பவானி, காவிரி,வைகையில் உள்ள தற்பொதைய வெள்ளம் சொல்லும் சேதி என்ன

Agriwiki.in- Learn Share Collaborate

பவானி, காவிரி,வைகையில் உள்ள தற்பொதைய வெள்ளம் சொல்லும் சேதி என்ன?
By Brittoraj

கடந்த 15 நாட்கள் முன் வரை நிலத்தில் வறட்சியும் போர் கிணற்றில் நீரின்றியும் இருந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் வெள்ளமாக ஆற்றில் நீர் ஓடுகிறது.இன்னும் சில நாட்கள் ஓடும். அடுத்தவாரம் அங்கு மழைநின்ற பின் நவம்பர்
2 ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரையில் உள்ள 70 நாட்கள் மிகுந்த வறட்சி இருக்கும்.

பள்ளத்தில் உள்ள ஆற்றில் ஓடும் வெள்ளநீர் நம்மைக் கடந்து போகும். இதனால் வெள்ளம் உள்ள மாவட்டங்களில் எந்தப் பயனும் இல்லை. 2018ல் நம்மைக் கடந்து சென்று நேரேக் கடலில் சேர்ந்தது போல் இப்போதும் நிகழும்.
தமிழகத்தில் உள்ள ஆறுகளின் மட்டத்தைவிட பக்கவாட்டில் உள்ள நிலங்கள் குறைந்தபட்சம் 10 அடிகள் மேட்டில் உள்ளது. நம் நிலம் ஆற்றை விட உயரமாக மேடாக உள்ளது.அங்கு பெய்யும் மழை இச்சரிவால் விரைவாக ஓடி அருகில் உள்ள ஆற்றுக்கு வந்துவிடும்.
இவ்வாறாக மேடாக உள்ள நம் வயல்கள் மேல் நீண்ட நாட்கள் மழை பெய்ய வேண்டும் அல்லது *கிடைக்கும் குறைந்த மழைநீரை நிலத்தில் உயரமான வரப்பமைத்தோ, அல்லது பண்ணைக்குட்டைகள் மூலமாக வயல்களில் சேமித்தே ஆக வேண்டும்*. அப்போதுதான் நீர் தேங்கி நின்று பூமிக்குள் இறங்கும். அப்படி மெதுவாக இறங்கினால் தான் ஊற்றுகள் நிரம்பி கிணறு,போரில் தண்ணீர் வளம் கூடும்.

இயற்கை ஆர்வலர்களே குளங்ளை சீர்படுத்து ததைவிட இவ்வாறு ஓடும் நீரை கால்வாய்களை சீரமைத்து *எப்படியாவது* குளங்களில் சேமிக்க நடவடிக்கை எடுங்கள்.உங்கள் மேலான உடல் உழைப்பு மற்றும் நிதியினை கால்வாய்களை முறைப்படுத்துவதில் செலவழியுங்கள்.

இல்லையெயெனில் அடுத்த கோடை *எதற்கும்* நீரின்றி மிகவும் சிரமம் தரும்.