இனங்கள் நாட்டுக் கோழி வகைகள்:
நமது நாட்டு கோழி வகைகள் மற்றும் அவைகளின் பருவம், மற்றும் குணங்கள்
கரி-நிர்பீக் (ஏசெல் கலப்பு)
உண்மை அல்லது தூய்மை என்பதே “ஏசெல்” என்பதன் அர்த்தம் ஆகும்.
இவ்வகை கோழிகள், சக்திவாய்ந்த, உறுதியான, திடமான வெளித்தோற்றம், கம்பீரமான
நடை, உறுதியான சண்டை போடும் திறன் கொண்டவை. இதன் சண்டை போடும்
திறனைக் கொண்டே ஏசெல் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதன் தோற்றம் ஆந்திரப் பிரதேச மாநிலம் எனத் தெரிகிறது. இவ்வகை
மிகவும் அரிதாகக் இருந்தாலும் சேவல் சண்டைக் காட்சி நடத்துபவர்களிடம்
காணப்படுகிறது.
ஏசெல் இனம், திடகாத்திரமான, மதிப்பான பார்வை கொண்ட இனமாகும்.
சேவல் எடை 3-4 கிலோவாகவும், கோழி எடை 2-3 கிலோவாகவும் உள்ளது.
196 நாட்களில் பருவம் அடைகிறது.
வருட முட்டை உற்பத்தி (எண்ணிக்கை) 92
40வது வாரத்தில் முட்டை எடை (கிராம்) 50
கரி-சியாமா (கடகநாத் கலப்பு)
பொதுவாக “கலாமாசி” என்று அழைக்கிறார்கள். கருப்பு சதையுடைய பறவை
என்பது இதன் அர்த்தம். மத்திய பிரதேச மாநில தாபுவா மற்றும் தார்
மாவட்டமும் அருகில் உள்ள ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில மாவட்டமும்,
அதாவது 800 சதுர மைல் பரப்பு இவ்வகை இனத்தின் தோற்றம் ஆகும்.
பழங்குடியினர், ஆதிவாசிகள், ஏழை கிராம மக்கள் ஆகியோர் இவ்வகைக்
கோழிகளை வளர்க்கின்றனர்.
சேவல் பலிக்காக பயன்படுகிறது. அதாவது தீபாளிக்குப் பின்
கடவுளுக்கு பலி கொடுக்கப்படுகிறது.
கோழிக் குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன், பிற்பகுதியில்
கருப்பு கோடுகளுடன் காணப்படுகிறது.
கறி கருப்பாக, பார்வைக் ஏற்றதாக இல்லாமல் இருந்தாலும், சுவையாகவும்,
மருத்துவ குணங்கள் நிறைந்தும் காணப்படுகிறது.
பழங்குடியினர், கோழி இரத்தத்தையும், கறியையும், கடும் நோய்களுக்கு
மருந்தாக பயன்படுத்துகின்றனர்.
கறி மற்றும் முட்டையில் நல்ல புரதச் சத்தும் (25.47% கறியில்)
இரும்புச் சத்தும் உள்ளது.
உடல் எடை 40 வாரத்தில் 920 கிராம்
பருவ வயது (நாட்கள்) – 180
வருட முட்டை உற்பத்தி எண்ணிக்கை – 105
முட்டை எடை 40 வாரத்தில் (கிராம்) – 49
கருவுற்றல் (%) – 55
கோழிக்குஞ்சு பொரிக்கும் திறன் – 52 %
ஹிட்கரி (நேக்கட் நெக் கலப்பு)
நீலமான உருண்டை வடிவ கழுத்துடைய இனமாகும். பெயரில் உள்ளது போல்,
பறவைகளின் கழுத்து வெறுமையாக உள்ளது. அல்லது, கழுத்தின்
முற்பகுதியில் கொத்தாக சிறகுகள் உள்ளன.
பருவ நிலையை அடையும் பொழுது, சேவலின் தோல் சிவப்பு நிறத்திற்கு
மாறிவிடுகிறது.
கேரளாவின், திருவனந்தபுரப் பகுதி இவ்வகை இனத்தின் தோற்றம் ஆகும்.
20 வாரத்தில் உடல் எடை 1005 கிராம்
பருவ வயது (நாட்கள்) – 201
40 வாரத்தில் முட்டை எடை – 54 கிராம்
கருவுற்றல் (%) – 66
கோழிக்குஞ்சு பொறிக்கும் திறன் (%) – 71
யு.பி.-கரி (பிரிசில் கலப்பு)
துப்புரவு குணமுடைய, உள்நாட்டு தோற்றமுடைய, நமது சுழலுக்கு ஏற்ற, நோய்
எதிர்ப்பு திறன் கொண்ட, நல்ல வளர்ச்சியும், உற்பத்தி திறனும் கொண்ட
இனமாகும்.
வீட்டிலியே வளர்ப்பதற்கு ஏற்ற இனமாகும்.
வேளாண் காலநிலைக்கு ஏற்ற இரகங்கள்:
வெவ்வேறு வேளாண் காலநிலைக்கு ஏற்ற 4 இரகங்கள் உள்ளன.
- கடகநாத் – டெல்கம் ரெட் கலப்பு
- ஏசெல் – டெல்கம் ரெட் கலப்பு
- நேகட் நெக் – டெல்கம் ரெட் கலப்பு
- பிரிசில் – டெல்கம் ரெட் கலப்பு
குணாதிசயங்கள்
பருவ வயது : 170 – 180 நாட்கள்
வருட முட்டை உற்பத்தி 165-180 முட்டைகள்
முட்டை எடை – 52-55 கிராம்
முட்டை நிறம் : காப்பி நிறம்
முட்டை தரம் : உயர்ந்த தரம்
உயிர்த்திறன் : 95% மேல்
சுறுசுறுப்பானது, செடிகளை உண்ணும் குணமுடையது.
முட்டைக் கோழிகள்
கரிப்பிரியா முட்டைக் கோழி
17-18 வாரம் முதல் முட்டையிட துவங்குகிறது.
150 நாட்களில், 50% உற்பத்தியை அடைகிறது.
26-28 வாரத்தில் அதிக பட்சம் உற்பத்தியாகிறது.
வளர்ப்பு கோழி மற்றும் முட்டைக் கோழியின் வாழ்வுத்திறன் 96% மற்றும்
94%
அதிகபட்ச முட்டை உற்பத்தி (92%)
72 வாரமான கோழி 270 முட்டைகளுக்கு மேல் இடுகிறது.
முட்டை அளவு – சராசரியான அளவு
முட்டை எடை – 54 கிராம்
கரி-சோனாலி முட்டைக் கோழி (கோல்டன்-92)
18-19 வாரம் முதல் முட்டையிட துவங்குகிறது.
155 நாட்களில் 50% உற்பத்தியை அடைகிறது.
27-29 வாரத்தில், அதிகபட்ச உற்பத்தியாகிறது
வளர்ப்பு கோழி மற்றும் முட்டைக் கோழியின் வாழ்வுத் திறன் 96% மற்றும்
94%.
அதிகபட்ச முட்டை உற்பத்தி – 90%
72 வாரக் கோழி 265 முட்டைகளுக்கு மேல் இடுகிறது.
முட்டை அளவு
: சராசரியான அளவு
முட்டை எடை 54 கிராம்
கரி- தேவேந்திரா
நடுத்தர வயதுடைய இருவகைப் பயனுடையது.
நல்ல உணவு மாற்றும் விகிதம் கொண்ட இனமாகும். உணவுச் செலவிற்கு
மேல் அதிகமான வரவு கிடைக்கிறது.
மற்ற இனங்களை விட உயர்ந்தது. முட்டை பண்ணைகளில் குறைவான இறப்பு
விகிதம்
8வது வாரத்தில் உடல்
எடை 1700 – 1800
கிராம்
பருவ வயது
: 155 – 160
நாட்கள்
வருட முட்டை உற்பத்தி
: 190 – 200
கறிக்கோழிகள்
கரிப்ரோ – விஷால் (கரிப்ரோ-91)
முதல் நாளில் கோழியின் எடை 43 கிராம்
6வது வாரத்தில் எடை : 1650 – 1700 கிராம்
7வது வாரத்தில் எடை : 2100 – 2200 கிராம்
கோழிகளின் உயிர்பு விகிதம் : 97-98%
6வது வாரத்தில் உணவு மாற்று விகிதம் : 1.94 – 2.20
கரி-ரெயின்ப்ரோ (பி -77)
முதல் நாளில் கோழியின் எடை 41 கிராம்
6வது வாரத்தில் எடை : 1300 கிராம்
7வது வாரத்தில் எடை : 1600 கிராம்
கோழிகளின் உயிர்பு விகிதம் : 98-99%
6வது வாரத்தில் உணவு மாற்று விகிதம் : 2.3
கரிப்ரோ – தன்ராஜா (பல நிறம் கொண்டவை)
முதல் நாளில் கோழியின் எடை 46 கிராம்
6வது வாரத்தில் எடை : 1600 – 1650 கிராம்
7வது வாரத்தில் எடை : 2000 – 2150 கிராம்
கோழிகளின் உயிர்பு விகிதம் : 97-98%
6வது வாரத்தில் உணவு மாற்று விகிதம் : 1.90 – 2.10
கரிப்ரோ – மிருத்துஞ்சை (கரி நேகட் நெக்)
முதல் நாளில் கோழியின் எடை 42 கிராம்
6வது வாரத்தில் எடை : 1650 – 1700 கிராம்
7வது வாரத்தில் எடை : 2000 – 2150 கிராம்
கோழிகளின் உயிர்பு விகிதம் : 97-98%
6வது வாரத்தில் உணவு மாற்று விகிதம் : 1.9 – 2.0