எந்த வரம்பும் அற்று சூறையாடுவதே இதற்குக் காரணம்.

சூழலியல் அநீதியை எதிர்ப்பவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு அழித்தொழிக்கப்படுகிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு சூழலியல் போராளிகள் கொல்லப்படுவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் வாரத்துக்கு நான்கு போராளிகள் கொல்லப்படுகிறார்கள் என்கிறது கார்டியன் இதழ்.

தமிழகத்தைப் பொறுத்த அளவில் மாவட்டம்தோறும் சூழலியல் போராட்டங்கள நடைபெற்று வருகின்றன. காரணம் இந்தியாவின் அதிகம் நகரமயமான மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பதுதான். குடிநீர் ஆதாரங்களைக் காக்கும் போராட்டங்கள் தொடங்கி சாயப்பட்டறைகள், தோல் பதப்படுத்தும் ஆலைகள், தாமிர உருக்காலைகள், ரசாயன தொழிற்பேட்டைகள் என்று இந்தப் போராட்டங்கள் தொடர்கின்றன.

தமிழக சுற்றுச்சூழல் போராட்டங்கள்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மட்டுமல்லாது, அனல் மின்நிலையம் போன்ற மேலும் பல மாசுபடுத்தும் தொழிற்சாலைகளும் உள்ளன. இதற்கு எதிரான போராட்டங்கள் நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றன. அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி-குமரி மாவட்டங்களில் ஆற்று மணல், கடல் மணல் பாதுகாப்புக்கும், துறைமுக கட்டுமானத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் விரிகின்றன. தேனியில் நியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம்; கொடைக்கானலில் இந்துஸ்தான் லீவரின் பாதரசக் கழிவை எதிர்த்துப் போராட்டம்;

திண்டுக்கல்லில் தோல் பதப்படுத்தும் ஆலைகளை எதிர்த்து போராட்டம்; ஈரோட்டு-கரூரில் காவிரி, அமராவதி ஆறுகளை மாசுபடுத்தும் சாயப்பட்டறைகள், திருப்பூரில் நொய்யலைத் தின்று தீர்த்த சாயப்பட்டறைகளை எதிர்க்கும் போராட்டம்; அரியலூரில் சிமெண்ட் ஆலைகளின் மாசுபாட்டுக்கு எதிரான குரல்; மதுரையில் சிறுமலைகளைக் காக்கப் போராட்டம்; கோவை – நீலகிரியில் காடுகளைக் காக்கப் போராட்டம்; நாமக்கல், சேலம் பகுதிகளில் சுரங்கத் தொழில்களால் வளமான மலைகள் அழிவதை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்கள்;

வாழ்வதற்குத் தகுதியற்றதாக கடலூரை மாற்றியுள்ள சிப்காட் வளாகத்தை எதிர்க்கும் போராட்டம்; தஞ்சை -புதுக்கோட்டையில் ஹைட்ரோகார்பன் ஆழ்குழாய்க் கிணறுகள் பெட்ரோலியக் கிணறுகளுக்கு எதிரான போராட்டங்கள்; நாகையிலும் திருவாரூரிலும் இறால் பண்ணைகளுக்கு எதிரான போராட்டங்கள்; தருமபுரி – கிருஷ்ணகிரி பகுதிகளில் மலைகளைக் காக்கப் போராட்டம், வேலூரில் தோல் பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் பாலாற்றையும் காக்கும் போராட்டங்கள்;

சென்னையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் முதல் சாக்கடைக் கழிவு மட்டுமல்லாது ரசாயனத் தொழிற்சாலைகளை எதிர்க்கும் போராட்டங்கள் என்று போராட்டங்களை சுருக்கமாகப் பட்டியல் இடலாம்.

இவை தவிர தமிழகமெங்கும் பரவலாக மாசுபடுத்தும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு எதிரான போராட்டங்கள், நெகிழியை வரைமுறையில்லாமல் கொளுத்தும் அரசு அமைப்புகளுக்கு எதிரான போராட்டங்கள், மலைபோல் குவியும் திடக் கழிவுகள், ஆறுகளை கொன்று சீரழித்த சாக்கடைக் கழிவுகள் என்று தமிழகம் முழுமையும் போராட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தப் பட்டியலில் இடம்பெறாத போராட்டங்களும் நிறைய உள்ளன.

போராட்ட முன்னோடிகள்

தமிழகத்தில் சூழலியல் போராட்டங்கள் முதலில் பறவைப் பாதுகாப்பு, கானுயிர் பாதுகாப்பு என்று மேட்டுக்குடிப் போக்காக இருந்தது. பிறகு குடிநீருக்கான போராட்டமாகவும், வேளாண்மை நிலங்களைப் பாதுகாக்க வேண்டியுமாகவே தொடங்கின. தமிழகத்தைப் பொருத்தவரை சூழலியல் போராட்டங்களுக்கு ஒரு மெய்யியல் வரைவாக்கத்தைக் கொடுத்தவர்கள் மறைந்த நெடுஞ்செழியன் ஒருங்கிணைத்த ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு;

மருத்துவர் ஜீவானந்தத்தை தலைவராகக் கொண்ட தமிழகப் பசுமை இயக்கம்; செங்கல்பட்டு வெங்கடாசலத்தைத் தலைவராகக் கொண்ட கிழக்குமலைத் தொடர் பாதுகாப்பு இயக்கம்; சர்வோதயத் தலைவர் ஜெகன்னாதனைத் தலைவராகக் கொண்ட இறால் பண்ணை எதிர்ப்பு இயக்கம் போன்ற இயக்கங்கள் சூழலியல் போராட்டங்களை தமிழகத்தில் முன்னெடுத்த முன்னோடிகள்.

இதில் தொண்டு நிறுவனங்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திண்டுக்கல் பால் பாஸ்கரால் தொடங்கப்பட்ட ‘சுற்றுச்சூழல் புதிய கல்வி’ மாத இதழ் ஆரம்ப காலத்தில் முக்கிய பங்காற்றியது. மருத்துவர் ச. ராமதாஸால் ஒருங்கிணைக்கப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு கடலூர் சிப்காட் மாசுபாட்டுக்கு எதிராகவும் பாலாற்றைப் பாதுகாக்கவும் போராடியது. பின்னர் பெருவீச்சாக உருவான கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டம், இந்திய அணுவுலை வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. மறைந்த ஒய்.டேவிட் இப்போராட்டத்தின் முன்னோடியாக இருந்தார். சுப.உதயகுமாரின் வருகைக்குப் பின்னரே இப்போராட்டம் வீறுகொண்டு எழுந்தது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோக் குளிர்பான நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தில் காந்தியவாதிகள் முதல் மார்க்சிய/லெனினிய அமைப்புகள்வரை போராடி வெற்றி பெற்றனர். சேலத்தில் பியூஷ் மானுஷ் வேடியப்பன் மலையைக் காக்கப் போராடி வருகிறார்.

தஞ்சை தரணியில் நடைபெற்ற மீத்தேன் எதிர்ப்புப் போராட்டக் களத்தில்தான் நம்மாழ்வார் தனது உயிரை ஈந்தார். தாமிரபரணி மணல்கொள்ளையைத் தடுக்கப் போராடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, கரூர் காவிரி ஆற்றில் மணல்கொள்ளையைத் தடுக்கப் போராடும் முகிலன், கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலைக்காகப் போராடும் ‘ஓசை’ காளிதாஸ், மதுரையில் நீர்நிலைகளைக் காக்கப் போராடும் நாணல் நண்பர்கள் தமிழ்தாசன், திருச்சியில் போராடும் தண்ணீர் அமைப்பினர், சிதம்பரத்தில் கான்சாகிப் வாய்க்காலை காக்கப் போராடிக்கொண்டிருக்கும் பாசன விவசாயிகள் அமைப்பான ‘சகாப்’ என்று தமிழகம் முழுவதும் சூழலியலைக் காக்கப் போராடுபவர்களின் பட்டியலும் நீண்டுகொண்டே போகிறது.

இதுபோல முகம் தெரிந்த, தெரியாத எத்தனையோ செயற்பாட்டாளர்கள் தங்களது உடைமையை, சில நேரங்களில் உயிரையும் இழந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இறால் பண்ணை எதிர்ப்புப் போராட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் செயற்பாட்டாளர்கள் தீர்ப்பைப் பெற்றும், அரசு நடைமுறைப்படுத்தாமல் விட்ட நிகழ்வுகளும் உண்டு. திண்டுக்கல், வாணியம்பாடி தோல் ஆலைக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுக்க வலியுறுத்தி தீர்ப்பு வழங்கப்பட்டும், இழப்பீடு முறையாகக் கொடுக்கப்படவில்லை. அதனால் சுற்றுச்சூழல் போராட்டங்களுக்கு நீதிமன்றம் வழியாகத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பொய்த்துப் போகிறது.

பாடம் கற்போம்!

இன்று எண்ணற்ற சூழலியல் செயற்பாட்டாளர்கள் உருவாகி வருகின்றனர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு சூழலியல் போராட்டங்கள் பெருவீச்சாக வளர்ந்தாலும், அவற்றுக்குக் கிடைத்த வெற்றியோ மிகவும் குறைவுதான். சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு மக்கள் கொடுக்கும் விலை அளப்பரியது.

சுற்றுச்சூழல் போராட்டங்கள் ஒரு புதிய உலகத்தைப் படைக்க வேண்டிய கட்டாயத்தை நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. புதிய கொள்கை, புதிய அரசுகள், புதிய வாழ்க்கை முறை உருவாக வேண்டிய காலம் இது. சூழலியல் பொருளாதார அறிஞர் ஜே.சி. குமரப்பா குறிப்பிடுவதுபோல புதைபடிவ எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட நாகரிகம் (Fossil fuel based civilisation) இனித் தொடர முடியாது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அடிப்படையாகக் கொண்ட புதிய நாகரிகம் வளர வேண்டியுள்ளது.

நம்மைவிட ஏழை நாடுகளான ஈகுவடாரும் பொலிவியாவும் அந்த வகையில் நமக்கு வழிகாட்டுகின்றன. அவை ‘அன்னை பூமி உரிமைச் சட்ட’த்தை (Law of the Rights of Mother Earth) உருவாக்கியுள்ளன. அந்தச் சட்டத்தி்ன் வழியாக இயற்கை வளங்களைப் பாதுகாக்க முனைகின்றன. உலகுக்கு வழிகாட்ட வேண்டிய பெரிய நாடான நம் நாடோ, பல வகைகளில் பின்தங்கியுள்ளது. இனி தென்னமெரிக்க நாடுகளிடம் இருந்தாவது பாடம் கற்போம்.

கெடுவேளையாக நம் நாட்டு முக்கியக் கட்சிகள் எதுவும் இந்தப் போக்கைப் புரிந்துகொள்ளவில்லை. ஒன்று இந்தக் கட்சிகள் தங்களது கொள்கைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் அல்லது புதிய கட்சிகள் உருவாக வேண்டும். வழக்கமான அரசியல் கட்சிகளை, அது தேசியக் கட்சிகளாக இருந்தாலும், திராவிடக் கட்சிகளாக இருந்தாலும், பொதுவுடமைக் கட்சிகளாக இருக்கட்டும் ஏன் மக்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதை இந்தப் பின்னணியில் இருந்தே புரிந்துகொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரங்களான இயற்கையைக் காக்க இந்தக் கட்சிகள் கொண்டுள்ள புரிதல் என்ன? வெறும் வளர்ச்சி என்ற முழக்கம் நிறுத்தப்பட்டு.

இயற்கை ஆதாரங்களைக் காக்கும் வகையில் அரசின் கொள்கைகளிலும் கட்சிக் கொள்கைகளிலும் மாற்றம் ஏற்பட்டால் ஒழிய, சுற்றுச்சூழல் போராட்டங்களால் ஏற்படும் உயிர் பலிகள் ஓயாது. இனி தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்வோம், தப்பித் தவறும்போது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம். நமது தலைமுறை இன்னும் நன்றாக வாழ வேண்டும், இந்தப் பூமி நமக்குப் பின்னும் இருக்க வேண்டுமல்லவா!

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

From facebook post : https://www.facebook.com/permalink.php?story_fbid=190130578306801&id=100019295796869

பூச்சு வேலை தேவையில்லாத ஒன்று

terracota-paint1

வீட்டுக்கு செங்கள்ளின் மேல் பூச்சு வேலை தேவையில்லாத ஒன்று என்பதை பல இடங்களில் பதிவிட்டுவிட்டேன்.அதற்கு கொஞ்சம் தரமான செங்கல் மட்டுமே தேவை.இதோ மற்றுமொரு பூச்சு வேலை செய்யப்படாத கட்டிடம் உங்கள் பார்வைக்கு.செங்கல்லி்ன் மேல் terracotta paint அடிக்கப்பட்டு உள்ளது. கான்கிரீட் பாகங்களில் மட்டுமே பார்டர் பூச்சு செய்யப்பட்டு உள்ளது.

பூச்சு வேலை செய்ய வில்லை என்றாலே கொஞ்சம் குளுமை கிடைக்கும்.சாதாரண கட்டுக்கு பதிலாக rattrap பாண்ட் பயன்படுத்தி கட்டினால் இன்னும் அதன் குளுமை அதிகரிக்கும்.மற்றும் பெருமளவு செலவு குறையும்.

நன்றி…Hari

terracota-paint1
terracota painted house
terracota-paint2
terracota painted house