மாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்க என்ன தெளிக்கலாம்

mango மாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்க
Agriwiki.in- Learn Share Collaborate
மாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்க

மாமரத்தில் பூவும் பிஞ்சுமாக இருக்குறது, இவை நன்றாக வளர்வதற்கு தரை வழி என்ன கொடுக்கலாம் மற்றும், மேல்வழி என்ன தெளிக்கலாம். மாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்க அறிவுரை தேவை Britto Sir!

தற்போது நிலவும் கொரோனா பாதிப்பினால் மாடுகளில் பால் கறந்து வெளியே விற்க முடியாத நிலை இருக்கும்.   இருக்கும் பாலினை மோராக மாற்றி முடிந்த அளவு தேங்காய்ப்பால் உடன் இணைத்து அதனை அடிக்கடி தெளிப்பது நிறைய மாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கும். இக்கரைசலை 10 நாட்களுக்கு ஒரு முறை எட்டு நாட்களுக்கு ஒரு முறை என தெளிக்கலாம். இது அனைத்து வகை பயிர்களுக்கும் பொருந்தும்.

தற்போது நிலவும் கொரோனா பாதிப்பினால் மாடுகளில் பால் கறந்து வெளியே விற்க முடியாத நிலை இருக்கும் போது இருக்கும் பாலினை மோராக மாற்றி முடிந்த அளவு தேங்காய்ப்பால் உடன் இணைத்து அதனை அடிக்கடி தெளிப்பது நிறைய மாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கும்

பூக்கள் இருக்கும் பகுதியில் தெளிப்பானை பயன்படுத்தி மழை பொழிவது போல் மெதுவாக மேலே நனையுமாறு இக்கரைசலை கொடுக்கலாம். அழுத்தம் கொடுப்பது போல் தெளித்தால் மகரந்தசேர்க்கை பாதிக்கப்படுவதுடன் கீழே உதிர்ந்து விட வாய்ப்புண்டு. எனவே தெளிப்பானை தள்ளிவைத்து மெதுவாக தெளிக்கலாம். இக்கரைசலை நன்கு தெளித்து விடுவது அல்லது எட்டு நாட்களுக்கு ஒரு முறை என இரண்டு முறை தெளிப்பது புதிய பூக்கள் வருவதை அதிகப்படுத்தும்.

பாசனம் முக்கியமானது

பொதுவாக மா மரத்தில் காய்கள் பறிக்கும் காலம் வரை முறையான அளவில் தண்ணீர் தரவேண்டும்.
வெயில் காலம் அதிகமென்பதால் பாசனம் முக்கியமானது.

அந்தப் பாசனத்தின் கூட இயற்கை இடு பொருட்களான
மீன் அமிலம், இஎம் கரைசல், பஞ்சகவ்யா ஜீவாமிர்தம் இவற்றில் ஏதாவது ஒன்றை தரைவழி ஒவ்வொரு பாசனத்தின் மூலம் கொடுப்பது சிறந்தது.

15 நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகாவியா அல்லது எம் கரைசலை 10 லிட்டருக்கு 300 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.

மாங்காய் பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு திராட்சைப்பழ கரைசலைத் தெளிக்கலாம்.

பூஞ்சாண நோய்களை தடுக்க

பயிர் வளரும் போது சூடோமோனாஸ் கரைசலை மாதம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிப்பது பல்வேறு காற்றில் பரவும் நோய்களை, பல்வேறு வகையிலான பூஞ்சாண நோய்களை தடுக்க பயன்படும்.

வெயில் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அல்லது மானாவாரி விவசாயம் ஆக இருக்கும் நிலையில் 10 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை பத்து லிட்டருக்கு 75 மில்லி என மீன் அமிலத்தையும் 10 லிட்டருக்கு 100 மில்லி என்ற அளவில் பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசல் தெளிப்பது காய்கள் விரைந்து பெருக்க வாய்ப்பாக அமையும்.

வெயில் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அல்லது மானாவாரி விவசாயம் ஆக இருக்கும் நிலையில்  என்ன செய்வது.

10 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை பத்து லிட்டருக்கு 75 மில்லி என மீன் அமிலத்தையும் 10 லிட்டருக்கு 100 மில்லி என்ற அளவில் பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசல் தெளிப்பது காய்கள் விரைந்து பெருக்க வாய்ப்பாக அமையும்.