Category: Social Media

நம் மண்ணின் மர வகைகள்

நம் மண்ணின் மர வகைகள்
நம் மண்ணின் மர வகைகள்

அடர்வனத்துக்காக சேகரித்து வைத்திருக்கும் நாற்றுக்கள் இவை. நம் மண்ணின் வகைகள். மொத்தம் அறுபத்தெட்டு வகைகளிலிருந்து ஆயிரத்து அறுநூறு நாற்றுகளை சேகரித்திருக்கிறோம்.

பட்டியலில் இல்லாத நாட்டு வகை நாற்றுகளாக இன்னமும் நானூறு நாற்றுக்கள் தேவை. தேடிக் கொண்டிருக்கிறோம். நாட்டு வகையில் இருபத்தைந்து முதல் ஐம்பது நாற்றுக்கள் வரை இருந்தால் விலை கொடுத்து வாங்கி கொள்ளலாம். ஒரே பிரச்சினை போக்குவரத்துதான். பார்சலில் அனுப்புகிற சமாச்சாரமும் இல்லை. நூறு நாற்றுக்களுக்கு தனியாக வண்டி வாடகை கொடுத்தாலும் கட்டுபடியாகாது. அதை மட்டும்தான் யோசிக்க வேண்டியிருக்கிறது.

யாராவது மர வகைகளைத் தேடும் போது இந்தப் பட்டியல் உதவும் என்பதற்காக இங்கே பதிவு செய்து வைத்துவிடலாம்.

வகையும் எண்ணிக்கையும்-

பிராய்
இடம்புரி (திருகு மரம்)
ஒதியன்
பேய் அத்தி
பச்சை கனகாம்பரம்
நுணா
நழுவை
கடுக்காய்
அழிஞ்சல்
காட்டு எலுமிச்சை
வெண் சீத்தா
பாய் மொண்ணை
நொச்சி
பாவட்டம்
வெப்பாலை
எட்டி
இரும்புளி
இலந்தை
மா
வன்னி
இங்க் மரம்
நரிவிலி
தரணி
கடல் ஆத்தி
இருவாட்சி
ஆத்தி
வெல் விளா (காட்டுபாட்சி)
வெண்ணாந்தை
வில்வம்
நீர் அடம்பை
பூந்திக் கொட்டை (சோப் நட்)
குகமதி
வீரா
முறுக்கன்
காட்டு கறிவேப்பிலை
கருமரம்
கன்னிரா
கல்யாண முருங்கை
காட்டு நாரத்தை
செருண்டி
சூரக்காய்
சிறுதும்புளி
அத்தி
அகல்யா
ஈர்குள்ளி
பாலமரம் (மனில்காரா)
பச்சைக் கிளுவை
குமிழம்
எலும்பொட்டி
விளா
புங்கன்
கல் ஆல்
புத்ரன் ஜீவா
வேம்பு
ஆய
சரக்கொன்றை
சீத்தா
நீர்மருது
நாவல்
புளி
இலுப்பை
ஈட்டி
தனக்கு
பொருசு
வேங்கை
கறிவேப்பிலை
சூரிப்பழம்
சந்தனம்

மழை காலத்தில் ஆடுகளுக்கு நோய்கள்

ஊட்டமேற்றிய ஆட்டு எரு

கால்நடைகளுக்கு பொதுவாக கோடை காலத்தில் ஏற்படும் நோய்களை விட மழை மற்றும் பனிக்காலத்தில் அதிக நோய்கள் ஏற்படுகின்றன.

🐄 மழைக்காலத்தில் புதிதாக தளிர் விடும் இலைகளையும், புற்களையும் கால்நடைகள் உண்ணும் போது அவற்றுக்கு செரிமான கோளாறுகள் ஏற்படுகின்றன.

இது தவிர கால்நடைகளின் ஊட்டச்சத்துக்காக அரைத்து வைத்த தானியங்களை உணவாக கொடுக்கும் போதும், எளிதில் செரிமானம் ஆகாத காய்கறிகளை கொடுக்கும் பொழுதும் கால்நடைகளுக்கு செரிமான கோளாறு ஏற்படும்.

Continue reading

வேளாண்பயிர்களை பாழ்படுத்தும் மயில், காட்டுப்பன்றி மற்றும் குரங்கு

வேளாண்பயிர்களை பாழ்படுத்தும் மயில், காட்டுப்பன்றி மற்றும் குரங்கு

வேளாண்பயிர்களை பாழ்படுத்தும் மயிலை கட்டுப்படுத்த வயலில் மயில் வரும் பகுதிகளில் அழுகிய கோழி முட்டையை தெளித்து விடுவதன் மூலம் மயில்கள் வேளாண் நிலங்களுக்குள் வருவதைத் தடுக்கலாம்.

Continue reading

காந்திய சிந்தனையில் மனம் வயப்பட்ட லாரிபேக்கர்

காந்திய சிந்தனையில் மனம் வயப்பட்ட லாரிபேக்கர்

காந்திய சிந்தனையில் மனம் வயப்பட்ட லண்டன் கட்டிடக் கலைஞர் லாரிபேக்கர் தமிழகத்துக்கு வந்தபோது இங்குள்ள மண் வீடுகளையும், செங்கல் ஓடுகள் வேய்ந்த வீடுகளையும் பார்க்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது.

வெறும் களிமண் சாந்தால் கட்டப்பட்ட மண் வீடுகள், அவற்றின் மீது வேயப்பட்ட தென்னங்கூரைகள் போன்றவற்றைக் கண்டு அவர் வெகுவாக ரசித்தார்.

மழைக்காலங்களில் கூம்பிய கூரைகள் தண்ணீரைக் கீழே தள்ளிவிடுவதால் வீட்டின் உள்ளே வெப்பம் உணரப்படுவதையும், கோடையில் தென்னங்கீற்றுகளின் வழியே குளிர்ந்த காற்று உள்ளே சென்று இதமான உணர்வை வீட்டில் வாழ்பவர்கள் பெறுவதையும் கண்டு ரசித்தார் பேக்கர்.

Continue reading

செம்மண்

செம்மண்

நிலத்தடிநீர் சிமெண்ட் கலவையால் வற்றப்படுகிறது என்று.
இப்போது கட்டபடும் வீடுகள் வருடத்தில் விரிசல்கள் விட்டுவிடுகின்றன. அதற்கு காரணம் சிமெண்ட் சுவருக்கும் பூச்சுக்கும் சீலிங்கிலும் உள்ள அதிகப்படியான சிமெண்ட் உள்ளதால் உஷ்ணம் வெளியேற முடியாமல் சுவர் வெடிக்கிறது.

Continue reading

மரபுக்குத் திரும்புவோருக்கான வேண்டுகோள்

இயற்கை வாழ்வியல் எனும் கொள்கை அதிவேகமாகப் பரவும் காலம் இது. எங்கு பார்த்தாலும் இயற்கை எனும் சொல் புழங்கப்படுகிறது. ஆனால், மக்கள் இயற்கை வாழ்வியல் எனும் கொள்கையை உண்மையாகவே புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா எனக் கேட்டால், ‘அவ்வாறெல்லாம் இல்லை’ என்பதே உண்மை.

Continue reading

சூழலுக்கு ஏற்ற மண் கட்டிடங்கள்-cob wall mud

சூழலுக்கு ஏற்ற மண் கட்டிடங்கள்

சூழலுக்கு ஏற்ற மண் கட்டிடங்கள் : pillers construct using stone and bricks
Partition walls with cob walling mud
கருங்கல் மற்றும் செங்கல்லை கொண்டு கூரையின் எடையை தாங்க தூண் அமைப்பு போடப்பட்டு உள்ளது.இதனால் rcc கூரை அமைக்கலாம்.

தூண்களுக்கு இடையே உள்ள சுவரானது மண்ணை கொண்டு cob wall முறையில் கையில் மண்ணை பிசைந்து சுவர் கட்டப்படுகிறது.

Continue reading