இப்போது நம் காட்டில் முப்பது செமீ முதல் ஐம்பது செமீ வரை மூடாக்கு உள்ளது. உழவு செய்து ஏழு ஆண்டுகள் முடிந்து இது எட்டாவது ஆண்டு. இன்னும் இரண்டு வாரங்களில் மிளகாய் நாற்று நடவு செய்ய வேண்டும். முதலில் மூடாக்கு இட்டு அதன் பின்னரே நாற்று நடுவது. சரி இதனால் என்ன நன்மை? சாதாரணமாக மிளகாய் நட்டால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால் இங்கே நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் கொடுப்பது. வேர் பகுதியில் மண்ணை எப்போதும் வெப்பம் தாக்குவதில்லை. எனவே ஈரத் தன்மை முற்றிலும் காக்கப் படுகிறது.
நீர் மேலாண்மை – மூடாக்கு
