மண்ணில் அனைத்து சத்துகளும் நிலைபட

நேற்று நம்மாழ்வாரின் ஆடியோ கேட்டேன். பசுந்தாள் உரம் பற்றியது. இதுவரை பசுந்தாள் உரப்பயிரட்டு அது பூக்கும் தருணத்தில் மடக்கி உழவேண்டும் என எண்ணியிருந்தேன். அது முழுமையானது அல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.

மண்ணில் அனைத்து சத்துகளும் நிலைபட அவர் கூறிய வழிகளை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

பசுந்தாள் வளர்ச்சியில் ஒவ்வொரு நிலையிலும் எதாவது ஒரு சத்து அபரிமிதமாக இருக்குமாம்.

அதனால் அதை ஒவ்வொரு நிலையிலும் மண்ணோடு கலந்துவிட வேண்டுமாம்.
இது கொஞ்சம் பொறுமையுடன் செய்தாக வேண்டும்.

1. முதலாவதாக விதைத்து 20வது நாளில் மடக்கி உழுதுவிட வேண்டும்.
2. மீண்டும் விதைத்து அடுத்த முறை 45 வது நாளில் மடக்கி உழுதுவிடவேண்டும்.
3. அடுத்து விதைத்து 90 நாட்கள் வளரவிட்டு மீண்டும் மண்ணோடு கலந்து விட வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் அனைத்து சத்துகளும் முழுமையாக மண்ணில் சேரும்.
ஆக ஒரு 6 மாத காலம் மண்ணுக்காக இதை செய்வதன் முலம் இயற்கையை நோக்கி விரைவாக திரும்ப இயலும்.

வாழ்த்துகள்
சிறுவிவசாயிகளுக்கு விடிவெள்ளி