Category: Organic Agriculture

உலகுக்கே சோறு ஊட்டலாம்

உலகுக்கே சோறு ஊட்டலாம்

விழித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே..
நீங்கள் விழித்தால் மீண்டும் உலகுக்கே சோறு ஊட்டலாம்…

மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு நெல் ரகம்…

இந்த அரிசியை சாப்பிட்டால் சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை!

தமிழகத்தில் வழக்கொழிந்து போன ஆயிரம்,
ஆயிரம் தமிழ் பாரம்பரிய நெல் ரகங்கள்.

‘‘ஒசுவக்குத்தாலை,
சிவப்புக்குடவாழை,
வெள்ளையான்,
குருவிகார்,
கல்லுருண்டை,
சிவப்பு கவுணி,
கருடன் சம்பா,
வரப்புக் குடைஞ்சான்,
குழியடிச்சம்பா,
பனங்காட்டுக் குடவாழை,
நவரா,
காட்டுயானம்,
சிறுமணி,
கரிமுண்டு,
ஒட்டடையான்,
சூரக்குறுவை…

இதெல்லாம் நம்ம தமிழ் பாரம்பரிய நெல் ரகங்கள்.

இந்த மாதிரி ஆயிரக்கணக்கான ரகங்களை பிலிப்பைன்ஸுக்கும், அமெரிக்காவுக்கும் கொண்டு போயிட்டாங்க.

இன்னைக்கு உள்ள விவசாயிகளுக்கு இதோட அருமையெல்லாம் தெரியாது.
ஒவ்வொரு நெல்லுமே ஒவ்வொரு மருந்து.

மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு ரகம்… சாப்பிட்டா சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை!

கவுணி அரிசி நாள் பட்ட புண்ணை எல்லாம் ஆற்றும்.

கருங்குறுவை, யானைக்காலை குணமாக்கும்.

பால்குடவாழையில சமைச்சுச் சாப்பிட்டா குழந்தை பெத்த பெண்களுக்கு பால் நல்லா ஊறும்.

தங்கச் சம்பாவை தங்க பஸ்பம்னே சொல்வாங்க.
( தங்கமே தங்கம் பாடலில் வருவதுதான்)

புயல், மழை, வெள்ளம், வறட்சி எல்லாத்தையும் தாங்கி வளர்ற ரகங்கள் ஏராளம் இருக்கு.

விதைச்சு விட்டுட்டா அறுவடைக்குப் போனா கூட போதும்.

கடற்கரையோர உப்பு நிலத்துக்கு ஒசுவக்குத்தாலை,
சிவப்புக்குடவாழை,
பனங்காட்டுக் குடவாழை.

மானாவாரி நிலங்கள்ல குறுவைக் களஞ்சியத்தையும், குருவிக்காரையையும் போட்டா காடு நிறையும்.

காட்டுப் பொன்னியை தென்னை, வாழைக்கு ஊடுபயிரா போடலாம்.

வறட்சியான நிலங்களுக்கு காட்டுயானம்,

தண்ணி நிக்கிற பகுதிகளுக்கு சூரக்குறுவை,
இலுப்பைப்பூ சம்பா…

இப்படி நுணுக்கம் பார்த்துப் போடணும்.

வரப்புக்குடைஞ்சான்னு ஒரு ரகம்… ஒரு செலவும் இல்லை. விளைஞ்சு நின்னா வரப்பு மறைஞ்சு போகும்.

இதையெல்லாம் இன்னைக்கு இழந்துட்டு நிக்கிறோம்.

விவசாயம் நசிஞ்சதுக்கு காவிரிப் பிரச்சனை மட்டும்தான் காரணம்னு சொல்றாங்க.

அது உண்மையில்லை.
விவசாயிகளோட மனோபாவமும் காரணம்.

எந்த மண்ணுக்கு எந்த நெல்லைப் போடணும், எப்போ போடணும்னு கணக்குகள் இருக்கு.

அதை எல்லாரும் மறந்துட்டாங்க..

புது தொழில் நுட்பம்னு சொல்லி நிலத்தை நாசமாக்கிட்டாங்க.

நம்ம இயற்கை தமிழ் விவசாயத்தை அழிச்சு, உரத்தையும் பூச்சிமருந்தையும் நம்ம மண்ணுல கொட்டுன நாடுகள், இப்போ இயற்கை விவசாயம் பண்றாங்க.

உலகத்துக்கே கத்துக் கொடுத்த தமிழர்கள் இன்று தொழில்நுட்பத்தைக் கடன் வாங்குறோம்.

திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள கட்டிமேட்டில், பழமையான ஆதிரெங்கன் கோயிலை ஒட்டியிருக்கிறது ஜெயராமனின் குடில். குடிலைச் சுற்றிலும் பச்சைப் பசேலென உடல் விரித்துக் கிடக்கிறது வயற்காடு. தழைத்து நிற்கிற அத்தனையும் தமிழ் பாரம்பரிய ரகங்கள்.

இவர் ஒரு நாடோடியைப் போல அலைந்து திரிகிறார் தமிழரான நெல் ஜெயராமன்.

வயற்காடுகளையும், விவசாயிகளையும் தேடி அவரது பயணம் நீண்டுகொண்டே இருக்கிறது.

தமிழகத்தில் வழக்கொழிந்து போன 10 ஆயிரம் தமிழ் பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்டு, தமிழக விவசாயத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதுதான் அவரது இலக்கு.

படித்தது பத்தாம் வகுப்புதான். ஆனால் ஒரு பேராசிரியரின் தெளிவோடு விவசாயமும், விஞ்ஞானமும் பேசுகிறார்.

தமிழ் பாரம்பரிய நெல் சாகுபடி பற்றி பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பயிற்சி அளிப்பதோடு, விவசாயிகளுக்கு தமிழ் பாரம்பரிய விதைகளை இலவசமாகவும் வழங்குகிறார்.

வழக்கொழிந்து போன 63 நெல் ரகங்களை மீட்டு, வயற்காட்டுக்கு கொண்டு வந்த இவர், ‘ தமிழ் விதை வங்கி’ ஒன்றையும் நடத்துகிறார்.

அரசாங்கம் ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய ஏக்கருக்கு 30 கிலோ விதையைப் பரிந்துரைக்கிறது.

ஆனால் தமிழர் செயராமன் வெறும் 240 கிராம் போதும் என்கிறார்.

‘‘ஒவ்வொரு வருஷமும் மே மாதம் கடைசி சனி, ஞாயிறுகளில் எங்க குடிலுக்குப் பக்கத்தில நெல் திருவிழா நடக்கும்.

நெல் உற்பத்தி முதல் விற்பனை வரை உள்ள பிரச்னைகள் பற்றி விவாதிப்போம்.

தமிழ் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி பண்ற பயிற்சிகளும் தருவோம். நிகழ்ச்சியோட இறுதியில், ஒரு விவசாயிக்கு ரெண்டு கிலோ வீதம் தமிழ் பாரம்பரிய விதைகளைக் கொடுப்போம்.

ஒரே ஒரு கண்டிஷன். 2 கிலோ விதையை வாங்கிட்டுப் போறவங்க, அதை சாகுபடி பண்ணி அடுத்த வருஷம் நாலு கிலோவா தரணும்.

இந்த வருஷம் நடந்த நெல் திருவிழாவுல 1860 விவசாயிகளுக்கு விதை கொடுத்திருக்கோம்’’ என வியக்க வைக்கிறார் தமிழர் ஜெயராமன்.

இதைத்தான் பழங்கால தமிழர்கள் சோழர் காலத்திலயும் செஞ்சிருக்காங்க.

இவர்களை போன்றவர்களை அரசு உக்குவிக்காது, பாராட்டாது.

கடந்த ஆண்டு இதே நாள் எனது மகள் Gowri Madhu பாரம்பரிய அரிசி வகைகள்,சிறு தானியங்கள், தூய மஞ்சள்,தானியங்கள்,நாட்டு சர்க்கரை போன்ற பலதரப்பட்ட வகைகளை 100 சதவீதம் ரசாயனம் ஏதும் இன்றி மக்களுக்கு பயன் பட வேண்டி தொடங்கினாள்.

“உரல்” என்ற பெயரில் ஓர் ஆண்டில் வலம் வரத் தொடங்கி உள்ளது.

பசுமை நினைவுடன்…

நீங்களாவது பகிருங்கள்.
அனைவரும் அறிய உதவுங்கள்.

கத்தரியில் புழுக்களற்ற காய்கள்

கத்தரியில் புழுக்களற்ற காய்கள் brinjal-eggplant-agriwiki

கத்தரியில் புழுக்களற்ற காய்கள்,பூச்சிகளிடமிருந்து முழு விடுதலை கிடைக்க ஏரிக்கருவேல மரம் அல்லது கருவேல மரப் பட்டையினை உரித்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்,

Continue reading

பல தானிய விதைப்பு

பல தானிய விதைப்பு
பல விதமான பயிர்களை விதைத்து 60-70 நாட்கள் வளர்ந்து பூ பூத்த பிறகு மடக்கி உழுது மண்ணை வளமாக்கலாம். இவற்றின் இலைகள், தண்டு, வேர்களில் உள்ள நுண்ணூட்டங்கள் மண்ணில் சேர்ந்து மண்ணை வளமாக்குகிறது. மேலும் மக்கியபின் எருவாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது. பல விதமான செடிகளின் வேர்களில் உருவாகும் நுண்ணுயிர்களும் நாம் பயிரிடப்போகும் பயிர்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்து கொடுப்பதற்கு உதவி செய்கிறது. கீழ்க்காணும் விதைகளை எல்லாம் கலந்து ஒரு ஏக்கருக்கு 25 கிலோ வரை எடுத்துக் கொள்ளலாம். மேலும் பல தானிய விதைப்பு இரண்டு முறைகளில் செய்யலாம்.

பல தானிய விதைப்பு 1
ஒரு ஏக்கருக்கு 25 கிலோ வரை எடுத்துக்கொள்ளலாம்.
தானியங்கள்
∙ மக்கா சோளம் 4 கிலோ ∙ கேழ்வரகு 200 கிராம்
∙ கம்பு 500 கிராம் ∙ சோளம் 1 கிலோ
பயறு வகைகள்
∙ பச்சை பயறு 1 கிலோ ∙ தட்டை பயிறு 2 கிலோ
∙ கொள்ளு 500 கிராம் ∙ துவரை 3 கிலோ
∙ உளுந்து 500 கிராம்
எண்ணெய் வித்துக்கள்
∙ நிலக்கடலை 3 கிலோ ∙ ஆமணக்கு 2 கிலோ
∙ எள்ளு 100 கிராம் ∙ சூரியகாந்தி 1.5 கிலோ
உரச்செடிகள்
∙ சணப்பு 1 கிலோ ∙ தக்கபூண்டு 1.5 கிலோ
∙ அகத்தி 1 கிலோ ∙ நரிப் பயறு 500 கிராம்
வாசனை பொருட்கள்
∙ கடுகு 500 கிராம் ∙ வெந்தயம் 500 கிராம்
∙ மல்லி 500 கிராம் ∙ சீரகம் 300 கிராம்
மேலே குறிப்பிட்ட பல விதைகளில் ஒரு சில விதைகள் கிடைக்காத போது பின் வரும் விதைகளையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு 25 கிலோ வருமாறு விதைக்கவும்.
தானியங்கள்
∙ கோதுமை 2 கிலோ ∙ நெல் 2 கிலோ
∙ சாமை 200 கிராம் ∙ தினை 200 கிராம்
∙ குதிரை வாலி 200 கிராம் ∙ பனி வரகு 200 கிராம்
பயறு வகைகள்
∙ காராமணி 200 கிராம்
வாசனை பொருட்கள்
∙ சோம்பு 100 கிராம் ∙ மிளகாய் 50 கிராம்
உரச் செடிகள்
∙ அவுரி 1 கிலோ ∙ செம்பை 1 கிலோ
இதரவை
∙ புளிச்ச கீரை 100 கிராம் ∙ தண்டு கீரை 50 கிராம்
∙ அரகீரை 50 கிராம்
கவனிக்க வேண்டியவை
∙ பெரிய விதைகளை சிறிது சிறிதாக கலந்து கலக்கி பின்பு மொத்தமாக ஒரு முறை கலக்க வேண்டும்
∙ விதைக்கும் போது பெரிய விதைகளை ஒன்றாக விதைத்து பின்பு சிறிய விதைகளை மணல் அல்லது சாம்பல் கலந்து விதைக்க வேண்டும்
∙ ஏக்கருக்கு 25 கிலோ பலதானியமும் அதற்கு மேல் தங்களிடம் உள்ள பழைய விதைகளையும் சேர்த்து விதைக்கலாம்.
∙ மண் வளம் குறைந்து காணப்பட்டால் ஒரு ஏக்கருக்கு 30 முதல் 40 கிலோ வரையிலும் விதைக்கலாம்

பல தானிய விதைப்பு 2
ஆரம்பத்தில் ரசாயன விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறுவோர் கட்டாயம் பலதானிய விதைப்பு செய்ய வேண்டும். பல வருடங்கள் ரசாயன விவசாயம் செய்ததால் மண்ணில் நுண்ணுயிர்கள் மடிந்து நுண்ணூட்ட சத்து குறைந்து இருக்கும். நுண்ணுயிர்களையும், நுண்ணூட்டங்களையும் மீட்டெடுக்க இந்த பல தானிய விதைப்பு பயன்படும். ஏனென்றால் பலதானியங்களின் வேர்களில் பலவகையான நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன. மேலும் அதை மடக்கி உழும் போது அதன் வேர், தண்டு, இலைகளில் உள்ள நுண்ணுட்டச் சத்துக்கள் நிலத்திற்கு கிடைக்கின்றன. பலதானியங்களை மூன்று முறை வெவ்வேறு காலங்களில் விதைத்து மடக்கி உழவு செய்ய வேண்டும். முதல் முறை விதைத்து 21வது நாளிலும், இரண்டாம் முறை விதைத்து 42வது நாளிலும், மூன்றாவது முறை விதைத்து 63வது நாளிலும் மடக்கி உழவு செய்ய வேண்டும். இவ்வாறு 21, 42, 63 ஆகிய காலங்களில் மடக்கி உழவு செய்யும் போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையான நுண்ணூட்டங்கள் மண்ணுக்கு கிடைக்கின்றன.
முதல் விதைப்பு
∙ ஏற்கனவே குறிப்பிட்ட அளவுகளில் ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 கிலோ வரை பலதானியம் விதைக்க வேண்டும்.
∙ 21ம் நாள் மடக்கி உழவு செய்ய வேண்டும்
இரண்டாவது விதைப்பு
∙ முதல் விதைப்பு மடக்கி உழவு செய்யும் அன்றே இரண்டாவது விதைப்பு விதைக்க வேண்டும்
∙ விதைத்த 42 வது நாள் மடக்கி உழவு செய்ய வேண்டும்
மூன்றாவது விதைப்பு
∙ இரண்டாவது விதைப்பு மடக்கி உழவு செய்யும் அன்றே மூன்றாவது விதைப்பு விதைக்க வேண்டும்
∙ விதைத்த 63 வது நாள் மடக்கி உழவு செய்ய வேண்டும

கால்காணி சாத்தியமே-உணவுத் தேவையை 33சென்ட் நிலத்தில் பூர்த்தி செய்யலாம்

கால்காணி சாத்தியமே-உணவுத் தேவையை 33சென்ட் நிலத்தில் பூர்த்தி செய்யலாம் plenty-for-all

ஒரு குடும்பத்தின் உணவுத் தேவையை 33சென்ட் நிலத்தில் பூர்த்தி செய்யலாம் என ஜே.சி.குமரப்பா கூறியுள்ளார். சாத்தியமா?

என நண்பர்களிடம் பல குழுக்கள் மற்றும் முகநூல் வாயிலாக கேட்டேன் அதன் மூலமாக பல தகவல்கள் கிடைத்தன… சில தகவல்களை பகிர்கிறேன்…

1) சாத்தியம். 1 சென்ட் 436 அடி 33 சென்ட் x 436 அடி = 14,388.00 அடி. 1/3rd of an acre.

5 அடுக்கு முறையில் 36 x 36 அடி = 1296.00 அடி.

Continue reading

பட்டம் என்பது காலநிலை

பட்டம் என்பது காலநிலை

இதில் பட்டம் என்பது காலநிலையை குறிப்பிடுவதாகும்.

காலநிலையைப்பொறுத்து விவசாயம் செய்வது, நமது மரபு விவசாயத்தில் மிகவும் முக்கியமானது.

மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம், ஆடிப்பட்டம் என்று தமிழ் மாதங்களைக் கணக்கிட்டு பட்டத்திற்கு ஏற்றவாறு விதைக்கவேண்டும்.

வருடத்தில் எந்தெந்தப் பட்டத்தில் என்னென்ன செடிகள் விதைக்க வேண்டுமோ, அந்தந்தப்பட்டத்தில் அந்தந்த செடிகளை விதைப்பார்கள்.

பட்டம் பார்த்து விதைப்பதன் மூலம் இயற்கையாகவே பூச்சிகளைக்கட்டுப்படுத்தலாம். விளைச்சலும் மிக அருமையாக இருக்கும்.

பிப்ரவரி – (தை,மாசி) : கத்திரி,தக்காளி,மிளகாய்,பாகல்,வெண்டை,சுரை,கொத்தவரை,பீர்க்கங்காய், கீரைகள்,கோவைக்காய்.

மார்ச் – (மாசி,பங்குனி) : வெண்டை,பாகல்,தக்காளி, கொத்தவரை, பீர்க்கங்காய், கோவைக்காய்.

ஏப்ரல் – (பங்குனி, சித்திரை) : செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை.

மே – (சித்திரை,வைகாசி) :செடி முருங்கை, கொத்தவரை, கத்திரி, தக்காளி.

ஜூன் – (வைகாசி, ஆனி) : வெண்டை,கத்திரி, தக்காளி, கோவை,பூசணிக்காய், கீரைகள்.

ஜூலை – (ஆனி,ஆடி): மிளகாய், பாகல்,சுரை,பூசணி,பீர்க்கங்காய், முள்ளங்கி, வெண்டை,தக்காளி, கொத்தவரை.

ஆகஸ்டு – (ஆடி,ஆவணி): மிளகாய், பாகல்,சுரை,பீர்க்கங்காய், முள்ளங்கி, வெண்டை.

செப்டம்பர் – (ஆவணி,புரட்டாசி ): செடிமுருங்கை,கத்திரி, பீர்க்கங்காய்,பூசணி, முள்ளங்கி,கீரைகள்.

அக்டோபர் – (புரட்டாசி,ஐப்பசி ): செடிமுருங்கை,கத்திரி, முள்ளங்கி.

நவம்பர் – (ஐப்பசி,கார்த்திகை ): செடிமுருங்கை,கத்திரி, முள்ளங்கி,தக்காளி, பூசணி.

டிசம்பர் – (கார்த்திகை,மார்கழி ): கத்திரி, சுரை,மிளகாய் முள்ளங்கி,தக்காளி, பூசணி.

வாழை சாகுபடி டிப்ஸ் – II

வாழை சாகுபடி டிப்ஸ் – II

பழுக்காத வாழை இலையை பெரிய கலனில் / பாத்திரத்தில் இட்டு, ஊதுபத்தி கொளுத்தி அதன் மூடியை போட்டுவிட்டால், 12 மணி நேரத்திற்குள் பழுத்துவிடும்.
விரைவில் வாழைக் குலையை பழுக்க வைக்க, சுண்ணாம்பு கரைசலை அதன் மீது தெளித்தால் போதும்.
இலகுவாக பழுக்க வைக்க, குலைகளில் ஆங்காங்கு வேப்பிலையைச் சொருகினால் போதுமே.

Continue reading