உயிர் உரங்கள்

மண் பரிசோதனை செய்வது எப்படி
Agriwiki.in- Learn Share Collaborate

உயிர் உரங்கள்

Siva Sankar 

 

ஆற்றல்மிக்க ஆய்வு வகை நுண்ணுயிரிகளுடைய செயலுள்ள உயிரை அல்லது செயலற்ற உயிரணுவை கொண்ட தயாரிப்பே உயிர் உரங்கள் ஆகும். இதனால், விதை அல்லது மண்ணின் வழியாக வேர்த்தண்டின் தொடர்பால் அளிக்கும் போது பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்க உதவி செய்கிறது. பயிர்கள் மண்ணிலிருந்து ஊட்டச் சத்துக்களை நுண்ணுயிரி முறைகளால் எளிதில் எடுத்துக் கொள்ள உதவுகிறது.இயற்கையில் நுண்ணுயிரிகள் ஆற்றல் மிக்கதாக இல்லாமல் இருக்கும். செயற்கையாக இந்த நுண்ணுயிரிகளைப் பெருக்கி மண்ணில் நுண்ணுயிரிகளின் செயலை அதிகப் படுத்தலாம்.ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையில் உயிர் உரங்களின் பயன்பாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இரசாயன உரங்களுக்கான மாற்றாக நிலையான வேளாண்மையில், இந்த உயிர் உரம் விலை குறைவாகவும், ஊட்டச்சத்துக்களைப் புதுப்பித்தலுக்கான ஆதாரமாக இருக்கிறது.

ரைசோபியம்

ரைசோபியம் ஒரு மண்ணில் வாழக்கூடிய நுண்ணுயிரி. இது பயிறு வகை பயிர்களின் வேர்களில் வாழ்ந்து, காற்றிலுள்ள தழைச்சத்தை இணை வாழ்த் தன்மையுடன் நிலைப்படுத்துகிறது. வேர் முடிச்சுக்களில் தன்னிச்சையாக வாழும் நுண்ணுயிரிகளிலிருந்து ரைசோபியத்துடைய வெளித் தோற்றம்,இயல்நிலை வேறுபடுகிறது. தழைச்சத்தின் அளவை நிலைப்படுத்துவதில் இது ஆற்றல் மிகுந்த உயிர் உரமாகும்.

பயன்கள் :

வளிமண்டலத்திள் உள்ள தழைச்சத்தைமண்ணில் நிலைநிறுத்துகிறது.

பரிந்துரைக்கப்படும் பயிர்கள்:

அனைத்து பயறு வகைப் பயிர்களுக்கும்.(
உளுந்து, பாசிப்பயறு, அவரை, துவரை, மொச்சை, நிலக்கடலை , காராமணி)

அசோஸ்பைரில்லம்

அசோஸ்பைரில்லம் லிபோபெரம் மற்றும் அசோஸ்பைரில்லம். ப்ரேஸிலென்ஸ் (முன்பு ஸ்பெரில்லம் லிபோபெரம்) மண்ணில் உயிர் வாழக் கூடியவை. புல்வகை பயிர்களில் வேர்த்தண்டுப்பகுதி மற்றும் வேர்தக்கைப் பகுதியின் இடைப்பட்ட பகுதிகளில் உயிர் வாழும். நுண்ணுயிரி பேரினமான அசோஸ்பைரில்லம் வேர் மற்றும் மண்ணின் மேல்பகுதியில் உள்ள பயிர்களிலிருந்து தழைச்சத்தை நிலைப்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகள் பிரித்தெடுக்கப்பட்டது.

பயன்கள்

வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தைமண்ணில் நிலைநிறுத்தும்.

பரிந்துரைக்கப்படும் பயிர்கள்:

நெல் மற்றும் தானிய வகை பயிர்கள்.

 

அசட்டோபாக்டர்:

இது தன்னிச்சையாக வாழும். காற்றில் உள்ள தழைச்சத்தை நிலைப்படுத்துகிறது. இது உயிர் உரமாக பயிறுவகை அல்லாத பயிர்களுக்கு முக்கியமாக நெல், பருத்தி, காய்கறி மற்றும் பல பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அசட்டோபாக்டர் உயிரணுக்கள் வேர்சூழ் மண்டலத்தில் அதிகளவில் இருக்கும். மண்ணில் குறைவாக உள்ள அங்ககப் பொருளால் அசட்டோபாக்டர் வளர்ச்சி மண்ணில் பாதிக்கும்.

பயன்கள்:
வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை
மண்ணில் நிலைநிறுத்தும்.

அசிட்டோபாக்டர்:
இது கரும்பு ,சர்க்கரை வள்ளிக் கிழங்கு, இனிப்பு சோளம் உடன் இணைந்திருக்கும் நுண்ணுயிரி. ஒரு வருடத்திற்கு ஒருஎக்டர்க்கு 30 கிலோ தழைச்சத்தை நிலைநிறுத்துகிறது. இதுகுறிப்பாக கரும்பு பயிருக்காக வாணிபமாக்கப்பட்டுள்ளது.விளைச்சல் ஒரு எக்டர்க்கு 10 – 20 கிலோ அளவும், 10 – 15 சதவீத அளவு சர்க்கரை அளவையும் அதிகப்படுத்துகிறது.

பாஸ்போ பாக்டீரியா:

பயன்கள்:

மண்ணில் கரையாத நிலையிலுள்ள மணிச்சத்தை கரைத்து பயிர்களுக்கு கொடுக்கிறது.

பரிந்துரைக்கப்படும் பயிர்கள்:

அனைத்து பயிர்களுக்கும்.

 

வேர் உட்பூசாணம் (வேம்): VAM

ஊட்டச்சத்துக்களை சேமித்து வைத்துக் கொள்ள குமிழிகளையும், வேரில் ஊட்டச்சத்துக்களை பிரிப்பதையும்கொண்ட பேரினங்களான குளோமஸ், அக்லூஸ்போரா, ஸ்கிளிரோ சிஸ்ட், என்டோகோன் ஆகியவற்றின் உடைய உயிரணுக்குள்ளே இருக்கும் கட்டுப்பட்ட பூஞ்சான் உள்ளுறைக் கூட்டுயிரினால் ஊட்டச்சத்துக்கள் முக்கியமாக மணிச்சத்து, துத்தநாகம், கந்தகம் போன்றவை மண்ணிலிருந்துவேர்த்தக்கையின் உயிரணுக்களுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

பொதுவான பேரினமான குளோமஸின் பலதரப்பட்ட வகைகள் மண்ணில் பரவி இருக்கின்றன. தழைச்சத்தை நிலைநிறுத்துவதில் ஏ. எம். பூஞ்சானின் பங்களிப்பு பயிருக்கு அதிகளவில் இருந்தாலும், இதை பெரியஅளவில் உற்பத்தி செய்வது தடையாக உள்ளது.

பரிந்துரைக்கப்படும் பயிர்கள்:

அனைத்து பயிர்களுக்கும்.

பயன்படுத்தும் முறை மற்றும் அளவு:

 

1.விதை நேர்த்தி:
600 கிராம் உயிர் உரத்தை ஆரிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்யலாம்.

2.வேர் குளியல்:
600 கிராம் உயிர் உரத்தை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து நாற்றுக்களின் வேர்களை அதில் நனைத்து நடவு செய்யலாம்.

3.வயலில் இடுதல்:
10 கிலோ உயிர் உரத்தை 100 கிலோ தொழுஉரம் அல்லது மணலுடன் கலந்து வயலில் இடலாம்.

 

உயிர் உரங்களின் பொதுவான பயன்கள்:

 

  • முளைப்புத் திறனை அதிகரிக்கிறது.
  • பயிரின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
  • மண்ணில் உள்ள நுண்ணூட்டங்களை எளிதில் பயிர்களுக்கு கிடைக்ச் செய்கிறது.
  • மகசூலை  அதிகரிக்கிறது.
  • பயிரில் தோன்றும் நோய்களை கட்டுப்படுத்துகிறது.
  • வறச்சியை தாங்கி வளரச் செய்கிறது.

குறிப்பு:

உயிர் உரங்களை நேரடியாக சூரிய ஒளி படும் இடங்களில் வைக்கக் கூடாது.

30 டிகிரி வெப்பநிலைக்குக் குறைவான இடங்களில் மட்டுமே சேமித்து வைக்க வேண்ம்.

பூச்சிக் கொல்லி, பூஞ்சாணக்கொல்லி மருந்துகள் மற்றும் இதர ரசாயன உரங்களுடன் கலக்கக் கூடாது.

 

சைனோபாக்டீரியா:

தன்னிச்சையாக உயிர்வாழும் மற்றும் இணைவாழ் தன்மையுடைய சைனோபாக்டீரியா இந்தியாவின் நெல் சாகுபடிமுறை சூழ்நிலைக்கு தகுந்தவாறு இருக்கிறது. நெல் வயல்களில் ஒரு எக்டர்க்கு 10 கிலோ என்ற அளவில் மண் கலந்த கட்டிகளாக அளிக்கப்படுகிறது. முடிவில் இருக்கக்கூடியப் பொருள் வெளியில் உள்ள பொருள்களால் மாசுபடுகிறது மற்றும் அடிக்கடி பாசியின் வளர்ச்சி இருக்கிறதா என்றும் கண்காணிக்க முடிவதில்லை.நெல் பயிருக்கு அளிக்கக்கூடிய பிரபலமான உயிர் உரமாக இருந்தாலும், தற்போது இந்தியாவில் உள்ள விவசாயிகள் (தென் மாநிலங்களைத் தவிர குறிப்பாக தமிழ்நாடு) பயன்படுத்துவது இல்லை. பாசியை வயலில் வளர்ப்பதால், சாதகமான சூழ்நிலையில் தழைச்சத்து ஒரு எக்டர்க்கு 20 – 30கிலோ அளவு நிலைப்படுத்தப்படுகிறது.

அசோலா:

அசோலா தண்ணீரில் தன்னிச்சையாக மிதக்கக்கூடிய பெரணியாகும். இது காற்றிலுள்ள தழைச்சத்தை நீலப்பச்சைப் பாசியான அனபீனா அசோலாவுடன் இணைந்து நிலைப்படுத்துகிறது.நஞ்சை நிலத்தில் விளையும் நெல்லுக்கு அசோலா உயிர் உரமாக பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு எக்டர்க்கு 40 – 60 கிலோ தழைச்சத்தை நெல்பயிருக்கு தருகிறது.

பி.பி.எப்.எம்: (பிங்க் பிக்மென்டட் பேகல்டேட்டிவ் மெத்லோடிராப்ஸ்)

வறட்சி ஏற்படும் சமயங்களில், இந்த”பி.பி.எப்.எம்.,’ நுண்ணுயிரியை தெளிப்பதன் மூலம், பயிர்களின் இலைகளின், மேற்பரப்பில் உள்ள துளைகள் மூடப்படும். இதன்மூலம், நீராவியாகும் செயல் தடுக்கப்படும். இதனால், 10 முதல் 15 நாட்கள் வரை பயிர்கள் வறட்சியை தாங்கி நிற்கும்.

பரிந்துரைக்கப்படும் பயிர்கள்:

நெல்லிற்கு மட்டும்.