நமது கிராமங்களில் அதிகமாக காணப்பட்ட மரங்கள் பனையும், வடலி (சிறு பனை ),புளியும்.எல்லா வீட்டருகிலும் வேப்பமரம் நடப்பட்டிருந்தது .வேப்பம் விதைகள் விற்கப்பட்டன ,பழத்தை சிறுவர்கள் உண்பர் வீட்டை சுற்றி மாமரமும் ,பலாமரமும் நட்டு வளர்க்கப்பட்டது ,
விளை நிலங்களில் தழை சத்து தேவைக்காக எளிதில் வளரும் வாவை ,பண்ணி வாவை ,கொன்றை ,சரகொன்றை மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டன .இந்த மரங்கள் சீசன் நேரங்களில் வண்ண மலர்களால் பூத்து குலுங்கும் .பூவரசு என்று அழைக்கப்படும் சீலாந்தி மரம் பரவலாக எல்லா இடங்களிலும் வளர்ந்து நிற்கும் .இதன் பூவை அடிப்படையாக வைத்து சீலாந்தி மஞ்சள் என்று ஒரு நிறத்தை குறிப்பிட்டனர் .
மஞ்சனாத்தி ,புங்கு ,பூலாத்தி,பின்னை ,நாவல் ,பூணல் , கறிச்சக்கை, கொல்லாவு,விளாத்தி, வாலான்கொட்டை , இலுப்பை ,இலந்தை ,உம்மை ,காட்டு சந்தனம் . சூடு கொட்டை தரும் மிருக்கு மரம் ,இலவு மரம் ,காட்டு நெல்லி .சப்போட்டா ,நெல்லி ,புளிச்சி காய்,நாரந்தி ,பப்பாளி ,பேரை மரங்கள் நிலங்களில் வளர்ந்தன சாமி விளையில் காத்தாடி மரங்கள் நிறைய நின்றன ,ஆயினியும் தேக்கும் மரத்துக்காக நடப்பட்டன .
ஆலஞ்சி சந்திப்பு குருசடிமுன் உயரமாக வளர்ந்த அசோகா மரங்கள் (நெட்டி லிங்கம் ) ,பள்ளியின் அடையாளமாக நின்ற அரச மரம் ,சந்தையின் உட்புறம் நின்ற பெரிய மரங்கள் ,கோயில் வளாகத்தில் நின்ற பலா மரம் ஆகியவை , மாற்றுவழியை சிந்திக்காமலே வெட்டி சாய்க்கப்பட்டன…