சொல்ல மறந்த தண்ணீர் கதை

சொல்ல மறந்த தண்ணீர் கதை
Agriwiki.in- Learn Share Collaborate

**தண்ணீர்..சொல்ல மறந்த கதை**

தண்ணீர் குடிக்கும் பொருள் அல்ல அது சாப்பிடும் பொருள்.

தண்ணீரை வாய் வைத்துத்தான் சாப்பிட வேண்டும். அதனால் தான் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் தண்ணீர் சாப்பிடுங்கள் என்று சொல்வார்கள். நீங்கள் கவனித்தது உண்டா..??

வாயில் வைத்து நன்கு கொப்பளித்து பின் அதை மூன்றாக பிரித்து முழுங்க வேண்டும். ( வாதம் பித்தம் கபம்)

தண்ணீரை மண்ணில் இருந்து பிரித்த முன்று மணி நேரத்தில் அதில் இருக்கும் உயிர் சத்து போய் விடும்.அதனால் தான் நம் முன்னோர்கள் அந்த உயிர் சத்து போய்விடாமல் நீட்டித்து இருக்க மண்ணில் பாய்ந்து வந்த நீரை மண்பாத்திரத்தில் சேமித்து வைத்து அந்த உயிர் சத்தை நீண்டிக்க வைத்தனர்.

இன்னொரு ரகசியத்தை சொல்கிறேன்….வெது வெதுபான தண்ணீர் உடம்புக்கு கசப்பு சுவை கொடுக்கவல்லது.அதுவும் தண்ணீரை இரவில் மண் பாத்திரத்தில் நிரப்பி வெதுவெதுபான சூடேற்றி இறக்கி வைத்து அடுத்த நாள் சாப்பிட உடம்புக்கு நோய் எதிர்பு சக்தி கூடும்.

பச்சை தண்ணீர் நமது ஜீரண மண்டலத்திற்கு கடின தன்மை வாய்ந்த வஸ்து.தண்ணீரின் கடினத்தன்மையை மாற்றுவதற்கு, அந்தக் காலத்தில் நெல்லிமரக் கட்டையையும் தேற்றாங் கொட்டையையும் (தேத்தா விதை) பயன்படுத்தினார்கள். அதில் இருக்கும் பாலிபீனால் என்னும் பொருள், தண்ணீரில் இருக்கும் தாதுக்களை மென்மையாக்குவதால், நீரின் கடினத்தன்மை குறைந்து நமது ஜீரண மண்டலத்தின் வேலையை சுலபமாக்குகிறது.

இன்றைய மருத்துவமோ தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.அவர்கள் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்வது
இல்லை நாம் உண்ணும் மோர் தயிர் ரசத்தில் உள்ள தண்ணீரின் அளவை…?
இதை நீங்கள் என்றைக்காவது யோசித்தது உண்டா..? ஆம் என்பவர் மட்டும் என்னை தெடர்பு கொள்ளுங்கள். தண்ணீரை பற்றி மேலும் ரகசியங்களை உங்களுக்கு சொல்கிறேன்.

அம்மாவாசை தினத்தன்று சமைத்து சாப்பிடும் ஆகாரம் அனைத்தும் உடலுக்கு தீங்கானது ஆகையால் தான் நம் முன்னோர்கள் மாதம் ஒருமுறை
அம்மாவாசை நாளில் சூரியன் உதித்த நாளிகையில் இருந்து சூரியன் அஸ்தமிக்கும் நாளிகை வரை
தண்ணீரை தவிர எந்த ஒரு ஆகாரத்தையும் எடுக்க மாட்டார்கள் (விரதம் இருப்பதன் சூட்சுமம்).

இன்னொரு ரகசியத்தையும் சொல்லலாம் ஆனால் அதை சொல்லாமல் இருப்பது நல்லது என கருதி சொல்லாமல் விடுகிறேன்.

அதை பற்றி சொன்னால் நானே மனித இனத்தின் அழிவு  பாதைக்கு வித்திட்டது போல் ஆகிவிடும்.