Category: மரபு கட்டுமானம்

பசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை

சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னால் இந்த பசுமை வீடுகள் பற்றி ஆராய ஆரம்பித்த பொழுது, அந்த உலகம் என்னுள் ஒரு இனம் புரியாத பரவசத்தையும் குழப்பத்தையும் ஒரு சேர தந்த உணர்வு. என்னுள் எழுந்த கேள்விகளுக்கு பதிலை தேடி தேடி அலைந்து கிடைக்காமல் அடுத்தவரின் கேள்விகளாலும் கிண்டல்களாலும் அவமானங்களை சந்தித்த வருடங்கள்.இந்த மண் சார் கட்டுமானத்தின் சித்தாந்தத்துக்கு நாங்கள் எந்த அளவு உண்மையாக இருக்க முடியும்? தமிழ்நாட்டில் குறிப்பாக எங்கள் பகுதிகளில் யாரும் கேள்விப்படாத ஒரு விஷயத்தை நாம் பொது வெளியில் எடுத்துச் செல்ல முற்படும்போது வெறும் சித்தாந்தத்தை மட்டும் நம்பி வீடு கிடைக்குமா? அதை வைத்து நாங்கள் காலம் தள்ள முடியுமா?

Continue reading

பூச்சு வேலைக்கு பைசா செலவில்லை தேவையுமில்லை

நானாவது வீட்டை பாக்க வர நட்புகள்,உறவினர்கள் வீட்டு உரிமையாளரை கிண்டல் பண்ணிருவங்களோ என்று கதவு மற்றும் ஜன்னல் முனைகள்,கூரைகள்,பீம்கள்,ஷெல்புகள் என்று சில இடங்கள் மட்டுமாவது பூசிவிடுவேன்.சுவரையும் கொஞ்சம் மட்டமாக வேண்டும் என்பதற்காக “டேய் செங்கல்லை தூக்கு விட்டு கட்டு,லெவல் பாரு,ஒழுக்கமாக மட்டகோல் போடு என்று கத்தி கத்தியே நமக்கு பிபி எறிடும். 😂😂..செங்கல்லும் 10,12 ரூபாய்க்கு நல்ல கல்லாக வாங்குவேன்.அதனால் செலவை குறைக்க முடியவில்லை🙄🙄🙄

Continue reading

பழந்தமிழரின் பொறியியல் நுட்பத்திறன்

இப்போது வீடு கட்டும்போது நாம் பயன்படுத்தும் முறையை ஆர் சி என்கிறோம் . இம்முறைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. ஆங்கிலேயர் காலத்தில் வந்தது என்று இன்னொரு முறையையும் சொல்லுவார்கள், இது மெட்ராஸ் டெர்ரஸ்.

Continue reading

லாரிபேக்கர் கட்டிடத்துறையின் காந்தி

திருவனந்தபுரம் ரயில்வே நிலையத்தையோ அல்லது பேருந்து நிலையத்தையோ கடந்து செல்லும் எவரும் அந்த இந்தியன் காஃபி ஹவுஸ் கட்டிடத்தின் மீது விழி பதிக்காமல் கடக்க முடியாது. நான் திருவனதபுரத்திற்கு செல்லும்போதெல்லாம் பிரம்மாண்டமான கலோசியத்தின் ஒரு பகுதி போலிருக்கும் அந்த கட்டிடத்தில் சென்று தேங்காய் எண்ணெயில் சுடப்பட்ட மைதா பூரியையும், தொட்டுக்கொள்ள பீட் ரூட் உருளை குருமாவையும் ஒரு ஜன்னலோரம் அமர்ந்து அவசரகதியில் இயங்கும் உணவகத்தில் கொஞ்சம் நிதானமாக வேடிக்கை பார்த்தப்படி உண்டபடி அமர்ந்திருப்பது வழக்கம். அது லாரி பேக்கர் கட்டிய கட்டிடம் என்று அவரை பற்றி அண்மையில் வாசித்த போது தான் அறிந்துகொண்டேன். லாரி பேக்கர் எனும் வரலாற்று ஆளுமையை அறிந்து கொண்டதும், நான் உணவருந்திய எனக்கு பிடித்தமான கட்டிடம் அவர் கட்டியது என்று அறிந்து கொண்டதும் எனக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது.

Continue reading

வீடு கட்ட bearing structure சிறந்தது

அந்த என்ஜினீயர் சதுர அடிக்கு 1700 ரூவா சொன்னாரு ஒருவழியா குறைச்சு பேசி 1550க்கு முடுச்சாச்சு, நாம economical ah தான் வீடு கட்டுறோம்” அப்படினு உங்கள நெனச்சு நீங்களே பெருமை பட்டுகிட்டா…, வாழ்த்துக்கள்(?!)… இந்த பதிவு உங்களுக்கே

Continue reading

புவிதம் பள்ளி

நிச்சயம் மரபு முறையில் வீடு கட்ட நினைக்கும் அத்தனை பேரும் இந்த கட்டிடங்களை நிச்சயம் பார்வையிடவேண்டும் உங்களுடைய சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் உங்கள் கண் முன்னே காணலாம்.

Continue reading

பெரிய அளவு லிண்டேல் பீம் அமைப்புகளை தவிருங்கள்

framed structure கட்டுமான முறையில் வீடோ அல்லது கடைகளோ கட்டும்போது படத்தில் உள்ளது போல பெரிய அளவு லிண்டேல் பீம் அமைப்புகளை தவிருங்கள்.கூரை மற்றும் அதற்கு மேல் வரும் சுவரின் எடை ஏற்கனவே ரூப் பீம்கள் மூலமாக பில்லருக்கு சென்றுவிடும்.லிண்டேல் பீம் அமைப்பு ஜன்னலுக்கு மேல் உள்ள செங்கல்லை தாங்கினால் போதுமானது.அதுதான் அதனுடைய வேலை.அதற்கு cut லிண்டேல் பீம் போதுமானது.

Continue reading