பொன்னீம் இயற்கை பூச்சி விரட்டி

பொன்னீம் இயற்கை பூச்சி விரட்டி

பொன்னீம் இயற்கை பூச்சி விரட்டி 

பொன்னீம் இயற்கை பூச்சி விரட்டி –  பொன்னீம் மிகச்சுலபமாக தற்சார்பாக பூச்சிகளை விரட்ட நாமே எளிமையாக தயாரித்து கொள்ளலாம். அனைத்து வகையான பயிர்களுக்கும் தெளிக்கலாம்.

நெற்பயிரில் இலைகளில் தோன்றும் மஞ்சள் தன்மை, நுனிகருகல் மற்றும் வேர்தண்டில் உள்ள பூச்சிகளால் கிளைப்புகள் குறைந்து காணப்படுவது போன்ற பிரச்சனகளை பொன்னீம் எளிதில் களையும்

தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:

*ஒரு லிட்டர் பொன்னீம்* *தயாரிக்க*
*தேவைப்படும் பொருட்கள்.*
வேப்பெண்ணெய் — 450 மில்லி
புங்கன் எண்ணெய் — 450 மில்லி.
காதிசோப்பு கரைசல் –.100மில்லி.

இம்மூன்றையும் நன்கு கலந்தால், அக்கலவையே பொன்னீம் ஆகும்.

பயன்கள் :

வேரழுகல், குறுத்தழுகல், பூஞ்சான நோய்கள் , சாறு உறிஞ்சும் பூச்சிகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.

நெல், காய்கறி, கீரை போன்ற அனைத்து வகையான பயிர்களுக்கும் தெளிக்கலாம்.

அளவுகள் :

10 லிட்டர் தண்ணீருக்கு 50 லிருந்து 100 மில்லி வரை பொன்னீம் பயன்படுத்தலாம்.

கீரைகளுக்கு 10 லிட்டர் தண்ணீருக்கு 30 லிருந்து 50 மில்லி வரை பயன்படுத்தலாம்.

நன்றி.
அர்வின் ஃபார்ம்ஸ், போளூர்.