பாரம்பரிய நாட்டு மாடுகளைப் பாதுகாப்போம்

பாரம்பரிய நாட்டு மாடுகளைப் பாதுகாப்போம்
Agriwiki.in- Learn Share Collaborate
பாரம்பரிய நாட்டு மாடுகளைப் பாதுகாப்போம்

சொந்தங்களே!!!!!!

இனியாவது நம் பாரம்பரிய நாட்டு மாடுகளைப் பாதுகாப்போம்.

அதற்கானத் தீவன வங்கிகளை வளர்த்து தீவனம் இல்லாததற்காக  விற்பதைத் தவிர்ப்போம்.

நம் நாட்டுக் காளைகளை அதிக அளவில் வளர்த்து விந்து பெருக்கத்தை அதிகரித்து அதன்மூலம் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையைக் கூட்டுவோம்.

குறைந்த அளவு பால் கொடுத்தாலும் பரவாயில்லை என நாட்டுப்பசு வளர்ப்போம்.

ஊக்கமான நம் சந்ததி நல்ல சுகாதாரத்துடன் வாழ நாட்டுப்பால் மட்டும் கொடுத்து வளர்ப்பேன் என உறுதி கொள்வோம்.

நீண்ட ஆயுளுடன் கால்சியம் அதிகமான எலும்புகளுடன் நல்ல பார்வைத் திறனுடன் கூரிய அறிவுத்திறனுடன் வாழ நாட்டுப்பால் ஒன்றேத் தீர்வு.

குறைந்த விலையில் நம் சந்ததியை அழிக்கும் சீமை மாட்டுப்பால் வாங்குவதை விட சற்று விலை கூடுதல் என்றாலும் நம் நாட்டுப்பால் வாங்குவோம்.

அடிமாடாக நம் நாட்டுமாடு விலைபோவதைத் தவிர்ப்போம்.

ஒரு நாட்டுமாடு 30ஏக்கருக்கு உரம் தரும்.

இயற்கை விவசாயத்தின் அடிப்படை நாட்டுமாடு.நம் விவசாய உற்பத்தி செலவு குறைய அது ஒன்றே வழி.

நாட்டுமாடு வளர்ப்பின் மேல் ஆசையுடன் வளர்க்க வசதி மற்றும் சூழல் இல்லாதவர்கள் வெளிநாடுகளில் உள்ளது போல் ஊரில் மாடு வளப்போரிடம் வாடகைக்கு வளர்க்கும் முறையில் நாட்டு மாட்டினைப் பெருக்கலாம்.

நாட்டுமாட்டினை நேசிப்போம்.

பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்