அக்னி அஸ்திரம் எப்படி தயாரிப்பது

Agriwiki.in- Learn Share Collaborate

அக்னி அஸ்திரம் எப்படி தயாரிப்பது?

தயாரிக்க தேவையான பொருட்கள்
  1. புகையிலை அரை கிலோ,
  2. பச்சை மிளகாய் அரை கிலோ
  3. வேம்பு இலை 5 கிலோ
  4. பசுமாட்டு சிறுநீர் (கோமியம்) 15 லிட்டர்

மற்றும் மண்பானை.

தயாரிக்கும் முறை:

பசுமாட்டு சிறுநீர் (கோமியம்)15 லிட்டர், புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ இவற்றை மண்பானையில் (வேறு பாத்திரங்கள் பயன்படுத்தக்கூடாது ) போட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும்.

நான்கு முறை மீண்டும் மீண்டும்  கொதிக்க வைக்கவேண்டும்.

இறக்கியபிறகு, பனையின் வாயில் ஒரு துணியைக் கொண்டு கட்டி 48 மணி நேரம் அப்படியே வைத்துவிடவேண்டும்.

நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும். அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம்.

இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

அக்னி அஸ்திரம் எப்படி பயன்படுத்துவது?

100 லிட்டர் நீரில்,.3 லிட்டர் அக்னி அஸ்திரம், 3லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் போதும் புழு, பூச்சிகள் காணாமல் போய்விடும்.