பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும் எளிய முறைகள்

பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும் எளிய முறைகள்
Agriwiki.in- Learn Share Collaborate

இயற்கை விவசாயி ரெங்கராஜன் அவர்கள் பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும் வழிமுறை கேட்டார் இதோ உங்கள் பார்வைக்கு….

இயற்கை முறையில் பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும் எளிய முறைகள் :

1) பொதுவாகக் காட்டுப் பன்றிகளுக்குப் பார்வை மற்றும் செவித்திறன் மிகவும் குறைவு.

2) இதை ஈடுசெய்யும் வகையில் அவற்றிற்கு மோப்பத்திறன் அதிகமாகும். ஆகவேதான் இது நெடுநேரம் தலைகுனிந்தே நீண்ட மூக்கினைத் தரையில் முகர்ந்து தான் விரும்பும் திசையில் பயணிக்கும்.

3) இவைகளுக்கு மோப்பத்திறன் அதிகம் உள்ளதால் பயிர்களை எளிதில் கண்டுபிடித்து விடுகிறது.

4) இந்தக் குணத்தினைக் கருத்தில் கொண்டு, காட்டுப் பன்றிகளால் பாதிக்கப்பட்ட தாங்கள் முடிதிருத்தும் கடையிலிருந்து மனித முடிகளைப் பெற்று விவசாயப் பயிர்களைச் சுற்றி வேலிப் போல் மெலிதான கோடுபோல் பரப்பி வையுங்கள்.

5) இந்த முடி பரப்பப்பட்ட இடங்களில் காட்டுப்பன்றி வரும்போது, அவை தன் மூக்கினால் அவ்விடத்தை நுகரும் போது இந்த மனித முடிகள் பன்றிகளின் நாசித் துவராங்களில் சென்றடைந்து எரிச்சலை உருவாக்கும்.

6) இதன் மூலம் அவை பாதிப்புக்குள்ளாகி, அபாயக் குரல் ஏற்படுத்தும். அது மற்ற காட்டுப் பன்றிகளையும் சேர்த்து விரட்டும். பல்வேறு விவசாயிகள் இந்த முறையைப் பயன்படுத்தி வருகின்றனர். இது காட்டுப்பன்றிகளை 40 – 50 விழுக்காடு வரை கட்டுப்படுத்துகின்றது.

மேலும் மற்றொரு வழி வரப்புகளில் ஆமணக்கு பயிரிடுதல் :

1) நெல், சோளம் போன்ற பயிர்கள் பயிரிட்டு, வரப்பினைச் சுற்றி 4 வரிக்கு ஆமணக்கு பயிரிட வேண்டும்.

2) ஏனெனில் ஆமணக்கு வாசம் மற்ற பயிரின் வாசத்தை மறைத்துவிடும்.

3) மேலும் ஆமணக்கில் அதிக அளவு ஆல்காய்டுகள் இருப்பதாலும், அவை சுவையின்றி இருப்பதாலும், காட்டுப் பன்றிகளுக்கு பிடிக்காது.

மேலும் ஒலிபெருக்கி முறை :

1)பல்வேறு விதமான மனித ஒலியை சப்தமாக ஒலிக்க செய்வதன் மூலம், பன்றிகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முடியும் என்பதை உணர்ந்து, தற்போது ஒலிபெருக்கியை வயல்வெளியில் அமைக்க துவங்கி உள்ளனர்.

2) கோவில் திருவிழா மற்றும் பொதுக்கூட்டங்களில் பயன்படுத்தும், ‘டிரம்ப்ட் ஹாரன்’களை மரங்களில் கட்டி வைத்து, இரவு முழுவதும் எம்.பி.,பிளேயர் மூலமாக பல்வேறு பாடல்கள், பிரசங்கங்களை ஒலிக்க செய்கின்றனர்.

3) இதனால், காட்டு பன்றிகள் மட்டும் அல்ல, வேறு எந்த விலங்குகளும், இரவில் வயல்வெளிக்கு வருவது இல்லை.இந்த யுக்தியில், மனித நடமாட்டம் இருப்பது போன்றே, ‘ஹியூமன் வாய்ஸ்’ ஒலிக்க செய்வதால், காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் கட்டுப்பட்டுள்ளது.

இருதியாக சிவப்பு சேலைகளை வரப்பு ஓரங்களில் வேலிபோல் கட்டி வைப்பதன் மூலமும் கட்டுப்படுத்தலாம்.

– நன்றி.

உயிர் இயற்கை விவசாய நேரடி விற்பனை நிலையம்.