Category: News

பருவமழை நமக்கில்லை ஏன்?

பருவமழை நமக்கில்லை ஏன்?நம்மாழ்வார் nammalvar
பருவமழை நமக்கில்லை ஏன்?

 

1987-ல் இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். சுற்றுச்சூழல் கழகத்தினுடைய தலைவர் அவர். அவர் என்னிடம் “இனிமேல் உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று” சொன்னார். இதை அவர் 1987-ல் சொன்னார்.

ஏன் என்று நான் கேட்டதற்கு, “உங்களுடைய மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அது அரபிக் கடலிலிருந்து வருகின்ற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக மாற்றி கீழே இறக்குகிறது. அந்த மழை நீரை பூமியில் இறக்கி பிறகு ஆற்றில் நீராக ஓடுகிறது. அந்த மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரமுள்ள “டீ” தோட்டம் போட்டு விட்டீர்கள். இன்னமும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இன்னமும் குறையவே இல்லை அது.

அதற்குப் பிறகு முழங்கால் உயரத்திற்கு உருளைக்கிழங்கு செடிகளை நடுகிறீர்கள். ஒரு ஜான் உயரத்திற்கு முட்டைக்கோஸ், காலிஃபிளவர் எல்லாம் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய விளைவு அரபிக்கடலிலிருந்து வரக் கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. மழையாக மாற்ற முடியவில்லை. அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகின்ற தண்ணீரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே எங்குப் பார்த்தாலும் வெள்ளம்.

ஆக, இனி உங்களுக்கு புயல் மழைதான் வரும். பருவ மழை வருவதற்கு வாய்ப்பில்லை” என்று சொன்னார் அவர்.

அவர் சொன்ன அன்றிலிருந்து தொடர்ந்து உற்றுக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அதே தான் நடந்து கொண்டிருக்கிறது. நான் போகின்ற அத்தனை கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் எழுதும் அத்தனை கட்டுரைகளிலும் எழுதி கொண்டுதான் இருக்கின்றேன்.

யாராவது இதை வாசித்து உணர மாட்டார்களா? தவறைத் திருத்திக் கொள்ள மாட்டார்களா? என்று. ஆனால் யாரும் யோசித்த மாதிரி தெரியவில்லை. தொடர்ந்து காடு அழிக்கப்படுகின்ற செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது.

நம்மாழ்வார்

கறவை மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்க இயற்கையான வழிகள்

To increase milk production in cattle

To increase milk production in cattle : கறவை மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்க இயற்கையான வழிகள்:

🐄 கறவை மாடுகளுக்கு கன்று ஈன்ற 35 நாள் முதல் 45நாட்களுக்குள் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும் . ஏன் என்றால் கறவை மாடுகளுக்கு வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் முட்டைகள் வெளியேறிய பின்னர் மாடுகள் நன்றாக தீவனம் எடுக்கும் . மாடுகள் உட்கொண்ட தீவனம் முழுமையாக செரிமானமாகும்.

Continue reading

சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி

fig8walking

சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி !

எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை;

எட்டு வடிவ நடைப்பயிற்சி :

தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை ஒன்று (அ) இருவேளை செய்தால் போதுமானது.காலை நேரத்திலோ அல்லது நேரம் கிடைக்கும் போதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவெளியிலோ, கிழக்கு மேற்காக கோடு வரைந்து அதேபோல் 10 அடி விட்டு கோடுகளை வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும்.

(இருசக்கர மோட்டார் வாகனம் பழகுவோர் செய்தல் போன்று).

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும்.
15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம்.
பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

பயன்கள் :

இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம்.

70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்..சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும்.

குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும்.
முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாட்யின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.

செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது.
உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும்.

அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தப் குறைக்கப்படுகிறது.

இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.

முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.

நண்பர்களும் பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்களை்.
இயற்கை உணவின் அதிசயம் ஆரோக்கிய வாழ்வின் ரகசியம்.

தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை

தென்னையில் குரும்பை உதிர்வதை தடுக்க தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை
தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை

 

காயர் வேஸ்ட், காளான் விதை, மாட்டுச் சாணம், கோழிஎரு, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, எருக்கு இலை, சணப்பை, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பூண்டு, மஞ்சள் தூள், கோமியம், வேப்பம் புண்ணாக்கு, பூண்டு, உட்பட 14 இயற்கை பொருட்களை எடுத்து, பெரிய குழியில் போட்டு மாதம் ஒரு முறை அவைகளை நன்றாக கலக்கி, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை குழிக்கு தண்ணீர் பாய்ச்சவும்.

இவை ஆறு மாதத்தில் மக்கிய இயற்கை உரமாக உருவாகிறது.

ஒரு தென்னை மரத்துக்கு ஓராண்டுக்கு 40 கிலோ முதல் 50 கிலோ வரையி லான இயற்கை உரம் போதும்.

இயற்கை உரம் ஒரு கிலோ தயாரிக்க ரூ.3.50 மட்டுமே செலவாகிறது.

இயற்கை உரங்களால் விளை விக்கப்படும் தென்னையில் 100 தேங்காய்களுக்கு 17 கிலோ கொப்பரை கிடைக்கும். ரசாயன உரங்களால் விளைவிக்கப்படும் தேங்காய்களில் 100 தேங் காய்க்கு 13 கிலோ கொப்பரை மட்டுமே கிடைக்கும்.

பாரம்பரிய நாட்டு மாடுகளைப் பாதுகாப்போம்

பாரம்பரிய நாட்டு மாடுகளைப் பாதுகாப்போம்

இனியாவது நம் பாரம்பரிய நாட்டு மாடுகளைப் பாதுகாப்போம்.

அதற்கானத் தீவன வங்கிகளை வளர்த்து தீவனம் இல்லாததற்காக  விற்பதைத் தவிர்ப்போம்.

நம் நாட்டுக் காளைகளை அதிக அளவில் வளர்த்து விந்து பெருக்கத்தை அதிகரித்து அதன்மூலம் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையைக் கூட்டுவோம்.

Continue reading