சுரைக்காய்

சுரைக்காய்
Agriwiki.in- Learn Share Collaborate
சுரைக்காய்

 

இரகங்கள் :

கோ 1, பூசா சம்மர் (நீளம்), பூசா சம்மர் (உருண்டை), பூசா மஞ்சரி, பூசா மேகதூத், அர்கா பகார்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை : பலவிதமான மண் வகைகளிலும் பயிர் செய்யலாம். வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. பனிவிழும் பிரதேசங்களில் இதனைப் பயிர் செய்ய முடியாது. சிறந்த மகசூலுக்கு கார அமிலத்தன்மை 6.5-7.5 இருத்தல்வேண்டும்.

பருவம் :

ஜீலை மற்றும் ஜனவரி

விதையும் விதைப்பும்

விதை அளவு : ஒரு எக்டருக்கு 3 கிலோ விதைகள்.
விதை நேர்த்தி : விதைப்பதற்கு முன் விதைகளை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும்.

ஒரு கிலோ விதைக்கு 1கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 100 கிராம் சூடோமோனாஸ் என்ற அளவில் உபயோகிக்கவேண்டும்.

சுரைக்காய் கோ 1

நிலம் தயாரித்தல்

நிலம் தயாரித்தல் மற்றும் விதைத்தல் : நிலத்தை அமைத்து 3-4 முறை உழவு செய்து கடைசி உழவின் போது எக்டருக்கு 10 டன் மக்கிய தொழு உரம் இடவேண்டும். பின்பு 2.5×2 மீட்டர் இடைவெளியில் வாய்க்கால்கள் 30x30x30 செ.மீ நீளம், அகலம், ஆழம் என்ற அளவில் குழிகள் எடுக்கவேண்டும். பின்பு ஒவ்வொரு குழியிலும் 5 விதைகளை நீர் ஊற்றவேண்டும். 15 நாட்கள் கழித்து குழி ஒன்றில் இரண்டு வளமாக செடிகளை விட்டு விட்டு மற்றவைகள களைந்துவிடவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

ஒவ்வொரு குழிக்கும் மக்கிய தொழு உரம் 10 கிலோ இடவேண்டும்.

நீர் நிர்வாகம்

பத்து, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சவேண்டும்.