சென்னையில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் அண்மையில் நடைபெற்ற ஐம்பூத விழாவில், சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் கலந்து கொண்டு பேசினார். வீட்டுக் கூரைகளில் வெள்ளைப் பூச்சு பயன்படுத்துவதால் ஏற்படும் பயன் பற்றி அவர் குறிப்பிட்டுப் பேசினார்.�“புவி வெப்பமடைதல் பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது.
இதைத் தடுக்க வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். வீட்டின் மேற்கூரையில் வெள்ளைப் பூச்சு பூசுவதன் மூலம் நாம் உதவ முடியும். வெள்ளைப் பூச்சு வெப்பத்தைக் கிரகிக்காது என்பதால், வீடு உஷ்ணமாவது கணிசமாகக் குறையும். வீட்டுக்குள் வெப்பம் ஊடுருவதைத் தவிர்க்க முடியும். இதனால் வீட்டில் அனல் அடிப்பது குறையும்.
வீடுகளில் ஃபேன், ஏ.சி. பயன்பாடு குறையும்.இதன்மூலம் மின் கட்டணம் சிக்கனமாகும் .இதெல்லாம் நேரடி பயன்கள்.
ஏ.சி. பயன்பாடு குறைவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் நாம் உதவ முடியும். வீட்டின் மேற்கூரை மட்டுமின்றி, வீடு முழுவதும் வெள்ளைப்பூச்சில் இருந்தால் இன்னும் நல்லது’’ என்று ரமணன் வலியுறுத்திப் பேசினார்
Continue reading →