வீடு கட்டுமானம் உபயோகமான டிப்ஸ்

வீடு கட்டுமானம்  - உபயோகமான டிப்ஸ்!
Agriwiki.in- Learn Share Collaborate

வீடு கட்டுமானம்  – உபயோகமான டிப்ஸ்!

வீடு கட்ட முறுக்கு கம்பி வாங்குகிறீர்கள்…எடை போட்டுதான் வாங்கி வருகிறீர்கள்…இருப்பினும் அதை தியரிட்டிக்கலா சரியாக இருக்கா என்பதை எப்படி செக் பண்ணுவீங்க?சொல்லித்தரேன் வாங்க…

ஒவ்வொரு பொருளுக்கும் அதன் அடர்த்தியை பொறுத்து எடை இருக்கும்…அதேபோல் ஒரு கன மீட்டர்(cubic meter) அளவுள்ள கம்பியின் எடை 7850 கிலோ!

அதாவது 1மீ நீளம்,1மீ அகலம்,1மீ உயரம் கொண்ட இரும்பின் மொத்த எடை 7850 கிலோ!

சரி…இப்போது ஒரு கம்பியின் ஒரு மீட்டர் நீளம் எவ்வளவு எடை இருக்கும்…முதலில் அந்த கம்பியின் ஒரு மீட்டர் கன அளவை கண்டுபிடித்து அதை 7850 கிலோவால் பெருக்கினால் 1 மீட்டர் கம்பியின் எடை கிடைத்துவிடும்…உதாராணத்துக்கு 12 mm கனம் கொண்ட கம்பியின் 1 மீ நீளத்தின் எடையை கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்! உருளைக்கான கன அளவு பார்முலா மூலம் கம்பியின் கன அளவை கணக்கிட்டு அதை 7850ஆல் பெருக்கவேண்டும்.

22÷7 X 0.006 x 0.006 x 1 போட்டால் கன அளவு வந்துவிடும்…0.00011 வருகிறது!

இதை 7850 ஆல் பெருக்கினால் 0.888 வரும்.

இதுதான் 1 மீட்டர் நீளமுள்ள 12 mm கம்பியின் எடை…

அதாவது 0.888 கிலோ!

ஒரு கட்டுமான கம்பியின் நீளம் 12 மீட்டர்(40 அடி)!

இப்படி கணக்கிடும்போது கீழ்க்கண்டவாறு ஒவ்வொரு கம்பியின் எடையும் வரும்…

8mm – 0.39 kg/1 m
10mm – 0.62 kg/1m
12mm – 0.89 kg/1m
16mm – 1.58 kg/1m
20mm – 2.47 kg/1m
25mm – 3.85 kg/1m

கடைக்காரர் எடையில் ஏமாற்றினால் மேற்கண்டவாறு நீங்கள் கணக்கிட்டு தவறை கண்டுபிடித்து விடலாம்!