மண்புழுக்களை மேலே கொண்டுவரும் நுண்பருவநிலை

மண்புழுக்களை மேலே கொண்டுவரும் நுண்பருவநிலை

மண்புழுக்கள் சாதகமில்லா நேரங்களில் மண்ணின் ஆழத்திற்கு சென்று சமாதி (dormancy) நிலையில் உள்ளன, சமாதி நிலை என்பது செயலற்ற நிலையாகும், இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும், மரங்களும் குளிர்காலங்களில் சமாதி நிலையில் இருக்கக்கூடியது. விலங்குகளில் தவளைகள் வாழ்க்கையிலும் நாம் இதை நேரடியாகப பார்க்க முடியும்.

சாதகமான சூழ்நிலைகள் இல்லாதிருக்கும் போது நாட்டு மணபுழுக்கள் அவை வேலை செய்வதில்லை ஆனால் நாம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும் போது அவை மேல் நோக்கி வருகின்றன, சாமாதி நிலையில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த சாதகமான சூழ்நிலைக்கு நுண்பருவ நிலை Micro climat என்று பெயர்.

மேல் மண்ணில் தாவரங்களுக்கு இடையில் இருக்கும் காற்றின் வெபப்நிலை 24 டிகிரி முதல் 32 டிகிரி இருக்க வேண்டும். காற்றின் ஈரப்பதம் 65 முதல் 72 சதவீதமாக இருக்க வேண்டும். சூரிய ஒளியின் தீவிரம் 5000 footcandle முதல் 7000 footcandle வரை இருக்க வேண்டும், மேலும் மண்ணிற்குள் இருள் இருக்க வேண்டும், இதை வாப்சா எனலாம். இந்த அனைத்து சூர்நிலைகளும் சேர்ந்து நுண்பருவநிலை எனப்படுகிறது,

இந்திய வேளாண்பருவ நிலை சூழ்நிலைககளில் இந்த நுண்பருவ நிலை இயற்கையாகவே உருவாகிறது, தட்சிணாயனம் காலத்தில், ஜுன் 21 முதல் டிசம்பர் 20 வரையான கால கட்டமாகும், இந்த காலத்தில் தென்மேற்கு பருவமழை பொழியும், வடகிழக்கு பருவழையும் வரும். இந்த காலம் மழைகாலம் மட்டுமல்ல அதோடு பயிர் வளர்ச்சி காலமும் கூட, இந்த ஆறு மாத காலத்தில் நாட்டு மாண்புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்கள் அதன் அதிகபட்ச வேலையை செய்கின்றன. எனவே நாட்டு மண்புழுக்களின் உட்பட்ச செயல்பாட்டிற்கு இந்த ஆறுமாதம் காலம் மிகவும் உதவியாக உள்ளது. இந்த காலகட்டத்தில் நாம் எந்த அளவு ஜீவாமிர்தம் கொடுக்கிறோமோ அந்த அளவு மண்ணில் நல்ல பலன்கள் கிடைக்கும். எனவே இந்த காலத்தில் ஜீவாமிர்தம் தாராளமாகப் பயன்படுத்துங்கள்.

ஜீவாமிர்தம் எத்தனை முறை கொடுக்க வேண்டும்

ஜீவாமிர்தத்தை மாதத்திற்கு ஒருமுறை ஏக்கருக்கு 200 முதல் 400 லிட்டர் கட்டாயமாக கொடுக்க வேண்டும். மாதம் இரண்டு முறை கொடுப்பது சிறந்தது, அதிகபட்சமாக மாதத்திற்கு மூன்று முறை கொடுக்கலாம்.

ஜீவாமிர்த்திற்கு தேவையான பொருட்களை நாமே உற்பத்தி செய்து கொள்ளவேண்டும்.

ஜீவாமிர்தம் தயார் செய்ய சர்க்கரை மற்றும் பயறு மாவு அவசியம் என்பதால், நமது வயலில் பயறு வகைகளை ஊடுபயிராக செய்ய வேண்டும். இனிப்பு மிக்க பழங்களான சப்போட்டா, வாழை, பப்பாளி, மா போன்றவற்றையும் நம் வீட்டுகள் அல்லது வயலின் வரப்பில் வளர்க்க வேண்டும். கரும்பை வயலின் சிறுபகுதியில் பயிர் செய்து வீட்டிலேயே நாட்டு சர்க்கரை தயார் செய்து கொள்ளலாம். சர்க்கரை தயாரிக்க முடியவில்லை என்றால் கரும்பு சாறாக பயன்படுத்துவோம், இல்லை என்றால் சிறு துண்டுகளாக கரும்பை நறுக்கி போடலாம்.

ஜீவாமிர்தம் எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும்.

பகல் வெப்பநிலை 36 டிகிரி குறைவாக இருந்தால் நாள் முழுவதும் ஜீவாமிர்தம் கொடுக்கலாம். 36 டிகிரிக்கு மேல் வெப்பநிலை இருந்தால் காலை 11க்கு முன்பும் அல்லது மாலை 4 மணிக்கு பின்பும் கொடுக்க வேண்டும்,

ஜீவாமிர்தம் எப்படிக் கொடுக்க வேண்டும்.

நேரடியா விடும் முறை: மண்ணில் மேல் இரண்டு செடிகளுக்கு இடையே அல்லது இரண்டு வரிசைகளுக்கு இடையே விடவேண்டும்.

சம்பா பயிர்கள், பருத்தி, மிளகாய், துவரை, ஆமணக்கு, கத்தரி, தக்காளி, முட்டைக்கோஸ், பூகோஸ், ப்ரோகோவி கொத்தவரங்காய், சூரிய காந்தி ஒரு கப் 200 மி.லி. ஜீவாம்ருதம் வரிசைகளுக்கு இடையே ஊற்ற வேண்டும். மாதம் 2 முறை கொடுக்க வேண்டும் மண்ணின் மேல் தெளிக்கவும் செய்யலாம். கை பம்ப் பயன்படுத்தினால் nozzle எடுத்து விட்டு சிறிதுசிறிதாக  தெளிக்கலாம்.

பழமரங்களுக்கு எப்படி ஜீவாமிர்தம் விடவேண்டும்

மரங்களுக்கு ஜீவாமிர்தம் கொடுக்கும் போது மரத்தின் குடை நன் பகலில் எந்த இடத்தில் முடிகிறதோ அந்த இடத்தில் ஊற்ற வேண்டும். அங்குதான் மெல்லிய வேர்கள் தண்ணீரையும் சத்துக்களையும் எடுத்துக் கொள்கின்றன. அல்லது இரண்டு மரங்களுக் இடையில் விடவேண்டும்.

குழு 1 / சிறிய மரங்கள்:
சீத்தாப்பழம், மாதுளை, வாழை, பப்பாளி, பாக்கு, காப்பி, கோக்கோ, ஏலம், பட்டை, அதிக இடைவெளியில் துவரை, ஆமணக்கு, முருங்கை, அகத்தி, கறிவேம்பிலை போன்றவை
இந்த குழுவில் எந்த பழமரங்கள் 6×4, 8×6, 8×8, 9×4.5, 9×6, 9×9, 10 x 5, 10 x 10, 12 x 10, 12 x 12 அடி அளவில் இருக்கும்.

குழு 2 / பெரிய மரங்கள்
ஆரஞ்சு, சாத்துகுக்குடி, எலுமிச்சை, கினோ, ஆப்பிள், கொய்யா, ஜாதிக்காய், நெல்லி, தென்னை வகைகள், அத்தி மற்றும் கீழ் கண்ட இடைவெளியில் நடப்படும் மற்ற மரங்கள் பழமரங்கள் (20 x 20, 10×10, 15×15, 14 x 18, 24×24)

குழு 3 / மிகப்பெரிய மரங்கள்
நெட்டைத் தென்னை, மாமரம், புளியமரம், சப்போட்டா, முந்திரி, பாதாம், பலா, பேரிக்காய், வில்வம், இலுப்பை, தேக்கு, பாம்ஆயில் மற்ற பெரிய மரங்கள் அனைத்தும் இதில் அடங்கும். (இடைவெளி 27×27, 30×30, 30×20, 33×33, 36×24, 36×36, 40×30, 44×33, 44×44, 48×36, 48×48)

நடவு முடிந்த முதல் ஆறு மாதங்களுக்கு 200 மி.லி ஜீவாமிர்தம் ஒரு செடிக்கு கொடுக்க வேண்டும். மாதம் இருமுறை கொடுக்க வேண்டும். ஆறு மாதம் கழிதது கன்றுக்கு 750 மி.லி கொடுக் வேண்டும். ஒரு வயது மரங்களுக்கு 1 லிட்டர் ஜீவாமிர்தம் கொடுக்க வேண்டும். வயதுக்கேற்ப ஜீவாமிர்தம் கொடுக்கும் அளவு மாறுபடும், வயது அதிகரிக்க அதிகரிக்க ஜீவாமிர்தம் கொடுப்பதையும் கூட்டிக் கொள்ளலாம். பெரிய அளவு குடைமரங்களுக்கு கூடுதலாகக் கொடுக்கலாம்.

பழத்தோட்டத்திற்கு பாசனநீர் மூலமாக ஜீவாமிர்தம் கொடுக்கவேண்டும் என்றால் 200 லிட்டர் முதல் 400 லிட்டர் வரை ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு கொடுக்க வேண்டும். பாசன நீரில் கொடுப்பதை விட மண்ணில் ஜீவாமிர்தம் கொடுக்கும் போதே நல்ல பலன்கள் கிடைக்கிறது. பெரிய பண்ணைகளில் ஜீவாமிர்தம் கொடுக்கும் முறையை தானியங்கி முறையில் மாற்றுவது நல்லது, இதனால் ஆள்செலவு குறையும்.

*பழங்களின் சுவையை அதிகரிக்கும் சப்த தான்ய கசாயம்*

இதில் ஏழுவகையான தானியங்களும் அதனுடன் எள்ளும் இருக்கும்
முதல் நாள்100 கிராம் கருப்பு எள்ளுடன் போதுமான தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும், அடுத்த நாள் மற்றொரு பாத்திரத்தில்
பச்சை பயிறு 100 கிராம்
தோலுடன் உளுந்து 100 கிராம்
தட்டை பயறு 100 கிராம்.
காராமணி அல்லது நரிபயறு 100 கிராம்
கொள்ளு 100 கிராம்
கொண்டக்கடலை 100 கிராம்
கோதுமை 100 கிராம்
கூடுமான வரை உள்ளூர் ரகங்களை பயன்படுத்தவும். இந்த விதைகள் மூழ்கி இருக்கும் படி தண்ணீர் விட்டு ஊறவைக்கவும். அடுத்த நாள் காலை விதைகளையும் எள்ளையும் எடுத்து பருத்த ஈரத்துணியில் கட்டிவைக்க வேண்டும்.

அந்த மூட்டையை முளைவிட கட்டி வைக்கவும். ஊறவைத்த தண்ணீரை அப்படியே வைத்திருக்கவும். ஒரு செ.மீ நீளத்திற்கு முளைவிட்ட பிறகு தானியங்களை எடுத்து விழுதாக அரைக்கவும். அரைப்பதற்கு மிக்சர் கிரைண்டரை பயன்படுத்த வேண்டாம், மிக்சியின் சூட்டில் நொதிகள் அழிந்து விடும்.

அரைத்த விழுதுடன் 200 தண்ணீர் மற்றும் 10 லிட் நாட்டு பசு மாட்டு கோமியத்துடன் ஊறவைத்த தண்ணீரையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இக்கரைசலை கோணிப்பையால் மூடி இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் எடுத்து, கலக்கிவிட்டு வடிகட்டிய பின் அப்படியே உடனடியாகத் தெளிக்கவும், இதில் தண்ணீரில் கலக்க வேண்டிய அவசியம் இல்லை..

சப்த தான்ய கஷாய பலன்கள் பழம் பளபளப்பாகிறது. எடையும் பருமனும் அதிகரிக்கிறது. தோல் கெட்\டியாகிறது என்பதால் பழங்கள் பனியினல் பாதிப்பதில்லை. பழங்கள் பழுக்கும் முன்பே காய்கள் உதிர்வதில்லை. பழத்தின் தரம் உயரும். பழங்களின் போக்குவரத்தின் போதும் பாதிப்பதில்லை. தீமை விளைவிக்கும் கதிர்வீச்சிலிந்து பழங்களை காக்கிறது. பழங்களின் சுவையும் அதிகரிக்கிறது.

இடுபொருள் கொடுக்கும் முறை மற்றும் தெளிப்பு முறை அட்டவணையாக பின்னர் பகிரப்படும்.

சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி
ஈஷா விவசாய இயக்கம்