சரியா கணக்கு போட்டு உங்க மேஸ்திரிய அசத்துங்க

சரியா கணக்கு போட்டு உங்க மேஸ்திரிய அசத்துங்க
Agriwiki.in- Learn Share Collaborate
சரியா கணக்கு போட்டு உங்க மேஸ்திரிய அசத்துங்க..

#வீடு_கட்டுமானம்: #சில_உபயோகமான_தகவல்:

ஒரு கன மீட்டர்(cubic meter)9″ கனம் கொண்ட செங்கல்சுவர் கட்ட 450 செங்கற்கள் தேவை. சிமென்ட் 1.5 மூட்டை தேவை!

அரைக்கல் சுவர் கட்ட(Half bricjk-4.5′ thick wall) கட்ட ஒரு சதுர மீட்டருக்கு 45 செங்கற்கள் தேவை. சிமென்ட் 0.25 மூட்டை தேவை!

ஒரு சதுரம் (10’x10′) சுவர் பூச்சுவேலைக்கு(wall plastering) 1.5 மூட்டை சிமென்ட் தேவை!

1:2:3 சதவீதம் கலவை கொண்ட 4.5″ கனம் கொண்ட ஒரு சதுரம் ரூப் கான்கிரீட்-RCC (ஒரு கன மீட்டர்) போட 7 மூட்டை சிமென்ட் தேவை!

1:4:8 சதவீதம் கொண்ட PCC கான்கிரீட்(1.5 இஞ்ச் ஜல்லி கான்கிரீட்) போட 3 மூட்டை சிமெண்ட் தேவை!

டைல்ஸ் போட,கிரானைட் போட மற்றும் வெதரிங் கோர்ஸ் டைல் போட ஒரு சதுரத்திற்கு 2 மூட்டை சிமென்ட் தேவை!

வீட்டு வேலைக்கு 1 கன மீட்டர் கான்கிரீட்டுக்கு தோராயமாக 90 கிலோ கம்பி தேவை!

இன்னும் டிப்ஸ்கள் தொடரும்…