லேட்ரைட் கற்களை கொண்டு குறைந்த செலவில் வீடு

லேட்ரைட் கற்களை கொண்டு குறைந்த செலவில் வீடு

லேட்ரைட் கற்களை கொண்டு குறைந்த செலவில் வீடு laterite stone house

கடற்கரை ஓரங்களில் அதிகமாக இந்த வகை laterite கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இது ஒரு விதமான படிக கற்கள் தான். இதை செந்நிறக் களிமண் (laterite), செம்புரைக்கல்,
செம்பாறாங்கல்சிவப்பு கப்பிக்கல் என்றும் அழைப்பர்.

லேட்ரைட் கற்களை கொண்டு குறைந்த செலவில் வீடு

அதிகமாக கேரளாவிலும் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் (தஞ்சாவூர்) இந்த கற்கள் கிடைக்கிறது. இந்த கற்கள் துளை உடையவையாக இருப்பதால் எடை குறைவு, மற்றும் வீட்டினுள் சூடு கடத்தாது.

இந்த வகை கற்கள் தஞ்சாவூர் பகுதிகளில் வல்லம் கற்கள் எனப்படும்.  இவை பசுமை வீடுகள் கட்ட உபயோகிப்பதால் இப்போது சற்று பிரபலமாகி கொண்டு உள்ளது. லேடரைட் ஸ்லாப்ஸ் (Laterite  Slabs, laterite cladding tiles ) கொண்டு டைல்ஸ் போல சுவரில் பதிப்பதும் செய்கிறார்கள்.

இவை நல்ல எடை தாங்கும் சக்தி கொண்டவை. கற்கள் பெரியதாக இருப்பதால் கட்டுமான வேலையின் ஆட்கூலி, காலம் ஆகியவை சேமிக்கப்படுகிறது. மற்றும் இதனை பூச்சு வேலை செய்ய வேண்டிய தேவை இல்லை. இதனால் பெருமளவு செலவு குறைகிறது.

கேரளாவில் நீங்கள் இந்த மாதிரி வீடுகளை நிறைய பார்க்கலாம்.

நன்றி
உங்கள் ஹரி.