Month: August 2018

பசுமை நிறைந்த வீடு

வீடு சிறியதாக இருந்தாலும் அதனை சுற்றி மரங்களும்,பூக்களும்,செடிகளும்,புல்லும்,என்று பசுமையாக இருக்கும் போது அது சொர்க்கம் போல காட்சியளிக்கிறது.அதனால் தான் நாம் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் ஊட்டி,கொடைக்கானல் நோக்கி ஒடுகிறோம்.அங்கே ஏன் ஓட வேண்டும் நம்ம வீட்டையே ஊட்டி,கொடைக்கானல் போல மாற்றுவோம்.வாங்க

Continue reading

பொகாஷி உரமாக்கல் Bokashi Composting

பொகாஷி உரமாக்கல் Bokashi Composting

வளம் குறைந்து மண்ணை வளமாக்க பயன்படும் முறை இது. இது இயற்கை வேளாண்மையில் ஒரு முக்கிய அம்சம். தோட்டங்களிலும், வயல்களிலும் பயிர்களுக்குத் தேவையான ஊட்டக்கூறுகளை இயற்கையாக வழங்க இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக ஜப்பானிய விவசாயிகள் மட்கும் பொருட்களை அப்படியே மண்ணுக்குள் புதைத்து வைத்து, பின் அதனை எடுத்து பயன்படுத்துவார்களாம். அப்படி மட்கும் பொருட்களை மண்ணுக்குள் புதைத்து வைக்கும் போது மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் அதனை நொதிக்க செய்து, மண்ணோடு மண்ணாக்கி விடுகின்றன.

Continue reading

சிறுதானியங்கள் என்ன என்ன இருக்கு

சிறுதானியங்கள் என்ன என்ன இருக்கு

சிறுதானியங்கள் என்ன என்ன இருக்கு கேட்டா,
சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, வரகு, சோளம் னு பதில் வரும்.
இன்னும் கொங்சம் அதிகம் தெறிஞ்சவங்க காடைகன்னினு ஒன்னு இருந்துச்சு அல்லது இருக்குபாங்க.

நெல்லுல இருக்க மாதிரி இதுல ரகங்கள் எதாவது இருக்கானு கேட்டா
முழுமையான பதில் எங்கயும் கிடைக்கல.
ஐவ்வாது மலை, போதமலை, கொல்லிமலைனு கொஞ்சம் சுத்துனப்போ சில விசயங்கள் தெரியவந்தது.

Continue reading

தற்சார்பு வாழ்வியலை நோக்கி

வீட்டில் பயோ என்சைம் தயாரிப்பு

இப்போது வீட்டில் பயோ என்சைம் தயாரிப்பு வெற்றியாகியுள்ளது. பருத்தி ஆடைகள் தோட்ட வேலை செய்து சேறு அப்பி அழுக்காகி விட்டால் துணிகள் விரைவில் மங்கிப் போகும். அழுக்கும் சரியாகப் போகாது.
பயோ என்சைம் நன்றாக அழுக்கு நீக்குகிறது. திருப்தியாக உள்ளது.

Continue reading

மண் வீடு தன்னுடைய எஜமானர்களை அணைத்து கொண்ட தருணம்

மண் வீடு தன்னுடைய எஜமானர்களை அணைத்து கொண்ட தருணம்

மண் வீடு
மனிதனின் உடலில் உள்ள பாகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து அதனுடைய வேலையை செய்தால் மட்டுமே நாம் உயிர் வாழ முடியும்.அதே போல நாம் வசிக்கும் வீட்டுக்கும் உயிர் உள்ளது.அதனுடைய பாகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து அதனுடைய வேலையை செய்தால் மட்டுமே உயிர்புடன் இருக்கும்.அதுவே சிறந்த வீடு.

கோவையில் கட்டப்பட்டு வந்த மண் வீடு தன்னுடைய எஜமானர்களை அணைத்து கொண்ட தருணம்

Continue reading

சரியான நீர் மேலாண்மை இல்லை

சரியான நீர் மேலாண்மை இல்லை

215 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஆறு இது. கேரளா, நீலகிரி ஆகிய இடங்களில் பெய்யும் மழை நீரானது பவானி ஆற்றில் கட்டப்பட்டிருக்கும் பவானிசாகர் அணையில் சேகரமாகிறது. இந்த அணையின் உயரம் 120 அடிகள். இப்பொழுது இந்த அணை நிரம்பிவிட்டது என்பதால் பல ஆயிரம் கன அடி நீரை (இனறைய கணக்குக்கு எழுபதாயிரம் கன-அடி) பவானி ஆற்றில் திறந்துவிடுகிறார்கள். இந்த எழுபதாயிரம் அடி கன நீர் சத்தியமங்கலம், பவானி ஆகிய நகரங்கள் வழியாக ஓடி பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றோடு கலக்கிறது. இன்றைக்கு பவானியும் சரி; காவிரியும் சரி கரை கடந்து ஓடுகிறது. தனது கரையோரம் இருக்கும் பல ஊருக்குள்ளும் புகுந்துவிட்டன.

Continue reading

தீடீர் தீடீரென செத்து விழும் நாட்டு கோழிகள் மருத்துவம் என்ன

குடற்புழு நீக்கத்தில் தவிர்க வேண்டியவை

அதிகாலை எழுந்தவுடன் கோழியை திறந்து விட்டால் கூட்டுக்குள்ளே இரண்டு கோழி செத்து கிடக்கும். பிள்ளையை போல ஆசை ஆசையாய் வளர்த்த கோழி சுருண்டு அட்டை காகிதம் போல் கிடக்கும் போது ஏற்படும் மன வலி எப்படி இருக்கும்ன்னு கோழி வளர்ப்பவர்களுக்கே தெரியும்.!

Continue reading