நஞ்சில்லா இயற்கை வேளாண்மையா ? பஞ்சகவ்யா போடு என்று அன்புடன் ஆளாளுக்கு தெரிந்ததை சொல்லிவிட்டு போவார்கள். சொன்னதை எல்லாம் செய்துவிட முடியுமா. நானும் ஒருமுறை செய்முறை விளக்கமளித்தேன். (படம் 1). தோட்டத்தில் பணியாளர்கள் என்றைக்காவது ஒரு நாள் போட்டால் அதிசயம். அதற்கு காரணமிருக்கிறது. இந்த படத்திலுள்ள பொருட்களை சேகரிக்க முதலில் என் நண்பனின் அம்மா அதிகாலையில் மாட்டுக் கோமியத்தை குடத்தில் பிடிக்கவேண்டும். நல்ல மாட்டுச்சாணி எங்கிருந்தாவது கொண்டு வர வேண்டும். பக்கத்து ஊரில் மண்டை வெல்லம், பால், பழம், தயிர், கடலை மாவு, கரும்புச்சாறு என்று கிடைத்ததை வாங்கி வரவேண்டும். எல்லாவற்றையும் உற்ச்சாகத்துடன் கலந்து மூன்று நாட்கள் தேவுடு காத்தால் பஞ்சகவ்வியா தயார்.
தற்சார்பு விவசாயி-5 பேண்தகைமை
