Category: News

மண் வீடு version 2.0

மண் வீடு version 2.0 mannveedu20

மண்ணுல வீடுன உடனே ஒழுகிகிட்டு, தூசி அண்டிக்கிட்டு,கதவு ஜன்னல் அழகா இல்லாம,ஓதம் அடிச்சிக்கிட்டு இருக்குமே அந்த மண் வீடுனு நெனச்சியா…

Continue reading

புற்கள் எதிரியா, நண்பனா

புற்கள் எதிரியா நண்பனா

புல் வகையான களைகள் இயற்கை விவசாயத்தில் மிகப்பெரிய தடை என சொல்கிறார்கள். நாமும் அதை முழுமையாக நம்புகிறோம். 
ஆனால் உண்மை நிலை வேறு என தெரிகிறது. 

Continue reading

மாற்று கட்டுமானமும் மக்களின் மனநிலையும்

சமீபத்தில், எங்கள் க்ளையண்ட் ஒருவரிடம் பேசும்போழுது சொன்னார் –

நீங்க எவ்ளோதான் சொல்லி புரியவெச்சாலும், யாரையும் மாத்த முடியாதுங்க. ரொம்ப நாளா ஒரே மாதிரி யோசிச்சு மைண்ட் ஃபிக்ஸ் ஆகிருக்கும். நீங்க எடுக்கற முயற்சிலாம் பிரயோஜனம் இல்லாமயே போய்டும்னு சொல்லாம சொன்னாங்க. அவருக்கு நாங்கள் ஆரம்பத்திலிருந்து  இதற்கான முயற்சிகள் எடுக்கும் போதிலிருந்தே அவர் எங்களை கவனித்து வருகிறார். ஒரு வெல்விஷராக எங்கள் மீதான அக்கறை தான் அப்படி வெளிப்படுகிறது என்று எனக்கு தோன்றுகிறது.

அவர் சொல்வது சரி தானா? இது நடுநிலையான ஒரு புரிதல் என்று எடுத்துக்கொள்ளலாமா?

பல ஆண்டுகளாக கண்டிஷன் செய்யப்பட்ட எண்ண ஓட்டத்தோடு போராடுவது அவ்வளவு எளிதல்ல. அதை நாங்கள் புரிந்தே இருக்கிறோம். இதை விளக்க ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. டெட்டால் -சாவ்லான் மோதிய வரலாறு.

Continue reading

மாற்று கட்டுமானத்தில் கான்க்ரீட் மற்றும் சிமென்டின் பயன்பாடு

எங்களிடம் மண் அல்லது மாற்றுக்கட்டுமானம் பற்றி கேட்கும் போது பேச்சு சிமெண்ட் அல்லது கான்கிரீட் பக்கம் திரும்பும்.நான் கட்டுமான துறையில் பணியாற்றும் போது எனக்குள் எப்போதும் ஒருவிதமான குழப்பம் மட்டும் இருந்தது என்று சொல்ல முடியாது. ஒரு விதமான குற்ற உணர்ச்சியே என்னை உறுத்தியது. ஏதோ தெரிந்தே பாவம் செய்கிற உணர்ச்சி இருந்தது என்று சொன்னால் அது மிகையல்ல. நல்ல வேளை, இப்பொழுதெல்லாம் இதை நினைத்து தூக்கமிழப்பதில்லை.

ஒவ்வொரு புதிய கனவும் மெய்ப்படும் போதும் சரி, அது எதிர்பாராத விளைவுகளையும் நமக்கு பரிசாக தரும். எல்லா புதிய சிந்தனைகளுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள், கேள்விகள்,கேலிகள் எல்லாம் பரிச்சயமான ஒன்று. இதைத் தாண்டித் தாக்குப் பிடிக்கற சிந்தனைகள் மக்களால் ஏற்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து விடுகிறன‌

Continue reading