பாரம்பரிய விவசாயத்தில் டன் கணக்கில் சாணஎரு பயன்படுத்துகிறோம். சாண எருவில் களைகளின் விதைகள் லட்சக் கணக்கில் உள்ளன. இவை ஆறு வருட காலம் வரை செயலற்ற நிலையில் உயிருடன் இருக்கக் கூடியவை, இதனால சாணஎரு போட்டுவிட்டால் களைகள் 6 வருடம் வரை வளருகின்றன.
Tag: Subash palekar
இயற்கைக்கு திரும்புவோம்

நமது நோக்கம் இரசாயன உரங்களைத் தவிர்ப்பது மட்டுமல்ல, அஹிம்சையும், பல்லுயிர்களை பாதுபாப்பதும், கிராம மாதிரிகளை உருவாக்குவதும் ஆகும், இதுவே சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாய இயக்கத்தின் நோக்கமாகும்.
நீர் மேலாண்மை

பயிர்களுக்கு பாசன நீர் கொடுக்கும் போது ஒவ்வொரு சாலிலும் பாசன நீர் கொடுத்தால் 100 சதம் தண்ணீர் கொடுக்கிறோம், இதற்கு பதிலாக ஒன்று விட்டு ஒரு சாலில் கொடுத்தால் அந்த தண்ணீர் இரண்டு பக்கமும் இருக்கும் தாவரங்களுக்கு கிடைக்கிறது. எனவே ஒவ்வொரு சாலிலும் தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒன்று விட்டு ஒரு சாலில் தண்ணீர் கொடுத்தால் 50 சதம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
வாப்சா என்பது என்ன

இயற்கையான மண்ணில் இரண்டு மண் துகள்களுக்கு இடையே வெற்றிடங்கள் உள்ளன. இத்ந வெற்றிடங்களை வாக்கியோல் என்கிறோம் இந்த துவாரங்களின் மிகப்பெரிய வலைப்பின்னல் மண்ணமைப்பில் உள்ளது.
இந்த வெற்றிடங்களில் தண்ணிர் இல்லை. இந்த வெற்றிடங்களில் 50 சதவீதம் நீராவி மற்றும் 50 சதவீதம் காற்று உள்ளது. இந்த முழு சூழ்நிலைகளும் சேர்ந்ததே வாப்சா ஆகும்.
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூச்சிகள்

பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் பயிர்களின் எதிரிகள் என்று சிலர் கூறுகிறார்கள், உண்மை என்னவென்றால் எந்த ஒரு பூச்சியும் தாவரத்திற்கு எதிரி இல்லை, பூச்சிகள் தாவரத்தின் நண்பர்கள். இயற்கை யாருக்கும் யாரையும் எதிரியாக உருவாக்கவில்லை.
பேரூட்டங்களின் மூலம் எது

மண்ணை சோதிக்கும் போது மண்சோதனை முடிவுகள் பாஸ்பேட் உள்ளது என்று கூறும் ஆனால் அவை கிடைக்கப் பெறாத நிலையில் இரு துகள் மற்றும் முன்று துகள் நிலையில் உள்ளது. வனத்தில் உள்ள மண்ணிலும் ஒரு துகள் பாஸ்பேட் இருப்பதில்லை. இரு துகள் மற்றும் முன்று துகள் பாஸ்பேட் மட்டுமே இருக்கிறது. வனத்தில் உள்ள தாவரத்தின் ஒரு இலையை எடுத்துக்கொண்டு ஆய்வகத்தில் சோதனை செய்தால் அந்த தாவரத்தில் பாஸ்பேட் குறைபாடில்லை என்றே முடிவுகள் கூறும். அதாவது அந்த தாவரத்திற்கு பாஸ்பேட் கிடைத்துள்ளது, இதை வேர்பகுதிக்கு கிடைக்கச் செய்தது யார்? அவர்களே இரு துகள் மற்றும் மூன்று துகள் பாஸ்பேட்டை ஒரு துகள் பாஸ்பேட்டாக பிரித்துள்ளார்கள் யார் அவர்கள்?
ஒளிச்சேர்க்கையும் உணவு உற்பத்தியும்

பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் பஞ்ச பூதங்களின் உருவாக்கப் பட்டுள்ளன. தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், நுண்ணுயிர்கள் என அனைத்தும் பஞ்ச பூதங்களால் ஆனது. இவை நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஐந்து பூதங்களாக உள்ளன.