ஒளிச்சேர்க்கையும் உணவு உற்பத்தியும்

ஒளிச்சேர்க்கையும் உணவு உற்பத்தியும்
Agriwiki.in- Learn Share Collaborate

பஞ்ச பூதங்கள் – ஒளிச்சேர்க்கையும் உணவு உற்பத்தியும்

பஞ்ச பூதங்கள்:

பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் பஞ்ச பூதங்களின் உருவாக்கப் பட்டுள்ளன. தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், நுண்ணுயிர்கள் என அனைத்தும் பஞ்ச பூதங்களால் ஆனது. இவை நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஐந்து பூதங்களாக உள்ளன.

நிலம்: தாவர உடல் 1.5 சதவீதம் தனிமங்கள் உள்ளன. இவை மண்ணில் இருந்து கிடைக்கிறது
நீர்: தாவர உடல் 78 சதவீதம் நீரால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நீர் மழை மூலமாக கிடைகிறது.
நெருப்பும் காற்றும் 20.5 சதவீதம், காற்று சூரிய ஆற்றல் மூலமாகவும், காற்று வளிமண்டலத்தில் இருந்து கிடைக்கிறது.
ஆகாயம் அண்டவெளிசக்தியாக அனைத்திலும் நிறைந்துள்ளது.

தாவரங்கள் – தன்னிறைவான இயற்கையின் அமைப்பு

இயற்கை ஒரு அற்புதமான முறையை உருவாக்கியுள்ளது, இதன் மூலம் ஊட்டசத்துக்கள் தாவரங்களுக்கு கிடைக்கிறது. மனிதனின் எந்த உதவியும் தேவையில்லை. அடர்ந்த காடுகளை உருவாக்குவது இயற்கை, மனிதர்கள் அல்ல. நாம் காடுகளின் இலைகளை எடுத்து பரிசோதித்தால் எந்த ஊட்டசத்திலும் எந்தவித குறைபாடும் நாம் பார்பதில்லை, அப்படியானால் ஊட்டசத்துக்கள் அனைத்தும் தாவரங்களுக்கு கிடைக்கிறது. அப்படியானால் தாவரங்கள் சுயமாக வளரும், சுயமாக வாழும், தன்னிறைவான இயற்கையின் அமைப்பாகும். இதே முறையில் நம் பண்ணைகளிலும் பழத் தோட்டங்களிலும உருவாக்க வேண்டும்.

இயற்கை மனிதனுக்கு படைக்கும் சக்தியை வழங்க வில்லை நம்மால் எதையும் உருவாக்க முடியாது நம்மால் பல பொருட்டகளை கலந்து சேர்க்க மட்டுமே முடியும். அறிவியல் மிகவும் முன்னேறி உள்ளது. ஆனால் நம்மால் அரிசியை தொழில் சாலையில் உற்பத்தி செய்ய இயலாது. மண்ணில் ஒரு விதை விதைத்தால் நூறு விதைகள் கிடைக்கின்றன. இது படைப்புத் தொழில் இதை இயற்கையே செய்கிறது, நான் உணவை உருவாக்குகிறேன் என்பது மனிதனின் அகங்காரமாகும்.

ஒளிச்சேர்க்கையும் உணவு உற்பத்தியும்

இது முக்கியமான பாடம் என்பதைமறவாதீர்கள், தாவர இலைகள் பச்சையாக இருப்பதற்கு காரணம் அதில் உள்ள குரோபில் என்னும் பொருளாகும் இதை பச்சையம் என்கிறோம். இலைகள உணவு தயாரிப்பதற்கு கார்பான் டை ஆக்சைடு, நீர், மற்றும் சூரிய சக்தி தேவைப்படுகிறது.

பச்சை இலைகளில் எண்ணற்ற இலைத்துளைகள் உள்ளன., இவை ஸ்டொமேட்டா (stomata) எனப்படுகிறது, இந்த நுண் துளைகள் சுற்றியும் ஒரு சிறப்பான செல்கள் உள்ளன, இவற்றை பாதுகாப்பு செல் என்கிறோம் (guard cell). ஸ்டொமேட்டா திறந்து மூடும் பணியை இந்த பாதுகாப்பு செல்கள் செய்கின்றன.

இலைகளின் காற்றுப் போக்குவரத்தும் இந்த நுண்துளை வாயிலாக நடைபெறுகின்றன. உணவு தயாரிக்க சூரிய சக்தி தேவைப்படுகிறது. ஒரு சதுர அடி இலைப்பரப்பு 1250 கிலோ கலோரி சக்தியை ஒரு நாளில் பெறுகிறது. இதில் ஒரு சதவீத சக்தியை மட்டுமே சேமிக்க முடியும். அப்படியானால் எந்த ஒரு தாவரத்தில் ஒரு சதுர அடி இலைபரப்பும் 12.5 கிலோ கலோரி சக்தியை மட்டுமே சேமிக்கிறது, சூரிய சக்தி போட்டான் ஆனாக வருகிறது. அந்த சூரிய சக்தி இலைகளில் சேமிக்கப்படுகிறது. அவை பச்சையதில் உள்ள குளோரோல்லில் உள்ள ATP யில் (அடினோசின் ட்ரை பாஸ்பேட்) சேமிக்கப்படுகிறது.

உணவு தயாரிக்க கார்பன் டை ஆக்சைடு வாயு தேவைப்படுகிறது, சுத்தமான காற்றில் கரியமில வாயுவின் அளவு 280 முதல் 300 ppm ஆக உள்ளது. இலைகள் காற்றில் இருந்து காரியமில வாயுவை எடுத்து பச்சையத்தில் சேமிக்கின்றன. இலையில் சேமிக்கப்படும் சூரிய சக்தி கரியமில வாயுவின் மூலக்கூறை பிளக்கிறது. ஒரு அணு கார்பன் டை ஆக்சைடு பிரிக்கப்பட்டு கார்பன் இலையில் சேர்கிறது, ஆக்சிஜன் காற்றில் விடுவிக்கப்படுகிறது.

ஒளிர்சேர்க்கையின் போது தண்ணீர் தேவைப்படுகிறது. வேர்கள் ஆஸ்மாசிஸ் மூலம் தண்ணீரை இலைகளுக்கு அனுப்புகின்றன. அப்போது இலைகளில் சேமிக்கப் பட்டிருக்கம் சூரிய சக்தி மற்றும் வேதிவிணை மூலம் இணைந்து கார்பனும் நீரும் ஒன்றாக இணைகிறது. இந்த உயிர் வேதிவினை மூலம் காபோ ஹைட்ரேட் உருவாகிறது. (க்ளுக்கோஸ்- C6 H12 O6) இது கச்சா சர்க்கரை எனலாம்.

தணணீரில் இரண்டு அணு ஆக்சிஜன் மற்றும் ஒரு அணு ஹைட்ரஜன் உள்ளது, கச்சா சர்க்கரை (க்ளுக்கோஸ்- C6 H12 O6) உருவாக்குவதற்கு ஆறு அணு கார்பன் 12 அணு ஹைட்ரஜன் 6 அணு ஆச்கிஜன் என்றாக சேர்கிறது. அப்போது கச்சா சர்க்கரை உருவாகிறது.

1 சதுர அடி இலை பரப்பு 12.5 கிலோ கலோரி சூரிய சக்தியை உட்கிரகித்து, 4.5 கிராம் கச்சா சர்க்கரையை ஒரு நாளில் உற்பத்தி செய்கிறது. இந்த 4.5 கிராம் கச்சா சர்க்கரையில் 25 சதவீதம் சர்க்கரை வேரால் வேளியே சுரக்கப்படுகிறது. இது வேர் பகுதியில் உள்ள நுண்ணுயிர்களுக்கு செல்கிறது. நுண்ணுயிர்கள் பயிருக்கு தேவையான சத்துக்களை எடுத்துச் தருகின்றன, இது கூட்டுவாழ்வு எனப்படுகிறது.

இந்த சர்க்கரையில் ஒரு பகுதி இலைகளில் சுவாசத்திற்கும் பயன்படுகிறது. ஒரு பகுதி சர்க்கரை தாவர வளர்ச்சிக்கு பயன்படுகிறது. மீதி உள்ள சர்க்கரை தண்டிலும் கிளைகளிலும் சேரிக்கப்படுகிறது, புரதம் தயாரிக்க நைட்ரஜன் அவசியம் ஆகும்.

காற்று நைட்ரஜனின் கடல் ஆகும் 78,6 சதம் நைட்ரஜன் உள்ளது. நைட்ரஜன் நிலைப்படுத்தும் பேக்டீரியாக்கள் நைட்ரஜனை வேர்பகுதியில் சேமிக்கிறது. இரு வித்திலைப் பயிர்களின் வேர் முடிச்சுகளில் நைட்ரஜன் சேமிக்கப்படுகிறது. நைட்ரஜன் நிலைப்படுத்தும் பேக்டிரியாக்கள் மூலம் கிடைத்தநைட்ரஜனை வேர்கள் இலைகளுக்கு வழங்குகிறது.

நைட்ரஜனும் சர்க்கரையும் சேர்ந்து அமினோ அமிலங்கள் கிடைக்கின்றன. சூரிய சத்தி உதவியுடன் சில அமிலோ அமிலங்கள் இணைந்து புரதம் உற்பத்தியாகிறது. இந்த புரதங்கள் தாவரத்தின் தண்டு கிளைகள், வேர்கள் போன்ற இடங்களின் சேமிக்கப்பட்டு தாவரம் வளர்கிறது. தாவர வளர்ச்சி என்றால், புரதம் தண்டிலும் கிளைகளிலும் படிவது ஆகும். 100 கிலோ புரதம் தண்டிலும் கிளைகளிலும் படிகிறது என்று வைத்துக் கொண்டால் அதல் 33 சதம் தானிய விளைச்சல் கிடைக்கிறது அல்லது 50 கிலோ பழ உற்பத்தி கிடைக்கிறது.

அப்படியானால் எந்த அளவு அதிகமாக புரதம் சேர்க்க முடிகிறதோ அந்த அளவுக்கு நமக்கு மகசூல் பெற முடியும். ஒரு சதுர அடி இலைபரப்பு 12.5 கிலோ கலோரி சூரிய சக்தியை சேமிக்கும் போது நமக்கு 1.5 கிராம் விதை உற்பத்தி கிடைக்கிறது அல்லது 2.25 சதவீதம் பழ உற்பத்தி ஒரு நாளில் கிடைக்கிறது. அப்படியானால் எந்த அளவுபட்சமாக நாம் சூரிய சக்தியை சூரிய சக்தியை இலைகளில் சேமிக்க முடிகிறதோ அந்த அளவு அதிக மகசூல் பெறமுடியும்.

உதாரணமாக 160 கிலோ கலோரி சூரிய சக்தியை ஒரு ஏக்கரில் சேமித்தால் 240 டன் கரும்பு அறுவடை செய்யமுடியும். எந்த அளவு அதிகபட்சமாக சூரிய சக்தியை இலைகளில் சேமிக்க முடியுமோ அந்த அளவு அதிகபட்சமாக விளைச்சல் கிடைக்கும்.

அப்படியானால் சூரிய ஒளியை கிரகிக்க நாம் இரண்டு வரிசைகளுக்கு இடையே தேவையான இடைவெளி விடவேண்டும். அப்போது சூரிய ஒளி கீழிருக்கும் இலைவரை செல்லும் இதற்காக இரண்டு மரங்களுக்கு இடைவெளி சரியாக இருக்க வேண்டும் அதாவது ஒவ்வொன்றும் உரசாமல் இருக்க வேண்டும் அப்படி தேவையான இடைவெளியை நாம் விடவேண்டும். மரங்களின் உயரம் அகலத்திற்கேற்ப சரியான இடைவெளி இருக்க வேண்டும். இயற்கையான நிழல் குடைக்கான இடைவெளி இருக்க வேண்டும், உதாரணமாக வாழை, பப்பாளி, கரும்பு போன்றவை 8×8 என்ற இடைவெளியில் நடவேண்டும்.

ஒளிச்சேர்க்கையை அதிகரிக்கும் ஜீவாமிர்தமும் கனஜீவாமிர்தமும்

இந்நிலையில் இலைப்பரப்பை அதிகரித்தால் அதிக மகசூல் கிடைக்கும். இலைப் பரப்பை (leaf index) அதிகரிப்பது எப்படி?.

ஜீவாமிர்தம் கொடுக்கும் போது இலையில் நீளமும் அகலமும் அதிகரிக்கிறது ஒளிச்சேர்க்கை நடைபெறும் பரப்பு அதிகரிப்பதால் மகசூல் அதிகரிக்கிறது.

சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி
ஈஷா விவசாய இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.