Category: Organic Agriculture

என்ன மாதம் என்ன செடிகள் வளர்க்கலாம்

என்ன மாதம் என்ன செடிகள் வளர்க்கலாம்

என்ன மாதம் என்ன செடிகள் வளர்க்கலாம்!


ஜனவரி மாதம் (மார்கழி, தை)
இந்த மாதங்களில் (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.நன்கு விளைசல் கிடைக்கும்.

பிப்ரவரி மாதம் (தை,மாசி)
இந்த மாதங்களில் (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

மார்ச் மாதம் (மாசி, பங்குனி)
இந்த மாதங்களில் (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

ஏப்ரல் மாதம் (பங்குனி, சித்திரை)
இந்த மாதங்களில் (பங்குனி, சித்திரை) செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.


மே மாதம் (சித்திரை, வைகாசி)
இந்த மாதங்களில் (சித்திரை, வைகாசி) செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

ஜூன் மாதம் (வைகாசி, ஆனி)
இந்த மாதங்களில் (வைகாசி, ஆனி) கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

ஜூலை மாதம் (ஆனி, ஆடி)
இந்த மாதங்களில் (ஆனி, ஆடி) மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

ஆகஸ்ட் மாதம் (ஆடி, ஆவணி)
இந்த மாதங்களில் (ஆடி, ஆவணி) முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

செப்டம்பர் மாதம் (ஆவணி, புரட்டாசி)
இந்த மாதங்களில் (ஆவணி, புரட்டாசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

அக்டோபர் மாதம் (புரட்டாசி, ஐப்பசி)
இந்த மாதங்களில் (புரட்டாசி, ஐப்பசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

நவம்பர் மாதம் (ஐப்பசி, கார்த்திகை)
இந்த மாதங்களில் (ஐப்பசி, கார்த்திகை) செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

டிசம்பர் மாதம் (கார்த்திகை, மார்கழி)
இந்த மாதங்களில் (கார்த்திகை, மார்கழி) கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

மேலும் படிக்க :
எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் செய்யலாம்
பட்டம் பார்த்து பயிர் செய்

பாழ்பட்ட நிலத்தையும் வளமாக்கும் பலதானிய விதைப்பு

பலதானிய விதைப்பும், விதைப் பரவலாக்கமும்

சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகை, கடலூர் மாவட்ட விவசாயிகளின் நிலமெல்லாம் கடல் நீர் புகுந்து உப்பு படிந்தது. நிலத்தை சோதித்த விவசாயத் துறை வல்லுநர்களும், மிகப் பெரும் விஞ்ஞானிகளும் நிலத்தை சோதித்து இந்த நிலத்தில் பயிர் செய்ய பல வருடமாவது ஆகும் என்றனர். நிறைய செலவும் ஆகும் என்று கைவிட்டனர்.

இந்நிலையில் நம்மாழ்வார் ஐயா அவர்கள் அந்த நிலங்களை வேளாண் நிலங்களாக மாற்ற முடியும் என்று கூறினார். பேசியதுமட்டுமல்ல, மூன்றே மாதங்களில் அந்த நிலங்களை விளை நிலங்களாக மாற்றியும் காட்டினார் அவர்.

Continue reading

பஞ்சகவ்யா

பஞ்சகவ்யா
பஞ்சகவ்யா

பஞ்சகாவ்யா ஒரு அங்கக பொருள். இது செடியின் வளர்ச்சியை உயர்த்தியும் மற்றும் நோய் பற்றாநிலையை கொடுக்கும். பஞ்சகாவ்யாவில் ஒன்பது வகையான பொருட்கள் உள்ளன.

தேவையான பொருட்கள்:

மாட்டுச்சாணம்
மாட்டு சிறு நீர்
பால்
தயிர்
வெள்ளம்
நெய்
வாழை
இளநீர்
தண்ணீர்

செய்முறை

மாட்டுச்சாணம் – 7 கிலோ
மாட்டு நெய் – 1 கிலோ
இந்த இரண்டு
பொருட்களையும் நன்றாக காலை மற்றும் மாலை நேரங்களில் கலக்கி மூன்று நாட்கள் வரை வைக்கவும்.

மாட்டு சிறு நீர் – 10 லிட்டர்
தண்ணீர் – 10 லிட்டர்
மூன்று நாட்கள் கழித்து மாட்டு சிறுநீர் மற்றும் தண்ணீரை இதனுடன் கலக்கி தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நன்றாகக் கலக்கி 15 நாட்கள் வரை வைக்கவும். 15 நாட்கள் கழித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அதனுடன்  வைத்தால் 30 நாட்களுக்குள் பஞ்சகாவ்யா தயாராகிவிடும்.

தயாரிக்கும் முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மண் பானை, கற்காரை தொட்டி அல்லது பிளாஸ்டிக் கேன்களில் மேலே கொடுக்கப்பட்டுள்ள வரிசைகளில் சேர்க்கவும் கொள்கலனை நிழலில் திறந்து வைக்கவும். உட்பொருளை நாளொன்றிற்கு இருமுறை காலையும், மாலையும் கலக்கி வைக்கவும. 30 நாட்களுக்கு பிறகு பஞ்சகாவ்யா கரைசல் தயாராகிவிடும். இதை தயாரிக்கும் போது எருமையுடைய பொருட்களை கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாட்டு மாடுகள் சிறந்தது.. இதனை நிழலில் வைக்கவும். கம்பி வலைக்கண் அல்லது பிளாஸ்டிக் கொசு வலையை அதன் மேல் மூடி வைக்கவும் ஈக்கள் முட்டை இடுவது மற்றும் கரைசலில் ஈ இன காலில்லா புழுக்கள் உருவாவதை தடுக்க கரும்பு சாறு இல்லையென்றால் 500 கிராம் வெள்ளத்தை மூன்று லிட்டர் தண்ணீரில் கலக்கி பயன்படுத்தலாம்..

பஞ்சகாவ்யாவிற்கு தேவையானவை

சாணம்
கோமியம்
நெய்
பால்
தண்ணீர்
தயிர்
வெல்லமம்
இளநீர்
பூவன் பழம்

வேதிப்பொருள்களின் கூட்டமைப்பு

அமில நிலை 5.45
ஈ.சி டி எஸ்.எம்2 10.22
மொத்த தழைச்சத்து (பிபிஎம்) 229
மொத்த மணிச்சத்து (பிபிஎம்) 209
மொத்த சாம்பல்சத்து (பிபிஎம்) 232
சோடியம் 90
சுண்ணாம்புச்சத்து 25
ஐ.ஏ.ஏ.(பி.பி.எம்.) 8.5
ஐி.ஏ.(பி.பி.எம்.) 3.5
நுண்ணுயிரி சுமை
பூசணம் 38800 மி.லி
பாக்டீரியா 1880000 மி.லி.
லேக்டோபேசில்லஸ் 2260000/மி.லி.
மொத்த காற்றில்லாச் சுவாச உயிரி 10000/மி.லி.
அமிலம் 360/மி.லி.
மெத்தனோஜென் 250/மி.லி.

பஞ்சகாவ்யாவின் இயல்பு வேதிப்பொருள் மற்றும் உயிரியல் பொருட்களில் முக்கியமான ஊட்டப்பொருள், நுண் ஊட்டப்பொருள் மற்றும் வளர்ச்சிப் பொருள்கள், நுண் ஊட்டப்பொருள் மற்றும் வளர்ச்சிப் பொருள்கள் (IAA & GA) உள்ளன. நுண்ணுயிரியை நொதித்தல் அதாவது ஈஸ்ட், லேக்கேடாபேசில்லஸ் இணைந்து அமில நிலையை குறைத்துவிடும். பால் பொருட்கள் மற்றும் வெள்ளம்/கரும்பு சாறினை சேர்த்தால் வளர்வதற்கு உருதுணையாக இருக்கும்.

லேக்டோபேசில்லஸில் நன்மை பயக்கும் வளர்ச்சிதைப்பில் உருவாகும். அவை பின்வருமாறு அங்கக அமிலம், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் எதிர் உயிரிப்பொருள்களை உருவாக்கும். இவை மற்ற நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிக்கு எதிர்ப்பாக செயலாற்றும். ஜி.சி.-எம்.எஸ். பகுப்பாய்வில் உள்ள கூட்டுகள்.விலங்குகளின் நலத்திற்கு பயன்படும் பஞ்சகாவ்யா….

நுண்ணுயிரி, பாக்டீரியா, பூஞ்சாண், புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, அமினோ அமிலங்கள், வைட்டமின், நொதிப்பொருள், வளர்ச்சி ஊக்கக் கூறு, நுண்ணூட்டச்சத்து, எதிர் உயிரியமாக்கி மற்றும் முழுத்தடுப்பாற்றலை அதிகப்படுத்தும் காரணிகள் ஆகியவைகளுக்கு பஞ்சகாவ்யா முக்கியமாகத் திகழ்கின்றது.

மனிதர்களில்

பஞ்சகாவ்யாவில் இருக்கும் நுண்ணுயிரிகள் முழுத்தடுப்பாற்றலை தூண்டி, உடம்பினுள் கொண்டு செல்லும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக அதிகப்படியான நோய் எதிர்ப்பொருளை உருவாக்கும். இது நோய்த்தடுப்பாற்றல் மருந்தினை போல் செயல்படும். பஞ்சகாவ்யா விலங்குகள் மற்றும் மனிதர்களின் முழுத்தடுப்பாற்றலை அதிகப்படுத்தும். நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாத்து, குணப்படுத்த உதவும். முதிர்ச்சியைக் கட்டுப்படுத்தி நீண்ட நாட்களுக்கு இளமையாக வைத்திருக்க உதவும். பஞ்சகாவ்யாவில் இருக்கும் காரணிகள் பசியார்வம், ஜீரணத்தன்மை, தன்மயாதல் மற்றும் நச்சுத்தன்மையை உடலில் இருந்து அகற்றுதல் உதவி புரியும். மலச்சிக்கலை முழுமையாகக் குணப்படுத்திவிடும்.

வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு

ஆடுகளின் வயதைப் பொருத்து ஒரு நாளைக்கு ஒரு ஆட்டிற்கு 10.மி.லி.யில் இருந்து 20.மி.லி. வரை பஞ்சகாவ்யாவை கொடுத்தால் அதனுடைய எடை குறுகிய காலத்தில் அதிகமாகி, திடமாகவும் இருக்கும். நோய் தாக்குதலும் குறையும்..

மாடுகள்

மாடுகளுக்கு நாளொன்றுக்கு ஒரு மாட்டிற்கு 100 மி.லி. பஞ்சகாவ்யாவை தீனியிலும், தண்ணீரிலும் கலந்து கொடுத்தால் மாடுகள் திடமாகவும், பால் உற்பத்தி அதிகமாகவும், கொழுப்பும் அதிகமாகி காணப்படும். கருக்கொள்ளுதலின் எண்ணிக்கை அதிகமாகும்.
கருஇணையம், பால்மடி வீக்கம். பாதம் மற்றும் வாய் நோய்களைக் குறைத்துவிடும். மாடுகளின் தோல்களில் நிறைய முடிகளுடனும், மினு மினுப்பாகவும் தோன்றும். வேலி போடுவதற்கு முன் உலர்ந்த புற்களின் மேல் யூரியாவை தெளிப்பதற்கு பதிலாக சில விவசாயிகள் 3 சதவீதம் பஞ்சகாவ்யா கரைசலை தெளிப்பார்கள். அடுக்கடுக்க உலர்ந்த புற்கள் புளித்துப் போகும். மாடுகளுக்கு பஞ்சகாவ்யா தெளிக்காத புற்களை விட இந்த வகையான உலர்ந்த புற்களையே மாடுகள் விரும்புகின்றது.

கோழி

தினமும் தீனியிலோ அல்லது குடிநீரிலோ ஒரு பறவைக்கு 1.மி.லி. என்ற அளவில் கலந்து கொடுத்து வந்தால் கோழிகளுக்கு நோய் தாக்குதல் இல்லாமல், திடமாக இருக்கும் அதிக காலங்களுக்கு முட்டைகள் இடும். எடை அதிகரிக்கும்.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மீன்

மீன் குளங்களில் பஞ்சகாவ்யாவை தினமும் மாட்டு சாணத்தில் கலந்து வைக்கவும். மீனின் வளர்ச்சி துரிதமாக இருக்கும்.. அதிக எடை உள்ளதாக வளரும்.. அதிகப்படியான இழப்பும் இருக்காது..

விதைக்கும் போது கவனிக்க வேண்டியவை

விதைக்கும் போது கவனிக்க வேண்டியவை

 விதைக்கும் போது கவனிக்க வேண்டியவை

காய்கறிகள், கீரைகள் போன்ற பல விதைகளை விதைக்கும் போது சில முறைகளை கவனிக்க வேண்டும். அதைப் பற்றி இங்கு காண்போம்.

👉 சிலர் தொட்டியில் விதை போட்டு வளர்ப்பார்கள். அதற்கு பயன்படுத்தும் தொட்டியானது சிறியதாக இருந்தால் அதில் விதைக்க கூடாது.

👉 மண் இறுகி உள்ள நிலத்தில் விதைப்பை தவிர்க்க வேண்டும். மண்ணின் தன்மைகேற்ப பலன் கொடுக்கும் விதைகளை விதைக்க வேண்டும்.

🍃 விதைக்கும் போது விதைகளை மிக மிக அருகில் விதைக்க கூடாது.

🍃 மேலும் ஆழமாக விதைக்க கூடாது. விதை மண்ணில் மூடி இருந்தால் போதும்.

🍃 விதைத்தப்பின் நீர் அதிகமாக ஊற்ற கூடாது. விதை மக்கிதான் முளைக்கும் அதிகம் ஈரம் இருந்தால் முளைக்காது.

🍃 கீரை விதையை தூவிவிட்டு மண்ணை கிளறி விட வேண்டும். பின் மெதுவாக மண்ணை அழுத்தி விட வேண்டும்.

🍃 இதன் மூலம் விதையும், மண்ணும் ஒட்டும் முளைப்பு நன்றாக இருக்கும். மண்ணில் கீரை விதை விதைத்த பின் நீரை தெளித்து விட வேண்டும்.

🍃 தொட்டியாக இருந்தால் அதன் ஓரத்தில் நீர் ஊற்ற வேண்டும். நிழலில் வைக்க கூடாது.

🍃 நாட்டு விதைகள் மண்ணில் வளர்வதை விட தொட்டியில் வளர்ச்சி குறைவாக தான் இருக்கும்.

🍃 நாட்டு விதையை விதைக்கும் முன் பஞ்சகாவியாவில் இரண்டு மணி நேரம் ஊற வைத்து, பின் காய வைத்து விதைத்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

🍃 தக்காளி, கத்தரி, மிளகாய் விதைகளை கண்டிப்பாக நாற்று விட்டு தான் பின் எடுத்து நடவு செய்ய வேண்டும். கீரை விதை விதைக்கும் முறையில் இதனை விதைக்க வேண்டும்.

🍃 விதைகளை நாட்டு மாட்டு கோமியத்தில் ஊற வைத்து பின் அதனை காய வைத்து சுரைக்குடுவையில் வைத்து எத்தனை வருடம் வேண்டுமாலும் சேமிக்கலாம்.

🍃 மண்ணில் மாட்டு சாணியை கலந்த பின் விதைத்தால் விதை விரைவாக மக்கி முளைக்கும்.

அவரைக்காய் மாடித் தோட்டம்

அவரைக்காய் மாடித் தோட்டம்

அவரைக்காய் மாடித் தோட்டம்

தேவையான பொருட்கள்

1. Grow Bags அல்லது Thotti.

2. அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண் புழு உரம், செம்மண், உயிர் உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.

3. விதைகள்

4. நீர் தெளிக்க பூவாளி தெளிப்பான்

5. பந்தல் போடுவதற்கான உபகரணங்கள்

தொட்டிகள்

தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாண‌ம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு இட்டு தொட்டியை நிரப்ப வேண்டும். இந்த கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 7-10 நாட்கள் கழித்து விதைப்பு செய்ய வேண்டும். செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.

விதைத்தல்

நோய் தாக்காத ஆரோக்கியமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். அவரையில் செடி அவரை, கொடி அவரை உள்ளன. செடி அவரைக்கு 3 விதைகள் வரை ஒரு தொட்டியில் ஊன்றலாம். கொடி அவரைக்கு 3 முதல் 4 விதைகள் வரை ஊன்றலாம்.

நீர் நிர்வாகம்

விதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை நீர் ஊற்ற வேண்டும்.

பந்தல் முறை

மாடித்தோட்டத்தில் பந்தல் போடுவது சுலபமான வேலை. அதற்கு நான்கு சாக்குகளில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளில் வைக்க வேண்டும். பின்னர் இதில் கயிறு/கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும்.

உரங்கள்

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு கிளறிவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

பாதுகாப்பு முறைகள்

கொடி அவரையில் வளரும் நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக கிளைகள் தோன்றும். செடியைச் சுற்றி அடி மண்ணை வாரம் ஒரு முறை கிளறி விட வேண்டும். பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.

பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பைகளில் ஊற்ற வேண்டும். இது சிறந்த நோய் தடுப்பானாக செயல்படும்.

அறுவடை

காய்களை முற்றி விடாமல் சரியான பருவத்தில் இருநாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்ய வேண்டும். இது 3 முதல் நான்கு மாதம் வரை பலன் கொடுக்கும்.

இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர்

இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர் insects

 இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர்

அரப்பு மோர் கரைசல்

இதுவும் ஒரு வகை வளர்ச்சி ஊக்கியே அரப்பு இலை என்று அழைக்கப்படும் உசிலை மர இலைகளை 2 கிலோ பறித்து வந்து தேவையான நீர் சேர்த்து நன்கு அரைக்கவும். அதிலிருந்து 5 லிட்டர் கரைசல் எடுத்து அதனுடன் 5 லிட்டர் புளித்த மோரைச் சேர்க்க வேண்டும் இக்கலவையை 7 நாட்கள் நன்கு புளிக்கவிட வேண்டும். இதன் பின்னர் கரைசலை எடுத்து ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் நீர் சேர்த்து பயிருக்குத் தெளிக்கலாம். இது பயிர்களை வளர்க்கிறது. பூச்சிகளை விரட்டுகிறது பூசண நோயைத் தாங்கி வளர்கிறது இதில் ஜிப்பர்லிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கியின் திறன் உள்ளது.

இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர்

இயற்கை தொழில்நுட்பங்களில் ஒன்றான அரப்பு மோர் கரைசல்  தயாரிப்பது எப்படி?
குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் கிராமங்களில் பண்ணை மகளிர் அமைக்கும் வீட்டுக் காய்கறி மற்றும் பயிர் சாகுபடி நிலங்களில் எளிதாக வேளாண் பணிகளை சிறப்பான முறையில் செய்து அதிக லாபம் பெற அரப்பு மோர் கரைசலை தயாரிக்கவும், தொடர்ந்து பயன்படுத்துவது வாயிலாக அதிகளவு மகசூல் பெற முடியும்.

தயாரிக்கும் முறை:

நமது ஊர்களில் அதிகமாக கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர இலைகளை 2 கிலோ அளவில் பறித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் நன்றாக நீருடன் சேர்த்து அரைக்க வேண்டும்.

இதிலிருந்து 5 லிட்டர் அளவில் கரைசல் எடுத்து புளித்த மோருடன் சேர்க்க வேண்டும்.

பின்னர் இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒருவார காலத்துக்கு புளிக்க விட வேண்டும்.

பின்பு ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து விவசாயிகள் பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம்.

கை தெளிப்பானில் தெளிக்கும் போது ஒரு டேங்க் அளவுக்கு தெளிக்கும் அளவு இது ஒரு ஏக்கர் பயிருக்கு 10 தெளிப்பான் டேங்க் அளவுக்கு தெளிக்க வேண்டியிருக்கும்.

விவசாயிகள், பண்ணை மகளிர் குறைந்த செலவில் அரப்பு மோர் கரைசலை தங்கள் வீடுகளிலேயே தயார் செய்து குறைந்த காலத்தில் பயன்படுத்தி அதிக மகசூல் பெற முடியும்.

பிற பயன்கள்:

அரப்பு மோர் கரைசல் தெளிப்பதன் வாயிலாக எளிதாக பயிர் பாதுகாப்பு தொடர் நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள முடியும்.

அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தூர ஓடிவிடும்.

குறைந்த செலவில் விவசாயிகள் தங்களின் வீடுகளில், வயல்களில், தோட்டங்களில் உள்ள பயிரை எளிதாக பாதுகாக்க முடியும்.

அரப்பு மோர் கரைசலை பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பூக்கள் பூக்கும்.

அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை தந்து அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.

குறைந்த செலவில்,  விவசாயிகளிடம் உள்ள இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்களை கொண்டு எளிதாக தயாரிக்கப்படும் அரப்பு மோர் கரைசலை தமிழக விவசாயிகள் பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் கூறியுள்ளார்.
நன்றி:

அரப்பு – மோர் கரைசல்:
தேவையான பொருட்கள்:

5 லிட்டர் மோர், 1 லிட்டர் இளநீர், 1-2 கிலோ அரப்பு இலைகள் (அல்லது, 250-500 கிராம் இலை தூள்), 500 கிராம் பழ கழிவுகள் அல்லது பழ கழிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் சாறு.

தயாரிப்பு:

மோர் மற்றும் இளநீர் நன்கு கலக்கவும். இலைகளை நன்கு கலக்கவும். பழகழிவுகளைப் பயன்படுத்தி இருந்தால் அதனை நொறுக்கப்பட்ட இலைகளடன் சேர்த்து நைலான் வலையில் இந்த கலவையை வைத்து கட்டி வைக்கவும். வாழையை இளநீர் – மோர் கரைசலில் மூழ்குமாறு வைக்கவும். ஏழு நாட்களில் நொதித்து விடும். நைலான் வலையை பயன்படுத்த்துவதன் மூலம் தெளிக்கும்போது வடிகட்டும் அவசியத்தை தவிர்க்க முடியும்.

நீங்கள் அரப்பு இலை தூள் பயன்படுத்துவதாக இருந்தால், பழ கலவைகளுக்கு பதிலாக பழ சாறு பயன்படுத்த வேண்டும். நான்கு பொருட்களையும் கலந்து அதனை ஏழு நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.

குறிப்பு:

எங்களுடைய இலக்கு விவசாயிகளுக்கு செயல்முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பதுதான், இதனால் தான் நாங்கள் பழ சாற்றுக்கு மாற்றாக பழக்கழிவும், இலைப்பொடிக்கு மாற்றாக அரப்பு இலைகளைப் பரிந்துரை செய்கிறோம். அரப்பு கிடைக்கவில்லை என்றால், அதற்கு பதிலாக சோப் நட்டு விதை தூள் பயன்படுத்தலாம். இதனை நாம் அது சோப்பு நட்டு-மோர் கரைசல் என்று அழைக்கலாம். தாவரங்கள் நொதிக்கும் போது ஒட்டும், பசை போன்ற திரவத்தை வெளியிட செய்கிறது. நீங்கள் மோர் இந்த திரவ சேர்க்க புளித்துப் விட கூடும். செம்பருத்தி இலைகள், காட்டுக்கொடி (கொக்குலசு ) விட்டு, பசலை (கீரைகள்), அவரை, மிருதுவான வெற்றிலை, மற்றும் பலாப்பழம் தடித்த தோல் (வெளி தோல்) உதாரணங்களாகும்.

பயன்பாடு:

500ml to 1 லிட்டர் கரைசலை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இது தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது, பூச்சிகளை தடுக்கிறது, மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிர்ப்பு தன்மை உருவாகிறது. இந்த கரைசலானது கிப்பெரெளிக் அமிலம் போன்றன் திறன் வாய்ந்தது அதே சாத்தியம் உள்ளது.

மோர் கரைசல்- மேம்படுத்தப்பட்ட முறை :

இந்த மோர் கரைசல் ஒரு செய்ய எளிதான மற்றும் மேம்படுத்தப்பட்ட முறையாகும். இதன் முந்தைய இளநீர் மோர் கரைசல் மற்றும் அரப்பு மோர் கரைசல் போன்று அதே பயன்கள் உள்ளன.

தேவையான பொருட்கள் :

மோர் 4 லிட்டர் , இளநீர் 1 லிட்டர் , பப்பாளி பழ கூழ் 250ml , மஞ்சள் தூள் 100 கிராம் , பெருங்காயம் தூள் 10 முதல் 50 கிராம் . வேம்பு, துளசி , அரப்பு , சீதாப்பழம், நொச்சி, கற்றாழை மற்றும் புதினா. இந்த இலைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மேலே உள்ள கரைசலில் கலந்து விடவும். இதனை 7 நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.

அங்கக சான்றளிப்புக்கான வழிமுறைகள்

அங்கக சான்றளிப்புக்கான வழிமுறைகள்
அங்கக சான்றளிப்புக்கான வழிமுறைகள்

அங்கக சான்றளிப்புக்கான தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை வழிமுறைகள்

  1. சான்றளிப்புக்கான பொதுவான விதிமுறைகள்
  2. சான்றளிப்புக்கான விண்ணப்ப படிவம்
  3. விண்ணப்படிவத்தை மதிப்பீடு செய்தல்
  4. ஆய்வுக்கான நேரத்தை அட்டவணையிடுதல்
  5. ஆய்வின் போது ஆவணங்களை சரிபார்த்தல்
  6. குழு சான்றளிப்பு வழிமுறைகள்
  7. சான்றளிப்பை தொடருதல்
  8. அங்கக சான்றளிப்புக்கான தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை வழிமுறைகள்
1. சான்றளிப்புக்கான பொதுவான வழிமுறைகள்

அங்கக உற்பத்திக்கான தேசிய திட்டத்தின் விதிமுறைகளின் கீழ் பதிவுசெய்தவர் இயங்க வேண்டும். அங்கக உற்பத்திக்கான தேசிய வழிமுறைகளின் படி நடக்க வேண்டும். தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறை, அங்கக வேளாண் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு, தேன், சேகரித்தல், பதப்படுத்துதல், பொதி கட்டுதல், சேமிப்பு, அட்டையிடுதல் மற்றும் போக்குவரத்துக்கான பொதுவான வழிமுறைகளை வழங்கியுள்ளது.அங்கக உற்பத்திக்கான திட்டத்தை ஆண்டுதோறும் தயாரித்து, அமல்படுத்தி, மேம்படுத்த வேண்டும். அதை தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறைக்கு வருடந்தோறும் அனுப்ப வேண்டும்.உற்பத்தி மற்றும் அதை கையாளும் முறை, அங்ககமில்லாத சான்று உற்பத்தி மற்றும் அதை கையாளும் முறை, பகுதிகள், அமைப்புகள் போன்றவற்றை அந்தந்த இடத்தில் அங்கக சான்றளிப்பு ஆய்வாளர்கள், தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை உயர் அதிகாரிகள், அபிடா அதிகாரிகளால் கள ஆய்வு செய்ய வேண்டும்.5 வருடங்களுக்கு குறையாமல் உள்ள அங்கக செயல்முறைக்காக பராமரிக்க வேண்டும். தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையின் அங்கரிக்கப்பட்ட அலுவலர்கள், மாநில (அ) மத்திய அரசு அதிகாரிகளை பதிவேடுகளை வேலை நேரங்களில் மறு ஆய்வு செய்யவும், தேசிய அங்கக உற்பத்தி திட்டம் விதிகள் மற்றும் தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.குறிப்பிட்ட நேரத்திற்குள் தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையால் விதிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும்.செயல்படுத்துபவர் தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறைக்கு தகவல் பின்வருவனவற்றை பற்றி தெரிவிக்க வேண்டும்.விண்ணப்பத்தில், உற்பத்தி பிரிவு, அமைந்துள்ள இடம், வசதிகள், கால்நடை(அ)ஏதாவது ஒரு பொருள் செயலில் உள்ளதா என்றும்சான்றளிப்பு செயல்களில் (அ) சான்றளிப்பு செயல்களின் ஏதாவது ஒரு பகுதியில் மாற்றம் ஏற்பட்டால், அது தேசிய அங்கக சான்றளிப்பு துறையின் விதிமுறைகளின் வழிப்படி உற்பத்தி செய்யப்படுவது பாதிக்கப்படும்.

2. சான்றளிப்புக்கான விண்ணப்ப படிவம்

அங்கக உற்பத்தி செய்வதை பதிவு செய்யவதற்காக விண்ணப்பத்தை உரிய படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தில் பின்வரும் தகவல்கள் இடம் பெற வேண்டும்.

அங்கக உற்பத்தி (அ) கையாளும் முறை திட்டம்விண்ணப்பத்தில் அனைத்து தகவல்களான பெயர், முகவரி, தகவல் பெறும் நபரின் விபரம், தொலைபேசி எண் போன்றவை இடம் வேண்டும்முன்பே விண்ணப்பம் அளித்தவர்களின்  பெயர் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.வேறு ஏதாவது தகவல் இருந்தாலும் குறிப்பிட வேண்டும்.பதிவு கட்டணம், ஆய்வு கட்டணம் ஒரு முறை, பயணச் செலவு ஒரு முறை விண்ணப்ப படிவத்துடன் இணைத்து அனுப்பவேண்டும். தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையில் குறிப்பிடப்படும் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம்  செய்தல்

விண்ணப்பம் -1 அ விண்ணப்பம் ஈ விண்ணப்பம் -21 விண்ணப்பம் -11

 

3.விண்ணப்பத்தை மறு ஆய்வு செய்தல்

விண்ணப்பத்தை ஆய்வு செய்ய வேண்டும்.
எந்த தகவலாக இருந்தாலும் செயல்படுத்துபவருக்கு தெரிவிக்க வேண்டும். செயல்படுத்து பவரும் உடனடியாக தேவைப்படும் தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டணம் செலுத்தாத விண்ணப்பங்கள் மறு ஆய்வு செய்யப்படாது.
தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையால் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளுதல் தவிர்த்தல் போன்றவை முடிவு எடுக்கப்பட வேண்டும்.
மறுக்கப்பட்ட விண்ணப்பங்கள் விண்ணப்பித்தவருக்கு திருப்பி அனுப்பப்படும்
விண்ணப்பங்களுக்காக செலுத்தப்பட்ட கட்டணங்கள் திருப்பி தரப்படமாட்டாது
பதிவிற்குப்பிறகு (அ) பதிவு செய்த விண்ணப்பத்தில் கள ஆய்வு பற்றி தெரிவிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பவர் எப்பொழுது வேண்டுமானாலும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஆனால் கட்டணம் மட்டும் திருப்பி தரப்படமாட்டாது.

 

4.ஆய்வை அட்டவணையிடுதல்

முதல்கட்ட கள ஆய்வு நடைபெறும் நேரத்தை குறிக்க வேண்டும். நிலம், வசதிகள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்யும்போது செயல்படுத்துபவர் அந்த அமைப்பை பற்றி விவரிக்க வேண்டும். பதிவு செய்த நாளிலிருந்து 6 மாதம் வரை முதல்கட்ட ஆய்வு தாமதிப்படலாம். அதனால் அங்கக உற்பத்தி செய்பவர்கள் அதற்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பதிவேடுகளையும் பராமரிக்க வேண்டும்.
அங்கக உற்பத்தி செய்பவர் முன்னிலையே கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
வருடாந்திர ஆய்வு ஒரு முறையும், கூடுதலாக ஒரு ஆய்வும் மேற்கொள்ளப்படும்.

5.ஆய்வின் போது ஆவணங்களை சரிபார்த்தல்

ஆய்வின் போது, தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையின் விதி முறைகளின் படி உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.
அங்கக உற்பத்தி செய்பவர் சமர்பித்த திட்ட ஆவணத்தை விதிமுறைகளின்படி உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்
தடைசெய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தக் கூடாது மண், நீர் மாதிரி, கழிவுகள், விதைகள், பயிர் திசுக்கள், பயிர் விலங்கு மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் பற்றிய மாதிரியை அனுப்ப வேண்டும்.
அனுப்பபட்ட மாதிரியை 17025 ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட வேண்டும். இதற்கான கட்டணத்தை உற்பத்தி செய்பவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கள ஆய்வின் போது, அங்கக உற்பத்தி செய்யும் நபருடன் பேட்டி காண வேண்டும். ஆய்வாளர் மற்ற தகவல்களையும் சேகரிக்க வேண்டும்.
ஆய்வு முடிந்தவுடன், சரிபார்ப்பதற்கான பட்டியல் மற்றும் ஆய்வு அறிக்கை தயார் செய்ய வேண்டும். உற்பத்தி செய்பவரிடமிருந்து  கையெழுத்து வாங்க வேண்டும்.
குறிப்பிட்ட அங்கக உற்பத்தி செய்பவர் மற்றும் மதிப்பீ்ட்டாளருக்கு  சரிபார்க்கும் பட்டியல், ஆய்வறிக்கையை அனுப்ப வேண்டும்.
மதிப்பீட்டாளரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆய்வறிக்கைகளை மதிப்பீடு செய்ய வேண்டும். ஏதாவது தகவல் மேலும் தேவைப்பட்டால் உற்பத்தி செய்பவருக்கு தெரிவிக்க வேண்டும்.
விதிமுறைகளின் படி இல்லாமல் இருந்தால், உற்பத்தியாளர்களிடமிருந்து விளக்கம் கேட்க வேண்டும்.

 

6. குழு சான்றளிப்பு விதிமுறைகள்

பொதுவாக தேவைப்படுபவை

இந்த அமைப்பு விவசாயி குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், ஒப்பந்த உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் பிரிவுக்கு அளிக்கப்படுகிறது

உற்பத்தி குழு ஒரே மாதிரியான உற்பத்தி அமைப்பு மற்றும் ஒரே மாதிரியான புவியியல் அமைப்புக்கு உள்ளாகவும் இருக்க வேண்டும்.

4 எக்டருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகள் மற்றும் அதற்கு அதிகமாக உள்ளவர்கள் ஒரு குழுவின் கீழ் வருவார்கள். இவர்களை தனித்தனியே ஆய்வு செய்ய வேண்டும். பண்ணையின் மொத்த பரப்பு குழுவின் மொத்த பரப்பில் 50 க்கு குறையாமல் இருக்க வேண்டும்.

பதப்படுத்துபவர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஒரு குழுவின் கீழ் வருவார்கள் ஆனால் அவர்கள்  தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையில்  வருடந்தோறும் ஆய்வு செய்யபட வேண்டும்.

குழுவின் அமைப்பு

குழுக்கள் சட்ட அளவில் மதிப்பும், தனிப்பட்ட அமைப்பாகவும் இருக்க வேண்டும்

உள்கட்டுபாட்டு அமைப்பை அந்த குழுக்கள் வைத்திருக்க வேண்டும்.

தனிப்பட்ட செயல்பாடுகளை செயல்படுத்துவதற்காக அந்தக் குழுவிலிருந்து தனிப்பட்ட நபர்கள் குழுக்கள் அமைக்க வேண்டும்.

உள்கட்டுப்பாட்டு அமைப்பை அமல்படுத்துவதற்கும், ஏற்படும் பிரச்சனைகளை அறியவும் உள் தர அமைப்பு கையேடு ஒன்றை அந்த குழுக்கள் உருவாக்க வேண்டும்

குழு சான்றளிப்புக்கான உள் விதிமுறைகள்

தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின் வழி முறைகளின் கீழ் உள்ளூர் மொழியில் உள் விதிமுறைகள் தயாரிக்கப்படும்.

உற்பத்தி பிரிவின் வரையறை, மாற்றுவதற்கான முறை, இணை உற்பத்தி, மாற்றுவதற்கான காலம், அனைத்து உற்பத்தி பிரிவுக்கான உற்பத்தி விதி முறைகள், அறுவடை மற்றும் அறுவடையின் சார் செய்முறைகளை உள்ளடக்கி உள் விதிமுறைகள் இருக்க வேண்டும்.

வாங்குவதற்கான வழிமுறை, வர்த்தக வழிமுறை, பதப்படுத்துவதற்கான வழிமுறைகளை உள்ளடக்கி இருக்க வேண்டும்.

சான்றளிப்புக்கு மானியம் வழங்குதல்

தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறை, பதிவு சான்றிதழ், பரிமாற்ற சான்றிதழ், பொருள் சான்றிதழ்களை வழங்க வேண்டும்.

சான்றளிப்பு குழுவினால் எடுக்கப்பட்ட முடிவைக் கொண்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது

நோக்கத்திற்கான சான்றிதழ்

சான்றளிப்புக்கு மறுப்பு தெரிவித்தல்

விதிமுறைகளுக்கு அங்கக செயல்பாடுகள் ஒத்துவராமல் இருந்தால், உற்பத்தி செய்பவருக்கு சான்றிதழ் பற்றித் தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு சான்றளிப்புத் துறை சான்றிதழ் வழங்கும் முன் பிழைகளைத் திருத்த வேண்டும்.

மற்றொரு சான்றிளிப்பு அமைப்புடன் இணைந்து உற்பத்தி செய்பவராக இருந்தால், புதிய விண்ணப்பத்தை தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை விண்ணப்படிவத்தில் உள்ள பிழைகளை சரிபார்க்க வேண்டும்.

சான்றிதழ்கள் மறுப்பு பற்றி உற்பத்தியாளருக்கு எழுத்து மூலம் அறிக்கை தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை வழங்க வேண்டும்.

 

7. சான்றளிப்பை தொடருதல்

சான்றளிப்பை தொடர வேண்டுமானால், கட்டணம் செலுத்தி பதிவை புதுப்பிக்க வேண்டும்.

உற்பத்தி(அ) கையாளுவதற்காக புதுப்பிக்க வருடாந்திர அறிக்கையை உற்பத்தியாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

புதுப்பிப்பதற்கான சான்றிதழ்களை தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறை சரிபார்க்க வேண்டும்.

மேல்முறையீடு

சான்றிதழ் மறுப்பு, தடைவிதிப்படி போன்றவற்றிற்கு எதிராக பதிவு செய்த உற்பத்தியாளர் மேல் முறையீடு செய்யலாம்.

அறிக்கையில் குறிப்பிட்ட நாளில் (அ) 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு அதிகாரிகளின் முடிவை கடைசி முடிவாகும்.

 

8.அங்கக சான்றளிப்பிற்காக தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையின் விதிமுறைகள்

தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையின் விதிமுறைகளை பதிவிளக்கம் செய்தல்
மேலும் விபரங்களுக்கு
இயக்குநர்,
அங்கக சான்றளிப்புத் துறை, 1424 A, தடாகம் சாலை, ஜி.சி.டி. அஞ்சல்
கோயமுத்தூர் – 641 013, தமிழ்நாடு, இந்தியா
தொலைபேசி: 0091 422 2432984, தொலைபிரதி: 0091 422 2457554,
மின்னஞ்சல்: [email protected], வலைத்தளம்: www.tnocd.net