பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் பயிர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கிறது ?

பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள், அதை பயிர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கிறது

பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள், அதை பயிர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கிறது ?

 

கொஞ்சம் வித்தியாசமான பதிவு.
எனக்கு தெரிந்ததை, படித்து புரிந்ததை இங்கே கொடுக்கிறேன்.

உங்களுக்கு ஒரு அதிசயமான உண்மையை முன் வைக்கிறேன்.

ஒரு தாவரம் தன் வாழ்நாளில் தனக்கு தேவையான சத்துக்களை மண்ணில் இருந்து 4% அளவுக்கே எடுத்துக் கொள்கிறதாம். மீதமுள்ளவைகளை தண்ணீர், காற்று, சூரிய ஒளி மூலம் அது பெற்றுக்கொள்கிறதாம்.

சரிங்க, விஷயத்துக்கு வருவோம்.

பயிருக்கு தேவையான சத்துக்களை இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்.

1. அதிக அளவில் தேவையான சத்துக்கள். (பேரூட்டச்சத்துகள்)

2. குறைந்த அளவில் தேவைப்படும் சத்துக்கள். ( நுண்ணூட்டச்சத்துகள்)

N P K என சொல்லப்படும் பேரூட்டச்சத்துகள் மண், நீர், காற்று, சூரிய ஒளி மூலம் பயிருக்கு கிடைக்கிறது.

ஆனால் நுண்ணூட்டச்சத்துகள் மண்ணில் இருந்து மட்டுமே கிடைக்கிறது.

பயிரின் விளைச்சலில், காய்கள், பழங்கள், தானியங்கள், எல்லாம் நமது தேவைக்கு போக மீதி சந்தைக்கு சென்று விடும் தானே?

அதில் உள்ள சத்துக்கள் மண்ணைவிட்டு வெளியேறிவிடுகிறது. பேரூட்டச்சத்துகள் பெரும்பாலும் மற்ற காரணிகள் வழியாக வந்து விடுகிறது (காற்று, நீர், சூரிய ஒளி)
ஆனால் நுண்ணூட்டச்சத்துகள் திரும்புவதில்லை.

மண்ணில் சத்துக்கள் நிறைய இருந்தாலும் நெடுங்காலமாக பயிர் செய்யப்படுவதால் இந்த சத்துக்கள் குறைந்து கொண்டே போய் பற்றாக்குறை வரும் வாய்ப்பு உள்ளது.

இதை எப்படி தடுப்பது?

JADAM method of agriculture பற்றி சிறிது படித்தேன்.
இந்த நிலை பற்றி தெளிவாக பேசுகிறது.

நிறைய செய்திகளை அது கொடுத்து கொண்டே இருந்தது.
அது குறித்தும் பேசுவோம்.

இந்த நுண்ணூட்டச்சத்துகளை எப்படி நிலைநிறுத்துவது பற்றியும் சொல்கிறது.

ஒரு சின்ன விளக்கம் கொடுத்து வழி காட்டுகிறது.

உலகத்திலேயே எல்லா சத்துக்களையும் சமச்சீராக கொண்டுள்ளது தாய் பால் மட்டுமே.
அதே போன்ற அனைத்து சத்துக்களும் உள்ளடிக்கியிருப்பது கடல் நீர் மட்டுமே.

அதனால் குறைந்த அளவில் நீர் பாசனத்தில் கலந்து விட சொல்கிறது.

அதாவது நுண்ணுயிர்கள் கலவை தயாரிக்கும் போது 100 ml கடல் நீர் அல்லது 100 கிராம் உப்பு சேர்க்கலாம் என வழி சொல்கிறது.
200 லிட்டர் கலவையில் 100 கிராம் உப்பு சேர்க்கலாம்.
இது காலப்போக்கில் தீர்ந்த சத்துக்களை நிறைவு செய்யக் கூடும் என நம்பிக்கை கொடுக்கிறது.

நாம் நுண்ணுயிர்கள் கலவைகளை பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் தயாரிக்கிறோம் தானே?
அப்படி பட்ட நிலையில் வளரும் நுண்ணுயிர்கள் தோட்டத்தில் எப்படி வளரும்?
அதனால் தோட்டத்து தட்பவெட்ப நிலையில் தயாரியுங்கள். அப்படி வளரும் நுண்ணுயிர்கள் மட்டுமே மண்ணில் நிலைபெறும் என சொல்கிறது.

எதுவுமே முழுமையானது அல்ல, தொடர்ந்து தேடுதல் வேண்டும்.

எனக்கு தெரிந்த வரை சொல்லிவிட்டேன், இதை மேலும் மெருகேறும் பணி உங்களுடையது.

வாழ்த்துகள்.