இலந்தை தேனீக்கள் மற்றும் பலநூறு பூச்சிகளின் உணவுக்கான மரம்

இலந்தை - தேனீக்கள் மற்றும் பூச்சிகளின் உணவுக்கான மரம்
Agriwiki.in- Learn Share Collaborate

இலந்தைமரம்

தேனீக்கள் மற்றும் பலநூறு பூச்சிகளின் உணவுக்கான மரம்……….

#விதைஇயக்கம்
#தெற்குஆனைக்கூட்டம் | #சிவகாசி

*மரத்தின் பெயர் 😗 *இலந்தை மரம்**

தாவரவியல் பெயர் : சிசிபஸ் ஜுஜுபா

ஆங்கில பெயர் : Jujube tree

தாயகம் : இந்தியா

மண் வகை : அனைத்து வகை மண்ணிலும் வளரும் மரம்

தாவர குடும்பம் : ராம்னேசியே

பொதுப்பண்புகள் :

🌳 இலந்தை என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம்.

🌳 இந்த மரம் வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்டது. இலந்தை மரம் 30 அடி உயரம் வரை வளரக் கூடிய மரமாகும்.

🌳 வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம்.

🌳 குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும்.

🌳 புளிப்புச் சுவையுடைய திண்ணக் கூடிய பழங்களை உடையது.

🌳 பழங்களின் விதை மிகவும் கெட்டியாக இருக்கும்.

🌳 அமெரிக்க, நியூயார்க்கில் அதிகமாக இலந்தை காணப்படுகிறது.

🌳 தமிழகத்தின் வறட்சியான பகுதிகளில் இலந்தைமரம் அதிகம் வளர்கிறது.

பயன்கள் :

🌳 வைட்டமின் சத்துகள் அதிகம் கொண்ட இலந்தை பழம், உடல் சூட்டை தனித்து குளிர்ச்சி தரக்கூடியது. இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி, இரும்புச்சத்து, புரதம் மற்றும் தாது உப்புகள் அதிகமாக உள்ளது.

🌳 உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். அதனால் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள், பற்கள் வலுப்பெறும்.

🌳 உடல்வலியைப் போக்க உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.

🌳 இதன் இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும்.

🌳 உடலில் மேற்பகுதில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது இந்த இலைகளை அரைத்து கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.

🌳 இலந்தை பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

🌳 100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74%, மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.

🌳 இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.

🌳 இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன.

🌳 இலந்தை பழம் உண்பதால் மூளை புத்துணர்வு பெறும்.

🌳 இம்மரத்தின் வேர், பட்டை மற்றும் கொழுந்து இலைகள் மருத்துவப் பொருள்களாகப் பயன்படுகின்றன.

🌳 மரத்துப் பட்டையையோ, இலைகளையோ நன்றாக அரைத்து நெல்லிக்காயளவு தயிருடன் கலந்து குடிந்தால் வயிற்றிலுண்டான கொதிப்படங்கி வயிற்றுக் கடுப்பு, இரத்தபேதி நீங்கும்.

🌳 மரப்பட்டையை அரைத்து தேங்காய் எண்ணெய்யுடன் குழைத்து சிரங்குகள், உடம்பில் காயம்பட்ட இடங்களின் மீது தேய்த்தால் அவைகள் இருந்த இடம் தெரியாது.

வளர்ப்பு முறைகள் :

🌳 இலந்தையில் பல இரகங்கள் உள்ளன. பனரசி, உம்ரான், கோலா, கைத்தளி, முண்டியா மற்றும் கோமா கீர்த்தி ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

🌳 அனைத்து மாதத்திலும் பயிர் செய்ய ஏற்றது இலந்தை மரம். ஆனால் மார்கழி மாதம் சிறந்த பருவம் ஆகும்.

🌳 இலந்தையை உவர் நிலங்களில் வறட்சிப் பகுதிகளில் பயிரிடலாம். இருமண்பாட்டு செம்மண் நிலங்கள் மிகவும் உகந்தவை.

🌳 குளிர்ந்த நீரில் 24 மணி நேரம் ஊரவிட்டு விதையை நேர்த்தி செய்ய வேண்டும். விதைகள் தரம் பிரிக்கப்பட்டு , பெரிய விதைகளை விதைத்துவிட வேண்டும்.

🌳 நிலத்தை நன்கு உழுது 8 மிட்டர் இடைவெளியில் 1 மிட்டர் ஆழ, அகல மற்றும் நீளத்தில் குழிகள் எடுக்க வேண்டும். பின்பு 2 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் மேல் மண் கொண்டு குழிகளை நிரப்பி நீர் பாய்ச்சி குழிகளை ஆறவிட வேண்டும்.

🌳 6- 12 மாதங்கள் ஆன நாற்றுகளை குழிகளில் நடவு செய்யலாம்.

🌳 இளஞ்செடிகளுக்கு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும். மானாவாரியாகப் பயிரிடப்பட்டு இலந்தை மரங்களுக்குத் தேவையான நீரைத் தேக்குவதற்கு சாய்வுப் பாத்திகளை பெரிதாக அமைக்கவேண்டும்.

🌳 எனினும், காய்ப்பிடிப்பு நேரத்தில் நீர் பாய்ச்சினால் அதிகமான காய்ப்பிடிப்பு ஏற்படும். காய்க்கத் தொடங்கிய இலந்தை மரங்களுக்கு குறைவான நீர் போதுமானது.

🌳 ஒரு வருட வளர்ச்சியுள்ள மரத்திற்கு ஒரு வருடத்திற்கு 20 கிலோ தொழு உரம், 1 கிலோ அளவுக்கு தழை, சாம்பல், மனிசத்துள்ள உரம் இட வேண்டும். இரண்டு வருடத்திற்கு பின் 30 கிலோ அளவுள்ள உரங்களை இட வேண்டும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் கவாத்து செய்ய வேண்டும்.

🌳 பழங்கள் பழுத்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். காய்கள் பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும்பொழுது அறுவடை செய்ய வேண்டும். ஒரு மரத்தில் இருந்து ஆண்டு ஒன்றிற்கு 70 – 80 கிலோ பழங்கள் வரை கிடைக்கும்….

Arun Sankar