ஜீவாமிர்தம் தயாரிக்க நாட்டுமாடு கோமியம்
சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாய முறையில் ஒரு நாட்டுபசு மாட்டைப் பயன்படுத்தி 30 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய முடியும்.
ஒரு நாட்டு மாடு ஒரு நாளைக்கு 10 கிலோ சாணம் தரக்கூடியது. ஒரு ஏக்கருக்கு பத்து கிலோ சாணம் என்ற வகையில் தினமும் ஒரு ஏக்கருக்கு சாணத்தைக் கொடுக்கிறது. இவ்விதம் ஒரு நாட்டு மாட்டை பயன்படுத்தி 30 ஏக்கருக்கு சிறப்பாக சாகுபடி செய்ய இயலும்.
பல விலங்குகளில் மாடுகளின் கோமியத்தை பல அளவுகளில் சோதனை செய்ததில் நாட்டு மாட்டின் ஐந்து முதல் பத்து லிட்டர் கோமியம் ஜீவாமிருதம் தயாரிக்க போதுமானது என கண்டறிந்தேன்.
வயதான மாடுகளின் கோமியம் சிறந்தது
நான் பல வயதுடைய நாட்டு மாடுகளைக் கொண்டு சோதனை செய்த போது புதிய சாணத்தை பயன்படுத்துவது சிறந்தது என்று கண்டறிந்தேன்.
ஆனால் நாட்டு மாட்டு கோமியம் எந்த அளவு பழையதாக இருக்கிறதோ அந்த அளவு சிறந்தது. அப்படியானால் நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்கமுடியும். நாட்டுமாட்டு கோமியத்தை எந்த வகையிலும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். ஏழைகளிடம் உள்ள நாட்டு மாட்டு கோமியத்தை வாங்கிக்கொண்டு அவர்களது தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
நாட்டுமாட்டு கோமியத்திற்கு மருத்துவ குணம் உண்டு. புண்ணை ஆற்றக்கூடியது, நோயெதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது. இதை மருந்தாக பயன்படுத்தலாம். நாட்டுமாட்டு கோமியம் கொண்டு பலவிதமான பொருட்களையும் தயாரிக்க முடியும். இதில் வளர்ச்சிக்கு அவசியமான நொதிகள் உள்ளதால் பயிர்களின் மேலும் தெளிக்கலாம். தண்ணீருடன் கலந்து 100:2 முதல் 100:5 என்ற அளவில் பயன்படுத்தலாம்.
நான் பல்வேறு வயதுள்ள நாட்டு மாட்டு சாணத்தை ஆய்வு செய்தபோது வயதான மாடுகளில் இருந்தே நல்ல தரமான மசாணமும் கோமியமும் கிடைக்கிறது என்பதைக் கண்டறிந்தேன்.
பால் கொடுக்கும் பசு அதிக சக்கதியை பால் தயாரிப்புக்கு செலவிடுவதால் பசுவின் சக்தி சாணத்தில் குறைவாகவே இருக்கும். எனவே பால் கொடுக்கும் பசுக்களின் சாணமும் கோமியமும் விவசாயத்திற்கு ஓரளவே உகந்ததாகும்.
ஆனால் பால் தராத வயதான பசுக்களின் சக்தி விரையமாகாமல் இருப்பதால் அதன் சக்தி முழுவதும் சாணத்திலும் கோமியத்திலும் வருகிறது. வயதான பசுக்களின் சாணம் கோமியம் ஜீவாமிர்தம் தயாரிக்க சிறந்தவை.
வயதான பசுவிற்கு தீவனம் கொடுக்கும் போது அதன் முழு சக்தியும் ஊட்டசத்துக்களும் 48 மணி நேரத்தில் நமக்கு கிடைத்துவிடுகிறது. அதோடு சாணத்தில் கூடுதலாக நுண்ணுயிர்களை சேர்த்துக் கொடுக்கிறது.
ஜீவாமிர்தம் தயாரிக்க நாட்டுப்பசுவின் சாணத்தை 100 சதம் பயன்படுத்த வேண்டும். அல்லது 50 சதவீத நாட்டுமாட்டு சாணம் மற்றும் 50 சதவீதம் நாட்டு எருதின் சாணத்தையும் பயன்படுத்தலாம். எருது சாணத்தை தனியாகப் பயன்படுத்த கூடாது. எருமை, ஆடு,பன்றி கோமியத்தை பயன் படுத்தகூடாது. சைவ உணவு உண்ணும் மனிதர்களின் கோமியத்தையும் பயன்படுத்தலாம்
ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை:
தேவையான பொருட்கள்
200 லிட்டர் (தண்ணீர் உப்புத்தண்ணீர் வேண்டாம்)
5 to 10 லிட்டர் நாட்டுப்பசுங் கோமியம்
10 கிலோ நாட்டு பசுஞ்சாணம்
நாட்டு சர்க்கரை ஒரு கிலோ
பயறு மாவு ஒரு கிலோ
வேர் அருகில் உள்ள செழிப்பான தோட்டமண் ஒரு கைபிடி
தண்ணீரில் சாணத்தையும் கோமியத்தையும் கலந்து கரைத்து வலது பக்கமாக சுற்றவும். வலதுபக்கமாக குச்சியை வைத்து சுற்றுவது அவசியம் அவசியம்.
இதில் ஒரு கிலோ நாட்டு சர்க்கரையை சேர்த்துக்கொள்ளவும் அல்லது ஒரு கிலோ இனிப்பான பழக்கூழ் (வாழை, மாம்பழம். சப்போட்டா. பப்பாளி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அதனுடம்ன ஒரு கிலோ பயறு மாவு சேர்த்து கலக்க வேண்டும். தட்டை. துவரை, காரமணி, கொள்ளுமாவு, கொண்டக்கடலை, பச்சைப்பயறு உளுந்த மாவு பயன் படுத்தலாம். முருங்கை விதையை பயன்படுத்தலாம். (சோயா, வேர்கடலையில் எண்ணை உள்ளதால் வேண்டாம். பட்டாணி மாவும் வேண்டாம் அதில் வாயு அதிகம்)
ஒரு கைபிடி வளமான மண் சேர்த்து குச்சி வைத்து வலது புறமாக (வலஞ்சுழியாக, பிரதட்சனமாக) கலக்கவும், அதன் பின் சணல் பை கொண்டு கட்டி நிழலான இடத்தில் வைக்கவும். ஏனெனில் ஜீவாமிர்தத்தில் சில நச்சு வாயுக்கள் குறைந்த அளவில் வெளியேறும் என்பதால் சணல் சாக்கு வைத்துதான் கட்டி வைக்கவேண்டும். 48 மணி நேரம் முதல் 15 நாட்கள் வரை நொதிக்க வைக்கவேண்டும். ஜீவாமிர்தம் தயாரிக்கும் தொட்டியின் மீது சூரிய ஒளியோ அல்லது மழை நீர்ரோ படக்கூடாது.
தினமும் காலையும் மாலையும் வலதுபக்கம் ஒருநிமிடத்திற்கு கலந்து விடவேண்டும். கலக்கும் போது காற்று ஜீவாமிர்தத்துடன் கலக்கும்.
48 மணி நேரத்தில் ஜீவாமிர்தம் தயாராகும் இதை பதிணைந்து நாட்கள் வரை பயன் படுத்தலாம். 7 வது நாள் முதல் 12 நாள் வரை பயன்படுத்துவது சிறந்த பலன்களைக் கொடுக்கும். 15 நாட்களுக்குப் பின் படிப்படியாக ஜீவாமிர்தம் கெடத் தொடங்கும் என்பதால் 15 நாளுக்கு பின் பயன்படுத்த வேண்டாம்.
ஜீவாமிர்தம் நுண்ணுயிர்கள் பெருகுவதற்கு சிறந்த வளர்ச்சி ஊடகம். ஆகும். பயன்படுத்துவதற்கு முதல் நாள் கலக்கிவிட்டால் காலையில் அது படிந்ததிருக்கும், மேலே தெளிந்த ஜீவாமிர்தமும், அடியில் திடமான படிவும் இருக்கும். மேலே உள்ள தெளிந்த ஜீவாமிர்தத்தை எடுத்து பயன் படுத்தவேண்டும். கீழே படிந்திருக்கும் கசடுடன் 180 லிட்டர் தண்ணீர் மட்டும் சேர்த்துக் மீண்டும் ஜீவாமிர்தம் தயாரித்துக் கொள்ளலாம். ஒரு முறை மட்டும் இப்படி செய்து கொள்ளலாம். தொடர்ந்து செய்யக் கூடாது.
ஜீவாமிர்தத்தை நேரடியாக பாசன நீருடனுடன் கொடுக்கலாம் அல்லது பயிர் அடியில் ஊற்றி விடலாம் மற்றொரு முறை ஜீவாமிர்தம் தெளிப்பாகும். இந்த மூன்று வகையிலும் ஜீவாமிர்தம் கொடுக்கலாம்.
ஜீவாமிர்தம் தயாரிக்க சிமெண்ட் தொட்டி, இரும்புத் தொட்டி, பிளாஸ்டிக் டிரம் போன்றவற்றை பயன்படுத்தலாம். எனினும்பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. கண்டிப்பாக செம்பால் ஆன பாத்திரத்தை பயன்படுத்தக்கூடாது.
சொட்டுநீர் பாசனம் செய்தால் அதில் வேர்பகுதி முழுவதும் ஈரமாகிறது கூடுதல் தண்ணீர் வேர் பகுதியிலேயே நிற்கிறது. அப்போது வேர்பகுதில் காற்றுத்துளைகள் நீரால் நிரைந்து விடுகிறது சல்லி வேர்கள் அழுகிவிடுகின்றன. இதனால் வைரஸ் தாக்குதல் ஏற்படும் வாய்ப்புள்ளது. உண்மையில் வேர்கள் குளிர்ந்த நீரையே விரும்புகின்றன, வெய்யில் காலத்தில் பாசன குழாய்கள் சூடாக இருக்கும் கூடுதல் தண்ணீரால் நீரும் வீணாகிறது.
சொட்டு நீர் பாசனத்தைவிட தெளிப்பு முறை சிறந்தது. சொட்டு நீர் இருந்தால் பரவாயில்லை சொட்டு நீர் மூடாக்கின் மேல் படும்படியாக மாற்றி அமைக்க வேண்டும்.
தஞ்சாவூர் மகேஷ், பொள்ளாச்சி சம்பத் குமார், மற்றும் வந்தவாசி வாசுதேவன் அவர்கள் அவர்கள் பண்ணையில் ஜீவாமிர்தம் விடும் முறையை விளக்கினார்கள் இதை பற்றி விளக்கம் பின்னர் வெளியிடப்படும்.
சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி
ஈஷா இயற்கை விவசாய இயக்கம்