புற்கள் எதிரியா நண்பனா ??
புல் வகையான களைகள் இயற்கை விவசாயத்தில் மிகப்பெரிய தடை என சொல்கிறார்கள். நாமும் அதை முழுமையாக நம்புகிறோம்.
ஆனால் உண்மை நிலை வேறு என தெரிகிறது.
டிராக்டரினால் எற்படும் கெடுதி :
நாம் கனரக டிராக்டர்களை பயன் படுத்தியதில் மண் 15 செ மீ ஆழத்திற்கு கீழே இறுக்கம் அடைகிறது.
நீர் ஊடுருவி கீழே போக முடியாத வகையில் அது அமைகிறது.
இது பயிர் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். வேரின் வளர்ச்சி குறைகிறது. இது மகசூல் பாதிப்பை ஏற்படுத்தும்.
மண்ணின் அடியில் இருக்கும் நுண்ணூட்டச்சத்து பயிருக்கு கிடைக்காமல் போகும்.
புல் எப்படி சரிசெய்கிறது ?
இப்போது புல்வகை தாவரங்கள் இதை எப்படி சரி செய்கிறது என பாருங்கள்.
படிக்கும் போது என் பார்வையில் பட்டதை பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றாக வளரும் புற்களின் வேர்கள் மண்ணின் மேல் உள்ள அதன் வளர்ச்சியில் 1.5 அளவுக்கு மண்ணில் கீழே செல்கிறது.
கீழே உள்ள mineral களை மேலே கொண்டு வருகிறது.
அதே நேரத்தில் கீழ் மண்ணில் organic matter களை விட்டு வைக்கிறது. இது கடினப்பட்டுபோன மண்ணை இளகவைக்கிறது.
இது தான் புல்வகை தாவரங்கள் செய்யும் மகத்தான செயல்.
இப்போது சொல்லுங்கள் புற்கள் எதிரியா, நண்பனா என்று.
இயற்கை விவசாயம் என்பது களைகளோடு இணைந்து இருப்பதுதான்.
வாழ்த்துகள்.