சிறுதானியங்கள் என்ன என்ன இருக்கு கேட்டா,
சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, வரகு, சோளம் னு பதில் வரும்.
இன்னும் கொங்சம் அதிகம் தெறிஞ்சவங்க காடைகன்னினு ஒன்னு இருந்துச்சு அல்லது இருக்குபாங்க.
நெல்லுல இருக்க மாதிரி இதுல ரகங்கள் எதாவது இருக்கானு கேட்டா
முழுமையான பதில் எங்கயும் கிடைக்கல.
ஐவ்வாது மலை, போதமலை, கொல்லிமலைனு கொஞ்சம் சுத்துனப்போ சில விசயங்கள் தெரியவந்தது.