கிர் பசு பற்றிய தகவல்கள்

கிர் பசு பற்றிய தகவல்கள் ghir cow
Agriwiki.in- Learn Share Collaborate
கிர் பசு பற்றிய தகவல்கள்

😀இந்திய மாட்டு இனங்களில் அதிக பால் கொடுக்கும் இனம் இது. அதிக சாதுவான இனமும் இதுதான்.

😀அனேகமாக அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும். சில பசுக்களில் வெள்ளை புள்ளிகளும் சேர்ந்து இருக்கும்.

😀கொம்புகள் சிறிது பின் நோக்கி வளைந்து பின் பக்கவாட்டில் வளரும் .வலுவான பெரிய கொம்புகள் இருக்கும்.

😀கன்று பிறந்த 36 மாதங்களுக்கு பிறகு சினை பருவத்திற்கு வர ஆரம்பிக்கும். கன்று ஈன்ற பிறகு பத்து மாதம் வரை பால் கொடுக்கும்.

😁சாதாரண மேய்ச்சல் மட்டுமே போதுமானது. கண்டிப்பாக காய்ந்த வைக்கோல் ஒரு நாளைக்கு பதினைந்து கிலோ தரவேண்டும். அடர் தீவனம் தேவை பட்டால் அளிக்கலாம்.

😁கட்டி வைத்து மேய்க்கும் போது ஒரு நாளைக்கு முப்பது கிலோ பசுந்தீவனம் கொடுக்க வேண்டும்.பதினைந்து கிலோ காய்ந்த வைக்கோல். அப்போது தான் snf பாலில் நன்கு வரும்.

😂கிர் மாடுகள் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் பத்து லிட்டர் பால் வரை கொடுக்கும் . இப்போது பிரபலமாகி வரும் A2 பால் இவற்றின் மூலமாக கிடைக்கும்.

😁சாதாரண தீவனத்தில் அதிக பால் கொடுக்க கூடிய இனங்களில் முதன்மை வாய்ந்தது. இதற்கு அடுத்தபடியாக இருப்பவை தார்பார்க்கர் இனம். அதற்கு அடுத்ததாக பாகிஸ்தானை சேர்ந்த சிகப்பு சிந்தி.

😀குடல் புழு நீக்கம் கன்று பிறந்த இருபதாவது  நாள் முதல் செய்ய ஆரம்பிக்கலாம்.  மூன்று மாதம் ஒரு முறை தொடர்ந்து செய்யலாம்.

😀மிக சாதுவான இனம். நெருங்கி பழகினால் மிகுந்த  விசுவாசத்துடன் பழுகும்.