Category: News

கலப்பு தீவனம் தயாரிப்பது எப்படி

கால்நடைகளுக்கு கலப்பு தீவனம் தயாரிப்பது எப்படி

கலப்பு தீவனம் தயாரிப்பது எப்படி?
கோவை கால்நடை பயிற்சி மையத்தில் ஆலோசனை..!!

வீடுகளில் எளிய முறையில் நாம் வளர்க்கும் கால்நடைகளுக்கு கலப்பு தீவனம் தயாரிக்க, கோவை கால்நடை பயிற்சி மையத்தில் ஆலோசனை வழங்கப்படுகிறது.

கலப்பு தீவனத்தை, கடைகளில் வாங்கி மாடுகளுக்கு உணவாக கொடுப்பதை காட்டிலும், தீவனங்களின் அளவுக்கேற்ப வீடுகளிலே தயாரிக்க இயலும்.

மாடுகளின் செரிமான முறை, தீவனத்தில் உள்ள சத்துக்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, எடைக்கேற்ப தயாரிப்பதன் மூலம், மாடுகளுக்கு சத்துள்ள மாற்று தீவனத்தை தயாரிக்க முடியும்.

கலப்பு தீவன தயாரிப்பு குறித்து, கால்நடை பயிற்சி மையத்தில், மாதிரிகள் தயாரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதில், மலிவாக கிடைக்கும் தீவனங்களான, சோளம், மக்காச்சோளம், கம்பு, ராகி, பயிறு வகைகள், புண்ணாக்கு, தவிடு, தாது உப்புகள் மற்றும் சமையல் உப்பு மற்றும் கரும்பு சர்க்கரை ஆகியவை கலந்து தயாரிக்கப்பட்டது. இந்த தீவன மாதிரியை, கறவை மாடுகளுக்கு உணவாக அளித்தில் நல்ல பலன். இதில், முன்பை காட்டிலும் அதிகளவு பால் உற்பத்தியாவதும், மாடுகள் ஆரோக்கியமாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகையில்:-

10 கிலோ கலப்பு தீவனம் தயாரிக்க, நான்கு கிலோ தானியங்கள், மூன்று கிலோ புண்ணாக்கு, 2.5 கிலோ தவிடு, 250கிராம் நாட்டு சர்க்கரை மற்றும் 100 கிராம் தாது உப்பு கலவை மற்றும் 150 கிராம் சமையல் உப்பு ஆகியவற்றை சேர்த்து, பொடியாக அரைத்து, மாடுகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

தீவன தட்டுப்பாடு ஏற்படும் சமயத்தில், மாடுகளுக்கு உணவாக கொடுப்பதால், சத்துக்குறைபாடு பிரச்னை ஏற்படுவதை பெருமளவு குறைக்க முடியும்.

கூடுதல் தகவலுக்கு, கால்நடை பயிற்சி மையத்தை நேரிலோ அல்லது 0422 266 9965 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்’ என்றனர்.

தொகுப்பு : நாட்டு மாடுகளை வளர்ப்போம் முகநூல் குழு.

பசு மாடுகளுக்கு தீவன மேலாண்மை

பசு மாடுகளுக்கு தீவன மேலாண்மை:-
*****************************************

அடர்தீவனத்தில் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டும்.

கால்நடைகள் விரும்பி உண்ணும் பொருளாகவும் விலை மலிவாகவும் இருத்தல் நன்று.

அடர்தீவனக்கலவையில் 100 கிலோ தயாரிக்க கீழ்க்கண்ட விகிதத்தில் பொருட்களை கலந்து தயாரிக்கலாம்.

தானிய வகைகள் – 35 கிலோ ( மக்காச்சோளம் அல்லது கம்பு அல்லது சோளம் ) + புண்ணாக்கு வகைகள் – 25 கிலோ ( கடலைப்புண்ணாக்கு அல்லது எள்ளுப்புண்ணாக்கு ) + தவிடு வகைகள் – 37 கிலோ ( அரிசித்தவிடு அல்லது கோதுமை தவிடு ) + தாது உப்புக்கள் – 2 கிலோ ( அக்ரிமின் அல்லது சப்ளிவிட் – மருந்துவ கடைகளில் கிடைக்கும் ) + சாதாரண உப்பு – 1 கிலோ ( சாப்பாடு உப்பு ).

பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதன் மூலம் செலவை குறைத்து பண்ணையை இலாபகரமாக நடத்த இயலும்.

பசுந்தீவனம் அதிக நார் மற்றும் புரதசத்தை தன்னுள் கொண்டிருக்கிறது.

பல்லாண்டு தீவனப்புல் வகைகள்:
———————————————————-
கம்பூ நேப்பியர் வீரியப்புல் ( கோ-1, கோ-3, கோ-4 ), கினியா புல், கொழுக்கட்டைப்புல், எருமைப்புல்.

தானியப்பயிர்கள்:
——————————–
தீவனச்சோளம், கம்பு, மக்காச்சோளம். பயறு வகை தீவனம் – வேலிமசால், காராமணி, குதிரைமசால், முயல்மசால், சணப்பை.

தீவன மரங்கள்:
—————————
சவுண்டல், அகத்தி, கிளைரிசிடியா & முருங்கை.

தொகுப்பு: நாட்டு மாடுகளை வளர்ப்போம் முகநூல் குழு.

சூப்பர் நேப்பியர் பசுந்தீவனங்களின் ராஜா

சூப்பர் நேப்பியர் பசுந்தீவனங்களின் ராஜா supernapier

பசுந்தீவன ரகங்களில், அதிக உற்பத்தி திறன் கொண்ட ரகம். சூப்பர்நேப்பியர்.

தானிய வகை பயிரான கம்பையும் ,ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட யானை புல்லையும்( நேப்பியர் புல்) கலப்பினம் செய்து, தாய்லாந்தில் உருவாக்கப்பட்டது.

ஸ்டார்ச்சும், கார்போஹைட்ரேட்டுகள் மட்டுமே செறிந்திருக்கும் புல்லில், கம்பு வகை தானியத்தை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட , சூப்பர் நேப்பியரின் புரத அளவு 14 லிருந்து 18.சதவிகிதம்.

இது கால்நடைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகி, உடல் எடை கூடுவது, பாலின் தரம் மேம்படுதல், கன்றுகளின் உடல்வளர்ச்சி விகிதம் கூடுதல் என துணை புரிகிறது.

Continue reading

பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும் எளிய முறைகள்

பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும் எளிய முறைகள்

இயற்கை விவசாயி ரெங்கராஜன் அவர்கள் பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும் வழிமுறை கேட்டார் இதோ உங்கள் பார்வைக்கு….இயற்கை முறையில் பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும் எளிய முறைகள் :

Continue reading

விவசாய கேள்வி – பதில்கள்

விவசாய கேள்வி – பதில்கள்…!கேள்வி : அவரை செடியில் பூ கொட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?தேங்காய் பால் புண்ணாக்கு கரைசல் தெளிக்கலாம். இதன் மூலம் அதிகமாக பூ கொட்டுவதை தவிர்க்கலாம்.

Continue reading

விதைத் தேங்காய் எடுக்க சில விதிமுறைகள்

விதைத் தேங்காய் எடுக்க சில விதிமுறைகள்

*விதைத் தேங்காய் எடுக்க சில விதிமுறைகள்*

1 . தென்னையின் வயது 25-60 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.

2. நோய்வாய்ப்படாத மரமாக இருக்க வேண்டும்.

3. 30-35 மடல்கள் அல்லது தோகை அந்தத் தென்னையில் இருக்க வேண்டும்.

4. தோகை மேல் படிந்த அல்லது உட்கார்ந்த தென்னங் குலையிலிருந்து விதைகள் சேகரிக்கலாம்.

5.இவ்வாறான குலைகளிலிருந்து தானாக விழுந்தத் தென்னங்காய்க்கு முக்கியத்துவம் தரவேண்டும். அல்லது அந்தக் குலையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்