நமது நோக்கம் இரசாயன உரங்களைத் தவிர்ப்பது மட்டுமல்ல, அஹிம்சையும், பல்லுயிர்களை பாதுபாப்பதும், கிராம மாதிரிகளை உருவாக்குவதும் ஆகும், இதுவே சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாய இயக்கத்தின் நோக்கமாகும்.
இயற்கைக்கு திரும்புவோம்

Learn Share Collaborate
நமது நோக்கம் இரசாயன உரங்களைத் தவிர்ப்பது மட்டுமல்ல, அஹிம்சையும், பல்லுயிர்களை பாதுபாப்பதும், கிராம மாதிரிகளை உருவாக்குவதும் ஆகும், இதுவே சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாய இயக்கத்தின் நோக்கமாகும்.
ஜக்கியை காட்டை அழித்துவிட்டார்,வன விலங்கு வழிதடத்தை அளித்துவிட்டார், என்று கூச்சல் போடுகிறீர்களே அதை நான் தவறு என்று சொல்லவில்லை ஆனால் நீங்கள் வீட்டு மனை இடம் வாங்கி இருக்கிறீர்களே அது விவசாய பூமியா விவசாயத்துக்கு பயன்படாத பூமியா?…
90 சதமான மக்கள் கேரளாவில் வீடு கட்டும்போது இதுபோல சுவர் எழுப்பும்போதே கதவு மற்றும் ஜன்னலகளின் நிழவுகளை வைத்துவிடுகிறார்கள்.நானும் வைத்துவிடுகிறேன்.காரணம் மீண்டும் உடைக்க வேண்டிய தேவை இல்லை.மற்றும் சுவர் கட்டும் போது தூக்கு (plumb) விட வேண்டிய தேவை இல்லை.கட்டுமான செலவு குறைகிறது.
சென்னையில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் அண்மையில் நடைபெற்ற ஐம்பூத விழாவில், சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் கலந்து கொண்டு பேசினார். வீட்டுக் கூரைகளில் வெள்ளைப் பூச்சு பயன்படுத்துவதால் ஏற்படும் பயன் பற்றி அவர் குறிப்பிட்டுப் பேசினார்.�“புவி வெப்பமடைதல் பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது.
இதைத் தடுக்க வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். வீட்டின் மேற்கூரையில் வெள்ளைப் பூச்சு பூசுவதன் மூலம் நாம் உதவ முடியும். வெள்ளைப் பூச்சு வெப்பத்தைக் கிரகிக்காது என்பதால், வீடு உஷ்ணமாவது கணிசமாகக் குறையும். வீட்டுக்குள் வெப்பம் ஊடுருவதைத் தவிர்க்க முடியும். இதனால் வீட்டில் அனல் அடிப்பது குறையும்.
வீடுகளில் ஃபேன், ஏ.சி. பயன்பாடு குறையும்.இதன்மூலம் மின் கட்டணம் சிக்கனமாகும் .இதெல்லாம் நேரடி பயன்கள்.
ஏ.சி. பயன்பாடு குறைவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் நாம் உதவ முடியும். வீட்டின் மேற்கூரை மட்டுமின்றி, வீடு முழுவதும் வெள்ளைப்பூச்சில் இருந்தால் இன்னும் நல்லது’’ என்று ரமணன் வலியுறுத்திப் பேசினார்
நமது நாட்டு மாடுகளை இந்திய மாடு என்று கூறுவதை விட இந்திய ஆப்பிரிக்க மாடுகள் என்று கூறலாம். எப்படி?
பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் பஞ்ச பூதங்களின் உருவாக்கப் பட்டுள்ளன. தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், நுண்ணுயிர்கள் என அனைத்தும் பஞ்ச பூதங்களால் ஆனது. இவை நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஐந்து பூதங்களாக உள்ளன.
மண்புழுக்கள் சாதகமில்லா நேரங்களில் மண்ணின் ஆழத்திற்கு சென்று சமாதி (dormancy) நிலையில் உள்ளன, சமாதி நிலை என்பது செயலற்ற நிலையாகும், இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும், மரங்களும் குளிர்காலங்களில் சமாதி நிலையில் இருக்கக்கூடியது. விலங்குகளில் தவளைகள் வாழ்க்கையிலும் நாம் இதை நேரடியாகப பார்க்க முடியும்.