கோழிகளுக்கு மூலிகை கரைசல் தயாரிக்கும் முறை

ஒரு லீட்டர் நீருக்கு 2ml தொடக்கம் 5ml வரை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை கலந்து கொடுத்து வந்தால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

கோழிகளுக்கு மூலிகை கரைசல் தயாரிக்கும் முறை

*தேவையான பொருட்கள்*

1. நாட்டு சர்க்கரை அல்லது சாதாரண சர்க்கரை 1 கிலோ
2. கோழிகளின் மருத்துவ தேவைக்கு பயன்படுத்தும் மூலிகைகள் 1 கிலோ
[கற்பூரவள்ளி (ஓமம்), கிழாநெல்லி, குப்பை மேனி, வேப்பிலை, முருங்கை இலை, கறிவேப்பிலை, வெற்றிலை, கொய்யா இலை, தூதுவளை, நொச்சி, துளசி, கல்யாண முருங்கை (முல்லு முருங்கை), மணத்தக்காளி கீரை, வில்வ இலை,]
இவற்றில் உங்களது சூழலில் காணப்படும் மூலிகைகள் 1 கிலோ உடன் பறித்து (வாடாத இலைகள்) எடுத்து கொள்ள வேண்டும்.

சர்க்கரையின் அளவினை விட மூலிகைகளின் அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நாட்டு சர்க்கரையுடன் மூலிகைகளை ஒன்று சேர்த்து இடித்து (சாரு பிழியும் அளவுக்கு இடித்தால் போதுமானது) பிளாஸ்டிக் வாலியில் (குறைந்தது வாலியில் முக்கால் பகுதி நிறையும் அளவுக்கு

வாலியினை தேர்வு செய்ய வேண்டும்) இட்டு கொட்டன் துணியினால் (இந்த கலவையில் உருவாகும் நுண்ணுயிர்கள் சுவாசிக்க கொட்டன் துணியினால் மூடினாள் பொருத்தமாக இருக்கும்) மூடி சுற்றி கட்டி 7 நாட்களுக்கு திறந்து பார்க்காமலும் அசைக்காமலும் நிழலான இடத்தில் வைத்தல் வேண்டும்.

7 நாட்களுக்கு பின்னர் வெள்ளை பூஞ்சை படர்ந்து காணப்படும் இதுவே தயாராகி விட்டது என்பதற்கு அடையாளம். 7 நாட்களுக்கு பின்னரும் வெள்ளை பூஞ்சை உருவாகவில்லை எனில் மேலும் 3 நாட்களுக்கு மூடி வைத்து எடுத்து கொள்ளலாம். வெள்ளை பூஞ்சை உருவான பிறகு தாமதிக்காமல் (வெள்ளை பூஞ்சை மஞ்சளாக மாறினால் அது பாவனைக்குதவாது) அந்த கலவையினை பிழிந்து சாற்றினை மாத்திரம் எடுத்து கொள்ள வேண்டும். எடுக்கப்ட்ட சாற்றினை பத்திரப்படுத்தும் பொருட்டு போத்தலில் அடைத்து வைக்கும் போது அதன் மூடியினை இருக்கமாக மூடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் அதே நேரத்தில் நிழலான இடத்தில் பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டும்.

*பாவனை முறை*
ஒரு லீட்டர் நீருக்கு 2ml தொடக்கம் 5ml வரை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை கலந்து கொடுத்து வந்தால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்